Thiruvallur

News December 25, 2024

கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி சிறப்பு பிரார்த்தனை

image

திருவள்ளூரில் கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. இதில், திரளான கிறிஸ்தவர்கள் பங்கேற்றனர். கிறிஸ்தவர்களின் முக்கிய பண்டிகைகள் ஒன்றான கிறிஸ்துமஸ் நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் படி தருமபுரி மாவட்டத்தில் உள்ள அனைத்து தேவாலயங்களிலும் கிறிஸ்து பெருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. 

News December 24, 2024

திருவள்ளூர் இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு

image

திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று இரவு 10.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.

News December 24, 2024

ஆட்சியர் தலைமையில் ஆய்வு கூட்டம்

image

திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று (24.12.2024) மாவட்ட ஆட்சியர் டாக்டர் த.பிரபுசங்கர் இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் மாவட்ட அளவிலான மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, அரசு மருத்துவமனைகள் மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கான மாதாந்திர ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இந்த ஆய்வு கூட்டத்தில் பலர் கலந்து கொண்டனர்.

News December 24, 2024

ஆட்சியரிடம் மனு அளித்தார் எம்பி

image

அரசியலமைப்பின் தந்தை அம்பேத்கரை இழிவுபடுத்தி பேசிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை பதவி விலக வலியுறுத்தி இன்று காலை திருவள்ளூர் பேருந்து நிறுத்தத்தில் உள்ள அம்பேத்கர் சிலையிருந்து காங்கிரஸ் சார்பாக மாவட்ட ஆட்சியர் அலுவகம் வரை பேரணியாக சென்று இந்திய ஜனாதிபதி திரௌபதி முர்மு அவர்களுக்கு எழுதிய மனுவை திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கரிடம் திருவள்ளூர் எம்பி வழங்கினார்.

News December 24, 2024

திருவள்ளூரில் 423 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன

image

திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கத்தில் நேற்று நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் இராஜ்குமார் அவர்கள் பொதுமக்களிடமிருந்து 423 கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டு மேலும் மனுக்களின் மீது உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள சம்பந்தப்பட்டதுறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். இதில் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

News December 24, 2024

திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

image

திருவள்ளூர் மாவட்டத்தில் ஆதிதிராவிடர் நலக்குழு புதியதாக அமைக்க வேண்டி உள்ளதால் உறுப்பினர் தேர்வு செய்யும் பொருட்டு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலமக்களின் வளர்ச்சிக்காக பாடுபட விருப்பமுள்ள சமூக ஆர்வலர்கள், கல்வியாளர்கள் சுய விவரங்கள் அடங்கிய விண்ணப்பத்தினை மாவட்ட ஆதிதிராவிடர் பழங்குடியினர் அலுவலகத்தில் நாளைகுள் நேரடியாகவோ (அ) தபால் மூலமாகவோ மனு அளிக்குமாறு மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

News December 23, 2024

திருவள்ளூர் இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு

image

திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று இரவு 10.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.

News December 23, 2024

காட்டுப்பள்ளி துறைமுகத்தில் புயல் கூண்டு ஏற்றம்

image

வங்கக்கடலில் உள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள காட்டுப்பள்ளி துறைமுகத்தில் 3ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்ற வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது. மேலும், சென்னை, கடலூர், நாகை உள்ளிட்ட 7 துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்ற வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

News December 23, 2024

திருவள்ளூர் மாவட்ட காவல்துறை எச்சரிக்கை

image

திருவள்ளூர் காவல்துறை தனது சமூக வலைத்தளத்தில் கூறியுள்ளதாவது: போலியான இணையதளங்கள் மூலம் கிரிப்டோ முதலீடுகளைச் செய்ய மக்களை கவர்ந்திழுக்கும் விளம்பங்கள் மற்றும் குறுஞ்செய்திகளை நம்ப வேண்டாம். ஆரம்பத்தில் முதலீடுகள் சிறிய தொகையுடன் மெதுவாக தொடங்கலாம், ஆனால் பல லட்ச கணக்கில் மோசடி செய்து ஏமாற்றப்படுகிறது என எச்சரித்துள்ளது.

News December 23, 2024

திருவள்ளூர் மாவட்ட விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பு

image

திருவள்ளூர் மாவட்டத்தில் மாவட்ட அளவிலான விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டம் 27.12.2024 அன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் என மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர் அறிவித்துள்ளார். மேலும், அனைத்து விவசாயப் பெருமக்களும் விவசாயம் தொடர்பாக தங்களுக்கும், தங்கள் பகுதிகளில் ஏற்படும் குறைகளுக்கும் தீர்வுகான இக்கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

error: Content is protected !!