India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
வங்க கடலில் உருவாகி உள்ள மேலடுக்கு சுழற்சி காரணமாக வரும் இன்று முதல் ஜன.16ஆம் தேதி வரை தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. குறிப்பாக திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று முதல் 14 ஆம் தேதி வரை மழை பெய்யும். பொங்கல் விடுமுறை நாள்களில் மழை பெய்வது ஒன்றும் ஆச்சரியமான விஷயமல்ல. ஆனால், இந்த மழை ஒன்றும் உங்களது விடுமுறைக் காலப் பயணங்களை பாதிக்காது என எதிர்பார்க்கப்படுகிறது. ஷேர் செய்யுங்கள்
பள்ளிப்பட்டு வட்டம் ராமச்சந்திராபுரம் ஊராட்சியில் பேரூராட்சியுடன் இணைக்க கூடாது என்று சில நாட்களாக முன்பு வட்டாட்சியர் அலுவலகம் முன்பாக போராட்டம் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து இன்று ரேஷன் கடையில் பொங்கல் தொகுப்பு பரிசை வாங்க மறுத்து கிராமமக்கள் போரட்டத்தில் ஈடுபட்டனர். தமிழக முதல்வர் எங்களுடைய கோரிக்கையை உடனடியாக நிறைவேற்ற வேண்டும்.
கும்மிடிப்பூண்டி அடுத்த கண்ணன்கோட்டை ஊராட்சி மன்ற தலைவராக இருந்த கோவிந்தசாமியின் பதவி காலம் அண்மையில் முடிந்தது. பதவி காலம் முடிந்ததும் ஊராட்சி மற்றும் அதில் பணிபுரிபவர்களை பல தலைவர்கள் மறந்து விட்ட நிலையில் கண்ணன்கோட்டை முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் கோவிந்தசாமி ஊராட்சியில் பணிபுரிந்த தூய்மை காவலர்கள் மற்றும் குடிநீர் மேல்நிலைத் தொட்டி ஆபரேட்டர்களுக்கு பொங்கல் பரிசளித்தார்.
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மதுபான சில்லறை விற்பனை கடைகள் (டாஸ்மாக் கடைகள்), மற்றும் நட்சத்திர அந்தஸ்து ஓட்டலில் உள்ள மது கூடங்கள் அனைத்தும் வருகிற 15-ந் தேதி (புதன்கிழமை) திருவள்ளுவர் தினம் மற்றும் குடியரசு தினமான 26-ந் தேதி மூடவேண்டும். அன்றைய தினங்களில் மது விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் உத்தரவிட்டுள்ளார்.
திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று இரவு 10.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டு உள்ளனர். பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.
பூந்தமல்லியை அடுத்த குமணன்சாவடியில் உள்ள ஸ்ரீ சித்திபுத்தி உடனுறை ஸ்ரீ ஞான சுந்தர விநாயகர் கோயிலில் வெங்கடேசப் பெருமாள் சன்னதியில் வைகுண்ட ஏகாதசி முன்னிட்டு அதிகாலையில் சிறப்பு திருமஞ்சனம் செய்து சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சொர்க்கவாசல் வழியாக சென்று சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய வெங்கடேச பெருமாளை தரிசனம் செய்தனர்.
திருவள்ளூர் ஸ்ரீ வைத்திய வீரராகவர் கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு வைகுண்ட ஏகாதசி முன்னிட்டு திருவள்ளூர் நகரில் உள்ள ஸ்ரீ வைத்திய வீரராக பெருமாள் கோயிலில் இன்று காலை பக்தர்கள் முன்னிலையில் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி வெகு சிறப்பாக நடைபெற்றது. இதனை தொடர்ந்து வைகுண்ட ஏகாதசி முன்னிட்டு தனூர் மார்கழி மாதம் சொர்க்கவாசல் திறப்பு பக்தர்கள் முன்னிலையில் நடைபெற்றது.
திருவள்ளுர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று (09.01.2025) திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் டாக்டர்.த.பிரபு சங்கர் அவர்கள் தலைமையில் மக்களுடன் முதல்வர் மூன்றாம் கட்ட பணிகள் தொடர்பாகவும் முன்னேற்பாடுகள் குறித்து அனைத்துத்துறை அலுவலர்களுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. உடன் மாவட்ட வருவாய் அலுவலர் இராஜ்குமார் ,பல்வேறு அரசு துறை அலுவலர்கள் உள்ளனர்.
திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று இரவு 10.00 மணி முதல் நாளை காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டு உள்ளனர். பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.
திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று (09:01,2025) சட்ட ஒழுங்கு சாலை பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு ஆய்வு கூட்டம், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பான ஆய்வுக் கூட்டம். போதை பொருட்கள் தடுப்பு குறித்து ஒருங்கிணைப்பு குழு ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் பிரபுசங்கர் தலைமையில் நடைபெற்றது. உடன் மாவட்ட எஸ்பி சீனிவாச பெருமாள் கலந்து கொண்டார்.
Sorry, no posts matched your criteria.