Thiruvallur

News December 12, 2024

வெள்ள அபாய எச்சரிக்கை

image

பூண்டி ஏரியில் 1,000 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளதால், முதல்கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கொசஸ்தலையாற்றின் கரையோரமாக இருக்கும் நம்பாக்கம், கிருஷ்ணாபுரம், ஆட்ராம்பாக்கம், ஒதப்பை, எறையூர், தாமரைப்பக்கம், திருக்கண்டலம், ஆத்தூர், சீமாவரம், இடையான்சாவடி, மணலி, மணலி புதுநகர், எண்ணூர், சடையன்குப்பம் ஆகிய பகுதி மக்கள் எச்சரிக்கையுடன் இருங்கள். ஷேர் பண்ணுங்க

News December 12, 2024

விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டம் 

image

திருவள்ளூர் மாவட்டத்தில் வருவாய் கோட்ட அளவில் விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டம்  நாளை காலை 10 மணிக்கு திருவள்ளூர், திருத்தணி, பொன்னேரி ஆகிய வருவாய் கோட்ட அலுவலகங்களில் நடைபெறும் என மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர் அறிவித்துள்ளார். மேலும் அனைத்து விவசாயப் பெருமக்களும் விவசாயம் தொடர்பாக தங்களுக்கும் தங்கள் பகுதிகளில் ஏற்படும் குறைகளுக்கும் தீர்வுகான கலந்து கொள்ளுமாறு தெரிவித்துள்ளார்.

News December 12, 2024

திருவள்ளூர் மாவட்டத்தில் கனமழை தொடரும்

image

வங்கக்கடலில் நிலவியுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக, திருவள்ளூரில் நேற்று முதல் கனமழை பெய்து வருகிறது. விடிய விடிய கொட்டித் தீர்த்த கனமழையால், பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தாழ்வான இடங்கள் மற்றும் சாலைகளில் மழைநீர் தேங்கும் என்பதால், பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருங்கள். நேற்று பெய்த கனமழை மீண்டும் தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. உங்க ஏரியாவில் மழையா?

News December 12, 2024

திருவள்ளூரில் பள்ளிகளுக்கு விடுமுறை

image

தொடர் கனமழை காரணமாக திருவள்ளூரில் இன்று (டிச.12) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. வங்கக்கடலில் நிலவியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக, திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று முதல் பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது. இதையடுத்து, மாணவர்களின் பாதுகாப்பு நலன் கருதி திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவித்து ஆட்சியர் தெரிவித்துள்ளார். ஷேர் பண்ணுங்க

News December 11, 2024

2,79,200 கால்நடைகளுக்கு தடுப்பூசி போட இலக்கு

image

திருவள்ளுர் மாவட்டத்தில் தகுதி வாய்ந்த 2,79,200 கால்நடைகளுக்கு கோமாரி நோய்த் தடுப்பூசி போட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தேசிய கால்நடை நோய்த் தடுப்பூசித் திட்டத்தின் கீழ் ஆறாம் சுற்று கோமாரி நோய் தடுப்பூசி போடும் முகாம் டிச.16-ம் தேதி தொடங்கப்பட்டு ஜன.5-ம் தேதி வரை இம்முகாம் நடைபெறவுள்ளது. உரிமையாளர்கள் கால்நடைகளுக்கு தடுப்பூசியை தவறாமல் போட்டுக் கொள்ள வேண்டும் மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

News December 11, 2024

இராணுவ முன்னாள் படைவீரர்கள் குறைதீர்க்கும் கூட்டம்

image

திருவள்ளூர் மாவட்ட முன்னாள் படைவீரர்கள், சார்ந்தோர்களுக்கு குறைதீர்க்கும் நாள் கூட்டம் டிச.13-ம் காலை 8 மணி முதல் மாலை 5 வரை ஆட்சியர் அலுவலக வளாகத்தில் ராணுவ ஓய்வூதியம் குறைதீர் தீர்ப்பாயத்தினர் குழுவானது முகாமிட்டு பணி ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம் விரைவில் அனுமதிக்கவும் உயிர் சான்று சமர்பிக்கவும் ஏற்பாடுகள் செய்துள்ளனர். இராணுவ ஓய்வூதியம் பெறுவோர் பயனடையுமாறு மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

News December 11, 2024

திருவள்ளூர் மாவட்டத்தில் கனமழைக்கு வாய்ப்பு

image

தமிழகத்தில் இன்று 18 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று இரவு 7 மணி வரை இடி, மின்னலுடன் மழை பெய்யக்கூடும் என தெரிவித்துள்ளது. அதற்கான ஆரஞ்சு எச்சரிக்கையும் விடுத்துள்ளது. உங்களுடைய பகுதிகளில் மழை பெய்தால் தெரிவிக்கவும்.

News December 11, 2024

திருவள்ளூரில் கனமழைக்கு வாய்ப்பு

image

தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பூமத்திய ரேகையை ஒட்டிய, கிழக்கு இந்திய பெருங்கடல் பகுதிகளில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக, இன்று திருவள்ளூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

News December 10, 2024

திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

image

திருவள்ளூர் மாவட்டத்தில் வருவாய் கோட்ட அளவில் விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டம் டிச.13ஆம் தேதி காலை 10மணிக்கு திருவள்ளூர், திருத்தணி, பொன்னேரி ஆகிய வருவாய் கோட்ட அலுவலகங்களில் நடைபெறும் என மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர் அறிவித்துள்ளார். மேலும் அனைத்து விவசாயப் பெருமக்களும், விவசாயம் தொடர்பாக தங்களுக்கும் தங்கள் பகுதிகளில் ஏற்படும் குறைகளுக்கும் தீர்வுகான கலந்து கொள்ளுமாறு தெரிவித்துள்ளார்.

News December 10, 2024

திருவள்ளூர் அருகே மின்சாரம் தாக்கி பெண் பலி 

image

பொன்னேரி அடுத்த திருப்பாலைவனம் பஜாரில் இட்லி, தோசை மாவு அரைக்கும் கடை நடத்தி வருபவர் வெண்ணிலா (46). நேற்று இரவு வாடிக்கையாளர்களுக்கு மாவு அரைத்து கொடுத்துவிட்டு கிரைண்டரில் தண்ணீர் ஊற்றி கழுவிய போது மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டவரை பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுபரிசோதித்ததில் மருத்துவர்கள் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து திருப்பாலைவனம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

error: Content is protected !!