India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு வட்டம் கீளப்பூடி கிராமத்தில் அமைந்திருக்கும் ஸ்ரீராமர் கோவிலில் ஸ்ரீராமநவமியை முன்னிட்டு திருக்கல்யாண வைபவம் நிகழ்வு வெகு விமரிசையாக நடைபெற்றது. நேற்று மாலை காப்புக்கட்டுதல் வைபோவம் நடைபெற்றது. அதன்பின் ஸ்ரீராமபெருமாளுக்கும் அன்னை சீதைக்கும் ராஜ அலங்காரத்துடன் திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது
தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி மக்களவைத் தேர்தல் நடைபெற்றது. இந்நிலையில் திருவள்ளூர், பெருமாள்பட்டு கிராமத்தில் தனியார் பள்ளியில் உள்ள வாக்கு என்னும் மையத்தில் கலெக்டர் பிரபுசங்கர் இன்று (25/04/2024) பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அப்போது அரசு அதிகாரிகள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உடன் இருந்தனர்.
ஆந்திராவில் இருந்து திருத்தணிக்கு கஞ்சா கடத்துவதாக திருத்தணி போலீசாருக்கு நேற்று ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து எஸ்.பி ஸ்ரீனிவாச பெருமாள் உத்தரவின்படி தனிப்படை போலீசார் நேற்று திருத்தணி ரயில் நிலைய பகுதியில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஆந்திராவில் இருந்து ரயில் மூலம் 8 கிலோ கஞ்சா கடத்தி வந்த ஓம்பிரகாஷ் மற்றும் வாசு ஆகிய இருவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மீஞ்சூரில் உள்ள ரயில்வே கேட்டில் சமீப காலமாக மாலை ஆறு மணிக்கு மேல் கடும் போக்குவரத்து நெரிசல் உண்டாகிறது. ஒன்றரை மாதத்துக்கு முன்பாக மேம்பாலத்திற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்று பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது. இருப்பினும் இருசக்கர வாகனங்களினால் கடும் போக்குவரத்து நெரிசல் உண்டாகிறது. போக்குவரத்து நெரிசலை குறைக்க கூடுதலாக போலீசார் அமைக்க பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
சீன கப்பல் ஒன்று 22 மாலுமிகளுடன் இந்தோனேசியா துறைமுகத்தில் இருந்து நிலக்கரியை ஏற்றி கொண்டு அண்மையில் மீஞ்சூர் அடுத்த எண்ணூர் காமராஜர் துறைமுகத்திற்கு வந்தது. சீன கப்பலில் வந்த Gong-Yuwu (57) என்ற மாலுமி கப்பலில் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார் . கடந்த 6ம் தேதி இந்தோனேசியா துறைமுகத்தில் கப்பல் இருந்த போதே காணவில்லை என இந்தோனேசியா துறைமுகத்தில் புகார் அளித்த நிலையில் தற்போது சடலமாக மீட்கப்பட்டார்.
செங்குன்றம், ஜி.எல்.பி புறவழிச்சாலையில் பழைய பத்திரப்பதிவு அலுவலகம் அருகே தனியார் வங்கியின் ஏ.டி.எம் மையம் செய்யப்பட்டு வருகிறது. நேற்று நள்ளிரவு இந்த ஏ.டி.எம் மையத்திற்குள் புகுந்த மர்ம நபர் ஒருவர், ஏ.டி.எம் இயந்திரத்தை கல்லால் உடைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்டார். இதுகுறித்து விசாரணை நடத்திய செங்குன்றம் போலீசார் வடகரையை சேர்ந்த அலெக்ஸாண்டர் என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவள்ளூர் நகராட்சிக்கு உட்பட்ட ராஜாஜிபுரம், பூங்கா நகர், காக்களூர் ஊராட்சிகள் உள்ளது. இந்த பகுதிகளில் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இங்கிருந்து தினசரி ஏராளமானோர் அரசு, தனியார் நிறுவனங்களில் வேலைக்கு செல்கின்றனர். மினி பேருந்துகள் இயக்கினால் வேலைக்கு செல்கின்றவர்கள், மாணவ, மாணவிகள் என அனைவரும் பயனடைவார்கள். எனவே, பஸ் இயக்க வேண்டும்’என மக்கள் கோரிக்கை வைக்கின்றனர்
தமிழகத்தில் மக்களவை தேர்தல் (ஏப்.19) முடிவடைந்த நிலையிலும் 13 மாவட்டங்களில் மட்டும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளன. அண்டை மாநிலங்களில் தேர்தல் நடைபெறும் நிலையில், அவற்றை ஒட்டியுள்ள எல்லையோர மாவட்டங்களில் மட்டும் பறக்கும் படைகளும், நிலைக்குழுக்களும் கண்காணிப்பில் ஈடுபட்டுவருவதாக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்துள்ளார். அதன்படி திருவள்ளூர் மாவட்டத்திலும் கண்காணிப்பு தொடர்கிறது.
பாடியநல்லூர் பெரியார் நகரை சேர்ந்தவர் சங்கர் கோவிந்தம்மாள் தம்பதியரின் மகன் சிவா (வயது 7). இவர் கடந்த சில நாட்களாக காய்ச்சலால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதையடுத்து அவரது பெற்றோர்கள் அருகிலுள்ள மருந்தகத்தில் சிறுவனுக்கு மருந்து வாங்கி கொடுத்துள்ளனர். இந்நிலையில் நேற்று காலை சிறுவனுக்கு மீண்டும் காய்ச்சல் அதிகமாகி வீட்டிலேயே மயங்கி விழுந்து உயிரிழந்தார். இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.
செங்குன்றம், அண்ணா பேருந்து நிலையம் மற்றும் நேதாஜி நகர் உள்ளிட்ட இரு வேறு இடங்களில் கோடை வெயில் காரணமாக 60 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவரும், 55 வயதுடைய முதியவர் ஒருவரும் நேற்று மயங்கி விழுந்து உயிரிழந்தனர். மேற்கண்ட இருவரின் உடல்களை மீட்ட செங்குன்றம் போலீசார், பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து இறந்தவர்கள் யார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Sorry, no posts matched your criteria.