Thiruvallur

News December 20, 2024

ரயில் சேவை பாதிப்பு: பயணிகள் அவதி

image

சென்னை எண்ணூர் – அத்திப்பட்டு இடையே உள்ள உயர் மின்னழுத்த கேபிள் பழுதானதால் அவ்வழித்தடத்தில் ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, சென்னையில் இருந்து கும்மிடிப்பூண்டி செல்லும் மின்சார ரயில்கள் மற்றும் விரைவு ரயில்கள் அனைத்தும் எண்ணூரில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதனால் பயணிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். ரயில்வே ஊழியர்கள் பழுதை சீர் செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ஷேர் பண்ணுங்க

News December 20, 2024

திருவள்ளூரில் விடிய விடிய மழை

image

தென்மேற்கு வங்கக் கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, ஆந்திர கடலோரப் பகுதிகளை நோக்கி நகர்கிறது. இதனால், திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்றிரவு முதல் மழை பெய்து வருகிறது. கும்மிடிப்பூண்டி, பொன்னேரி, மீஞ்சூர், திருத்தணி, சோழவரம், கவரைப்பேட்டை, ஆரணி, கொசவன்பேட்டை, மேட்டுப்பாளையம், சிறுவாபுரி, மெய்யூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்து வருகிறது. உங்க ஏரியாவில்?

News December 19, 2024

திருவள்ளூர் இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு

image

திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று இரவு 10.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.

News December 19, 2024

திருவள்ளூர் ஆட்சியர் அறிவிப்பு

image

திருவள்ளூரில் விருப்பக் கண்காட்சி மற்றும் விற்பனை செய்தல் டிச.,23 முதல் டிச.,29 வரை மாவட்ட பூமாலை வணிக வளாகத்தில் நடைபெற உள்ளது. இதில் பங்குபெற விருப்பமுள்ளவர்கள் விற்பனை பொருட்கள் பற்றிய விவரத்தினை டிச.,21 மாலை 5 மணிக்குள் 044 27664528, 9176099966, 9787368726 என்ற எண்ணை தொடர்பு கொண்டு பதிவு செய்து பயன்பெறுமாறு ஆட்சியர் பிரபுசங்கர் தெரிவித்துள்ளார்.

News December 19, 2024

உள்துறை அமைச்சரை கண்டித்து திமுகவினர் ஆர்ப்பாட்டம்

image

டாக்டர் அம்பேத்கரை உள்துறை அமைச்சர் அமீத்ஷா அவமரியாதையாக பேசியதாக கூறி அவரை கண்டித்து கும்மிடிப்பூண்டி பஜாரில் திமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் தலைமை தாங்கிய திருவள்ளூர் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் கும்மிடிப்பூண்டி எம்எல்ஏ டி.ஜெ.கோவிந்தராஜன் துவக்கி கண்டன உரையாற்றினார். ஆர்ப்பாட்டத்தில் திமுக மாவட்ட ஒன்றிய நகர நிர்வாகிகள் பங்கேற்றனர்.

News December 19, 2024

திருவள்ளூர் மாவட்டத்தில் பெய்த மழை பதிவு விவரம்

image

திருவள்ளூர் மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று முதல் கனமழை வெளுத்து வாங்கியது. அதன்படி கடந்த 24 மணி நேரத்தில், அதிகபட்சமாக பொன்னேரியில் 22 மி.மீ, கும்மிடிப்பூண்டி 18 மி.மீ, சோழவரத்தில் 8 மி.மீ, செங்குன்றத்தில் 13.6 மி.மீ, ஜமீன் கெரட்டுர் 8 மி.மீ மழை, பூந்தமல்லி 8.5 மி.மீ மழையும் பதிவாகியுள்ளது. மேலும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் மழை பதிவாகியுள்ளது

News December 19, 2024

திருவள்ளூருக்கு இன்று மழைக்கு வாய்ப்பு

image

தென்மேற்கு வங்கக் கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி, நேற்று (டிச.18) ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றது. இதனால் திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மாணவ, மாணவிகள் மற்றும் வேலைக்கு செல்வோர் சிரமம் அடைகின்றனர். மேலும், ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதால், பொதுமக்கள் பாதுகாப்பாக இருங்கள்.

News December 19, 2024

திருவள்ளூரில் சாரல் மழை

image

தென்மேற்கு வங்கக் கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி, நேற்று (டிச.18) ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றுள்ளது. இதனால் திருவள்ளூா் மாவட்டத்தில் கடம்பத்தூா், ஈக்காடு, தாமரைப்பாக்கம், பூண்டி, திருமழிசை, பட்டரைபெரும்புதூா், எல்லாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் சாரல் மழை பெய்ததால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினா். கடுங்குளிா் நிலவியதால் பொதுமக்கள் எங்கும் வெளியில் செல்ல முடியாமல் முடங்கினா்.

News December 18, 2024

மக்களிடம் குறைகளை கேட்ட எஸ்பி

image

திருவள்ளூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் வாரந்தோறும் புதன்கிழமைகளில் நடைபெறும் பொதுமக்கள் குறைதீர்வு கூட்டம், இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ரா.ஸ்ரீனிவாச பெருமாள் தலைமையில் நடைபெற்றது. இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

News December 18, 2024

எம்.பி. சசிகாந்த் செந்தில் பிளான்!

image

சென்னையின் ரயில் நெட்வொர்க்குகளின் நெரிசலைக் குறைக்க திருவள்ளூரில் புதிய கோச்சிங் டெர்மினல் நிறுவுவ வேண்டும். கும்மிடிப்பூண்டி – சென்னை மத்திய புறநகர்ப் பிரிவை மேம்படுத்த வேண்டும். வேகமான லூப் லைன்களை அறிமுகப்படுத்த வேண்டும். எக்ஸ்பிரஸ் மற்றும் டபுள் டெக்கர் எக்ஸ்பிரஸ் போன்ற முக்கிய விரைவு ரயில்களுக்கான நிறுத்தங்களை திருவள்ளூரில் நிறுத்த வேண்டும் என எம்.பி சசிகாந்த் செந்தில் கேட்டுக் கொண்டுள்ளார்.

error: Content is protected !!