India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தெற்கு அந்தமான் கடல் பகுதியில் நிலை கொண்டு இருந்த வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மேற்கு நோக்கி நகர்ந்து காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக உருவாகியுள்ளது. இதன் காரணமாக டெல்டா மாவட்டங்களில் இன்று (16ம்தேதி) நள்ளிரவில் மழை பெய்யத் தொடங்கி அதிகாலையில் தீவிரம் அடையத் தொடங்கும் என்றும், அதன் தொடர்ச்சியாக நாளை மறுதினம் திருவள்ளூரில் மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
கும்மிடிப்பூண்டி ஜி.என்.டி சாலையில் கடந்த 16ஆம் தேதி, நெடுஞ்சாலை துறை அதிகாரிகள், போக்குவரத்திற்கு இடையூறாக இருந்த சாலையோர கடைகளை அகற்றினர். தொடர்ந்து, சாலையோரம் கடை நடத்தி வந்த நரிகுறவர்கள் தங்களுக்கு முறையான கடைகள் ஒதுக்கப்படவில்லை என பேரூராட்சி நிர்வாகத்தின் மீது புகார் தெரிவித்தனர். இந்த நிலையில் கடைகளை அகற்ற வந்த நெடுஞ்சாலை துறையினருக்கும், நரிக்குறவர் இன பெண்களுக்கும் இன்று தகராறு ஏற்பட்டது.
திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் சமுதாய நல்லிணக்கத்திற்கான ‘கபீர் புரஸ்கார்’ விருது, ஒவ்வொரு ஆண்டும், குடியரசு தினத்தன்று வழங்கப்படும். நடப்பு ஆண்டிற்கான, ‘கபீர் புரஸ்கார்’ விருதுக்கு, சமுதாய நல்லிணக்க செயல் புரிந்தோர் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பத்தினை இன்றுக்குள் , https://awards.tn.gov.in என்ற இணையதளத்தில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
திருவள்ளூர் அடுத்த புழல் மத்திய சிறையில் வெடிகுண்டு வைத்திருப்பதாக சென்னை காவல் கட்டுப்பாட்டு அறைக்கு மர்ம நபர் மிரட்டல் விடுத்துள்ளார். இதனையடுத்து, வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் மோப்பநாய் உதவியுடன் புழல் சிறைக்குள் காவல்துறையினர் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். செல்போன் சிக்னல் மூலம் மிரட்டல் விடுத்த நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
திருத்தணி முருகர் கோவிலில் காலாவதியான பஞ்சாமிர்தம் விற்பனை செய்வதாக இந்து சமய அறநிலை துறை ஆணையர் அலுவலகத்திற்கு பக்தர்கள் புகார் தெரிவித்தனர். இதையடுத்து, இன்று திருத்தணி கோவிலில் இணை ஆணையர் ரமணி பஞ்சாமிர்தம் விற்கப்படும் கடைகளில் சோதனை நடத்தினார். அப்போது, பஞ்சாமிர்தம் கெட்டு போய் இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து, மொத்தம், 50 கிலோ பஞ்சாமிர்தம் டப்பாக்களை பறிமுதல் செய்தனர்.
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 9 வட்டங்களிலும், குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், நீக்கல், முகவரி மாற்றம் தொடர்பான குறைதீர் முகாம் இன்று வட்ட அளவில், வட்ட வழங்கல் அலுவலகங்களில் நடைபெற உள்ளது. மேற்படி, இந்த குறைதீர் முகாமில் மின்னணு குடும்ப அட்டையில் திருத்தங்கள் மற்றும் புகைப்படம் பதிவு செய்தல் தொடர்பான விண்ணப்பங்களை உரிய ஆவணங்களுடன் அளித்து பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 9 வட்டங்களிலும், குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், நீக்கல், முகவரி மாற்றம் தொடர்பான குறைதீர் முகாம் நாளை வட்ட அளவில், வட்ட வழங்கல் அலுவலகங்களில் நடைபெற உள்ளது. மேற்படி, இந்த குறைதீர் முகாமில் மின்னணு குடும்ப அட்டையில் திருத்தங்கள் மற்றும் புகைப்படம் பதிவு செய்தல் தொடர்பான விண்ணப்பங்களை உரிய ஆவணங்களுடன் அளித்து பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
திருவள்ளூர் மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று மழை பெய்தது நேற்று காலை 6 மணி முதல் இன்று காலை 6 மணி வரை அதிகபட்சமாக ஆவடியில் 215மி.மீ. திருத்தணி 170மி.மீ. ஜாமின் கொரட்டூர் 143 மி.மீ. பூந்தமல்லி 142.5மி.மீ. திருவாலங்காடு 131 மி.மீ. திருவள்ளூர் 124.5 மி.மீ. பூண்டி94 மி.மீ. பதிவாகியுள்ளது. மேலும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பதிவாகியுள்ளது.
குறைந்த காற்றழுத்த தாழ்வு காரணமாக திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று கனமழை பெய்த நிலையில் பள்ளிக்கு விடுமுறை அறிவித்து இருந்த நிலையில் திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று வழக்கம் போல் பள்ளி கல்லூரிகள் இயங்கும் எனினும் சில பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளதால் சூழலுக்கு அற்ப பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் டாக்டர் பிரபு சங்கர் அறிவிப்பு.
பூந்தமல்லி மற்றும் அதன் சுற்று வட்டாரப்பகுதிகளில், காலை முதல் கனமழை வெளுத்து வாங்கியது. இதன் காரணமாக, வட்டாட்சியர் அலுவலகத்தை மழை வெள்ளம் சூழ்ந்தது. இதன் காரணமாக, மக்கள் முழங்கால் அளவு தண்ணீரில் நடந்து, வட்டாட்சியர் அலுவலகத்திற்கு வரும் நிலை ஏற்பட்டது. இதேபோன்று, பூந்தமல்லி நகராட்சிக்கு உட்பட்ட அம்மான் நகர், அம்பேத்கர் நகர் ஆகிய பகுதிகளில் குடியிருப்புகளை மழை நீர் சூழ்ந்துள்ளது.
Sorry, no posts matched your criteria.