India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று இரவு 10.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.
இன்று தமிழர்களின் திருநாள் தைப்பொங்கல் கொண்டாடப்பட்டு வரும் நிலையில் பலர் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் திருவள்ளூர் மாவட்ட காவல்துறை சார்பில் சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் எனப் பதிவிட்டுள்ளது.
திருவள்ளூர் எம்.பி.சசிகாந்த் செந்தில் தனது சமூக வலைத்தளத்தில் உழவு நமது தொழில் மட்டுமல்ல, பண்பாட்டு மரபு. தை முதல்நாள் உழைப்பின் திருநாளாக, தமிழர் பெருநாளாக உழவர்களைப் போற்றும் வகையில் ஆண்டுதோறும் பொங்கல் திருநாளைக் கொண்டாடி வருகிறோம். இந்த இனிய தமிழர் திருநாளில் எனதருமை தமிழ் சொந்தங்கள் அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் எனப் பதிவிட்டுள்ளார்.
திருத்தணி ஒன்றியம் கிருஷ்ணசமுத்திரம் கிராமத்தை சேர்ந்தவர் குருசாமி. இவரது மகள் பவித்ரா(23). இவர் தனியார் தொழிற்சாலையில் வேலை செய்து வந்தார். கடந்த சில மாதங்களாகவே இவர் தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. நேற்று முன்தினம் பவித்ரா வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று இரவு 10.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.
திருவள்ளுர் மாவட்ட பெருந்திட்ட வளாகத்தில் சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர்சா.மு.நாசர் இன்று பல்நோக்கு கூட்டரங்க கட்டடம் கட்டும் பணியினை துவக்கி வைத்து மாற்றுத்திறனாளி நலத்துறை சார்பில் 226 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.50,53,810 மதிப்பீட்டில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்கள். உடன் மாவட்ட ஆட்சித் தலைவர் பிரபுசங்கர், எம் எல் ஏ-க்கள் கலந்து கொண்டனர்.
திருவள்ளூர் மாவட்ட பெருந்திட்ட வளாகத்தில் இன்று சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் சா.மு.நாசர் பலநோக்கு கூட்டரங்கம் கட்டடம் கட்டும் பணியினை துவக்கி வைத்தார். உடன் மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் த. பிரபு சங்கர் இ.ஆ.ப. அவர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் வி.ஜி.ராஜேந்திரன் (திருவள்ளூர்), திரு எஸ் சந்திரன் (திருத்தணி) ஆகியோர் உள்ளனர்.
திருவள்ளூர் மாவட்டம் குமிடிப்பூண்டி அருகே கஞ்சா போதையில் 6 பேரை அரிவாளால் வெட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேவராஜ் என்வரின் தலைமையில் சிலர் அரி என்பவரை வழிமறித்து மிரட்டி செல்போனை பறித்துள்ளனர். தகவலறிந்து வந்த அரியின் உறவினர்கள் 6 பேரை தேவராஜ் மற்றும் அவரது நண்பர்கள் கஞ்சா போதையில் சரமாரியாக வெட்டியுள்ளனர். இதில் 3 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
போகி பாண்டியான இன்று வீட்டில் உள்ள பழைய பொருட்களை எரிப்பது வழக்கமாக உள்ளது. இதனால் கடும் காற்று மாசு ஏற்படுகிறது. இந்த போகிக்கு பழையன கழிதலும் புதியன புகுதலும் என்ற பெயரில் துணி, பிளாஸ்டிக் பொருட்களை எரிப்பதை விட பிழையனவாம் கோவம், வெறுப்பு களைந்து புதியனவாம் அன்பு, பாசம் வளர்ப்போம். தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க.
திருத்தணி மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் நேற்று பொன்பாடி சோதனைச்சாவடி அருகே திருப்பதியில் இருந்து மதுரை நோக்கி வந்த அரசு பேருந்தில் போலீசார் சோதனை மேற்கொண்டனர். அப்போது பேருந்தில் குமார் என்ற பயணியிடம் சோதனை செய்த போது 6 கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்தது. விசாரணையில் கஞ்சா கடத்தியவர் தேனி மாவட்டத்தைச் சேர்ந்த குமார் என்பது தெரியவந்தது. பின்னர் குமாரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
Sorry, no posts matched your criteria.