Thiruvallur

News May 28, 2024

தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் அன்னதானம்

image

உலக பட்டினி தினத்தை ஒட்டி தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் ஆரம்பாக்கம், மாதர்பாக்கம், கும்மிடிப்பூண்டி ஆகிய மூன்று இடங்களில் இன்று அன்னதானம் வழங்கப்பட்டது. ஆரம்பாக்கத்தில் துவங்கிய இந்த நிகழ்வில் தமிழக வெற்றி கழகத்தின் நிர்வாகிகள் நிஜாம், ரமேஷ், மணி, ஹரி, சுரேஷ் உள்ளிட்டோர் பங்கேற்று 500 பேருக்கு அன்னதானம் வழங்கினர். தொடர்ந்து மாதர்பாக்கம் கும்மிடிப்பூண்டியில் அன்னதானம் வழங்கப்பட்டது.

News May 28, 2024

திருவள்ளூர்: பைக் திருடிய சிறுவன் கைது

image

திருத்தணி அடுத்த கே.ஜி.கண்டிகை பகுதியில் குற்றப்பிரிவு போலீசார் நேற்று வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சிறுவன் ஓட்டிவந்த இருசக்கர வாகனம் திருடியது என தெரியவந்தது. விசாரணையில் வி.சி.ஆர்.கண்டிகையைச் சேர்ந்த 17 வயது சிறுவன் குடிப்பதற்கு பணம் தேவைப்படும்போது இருசக்கர வாகனங்களை திருடி விற்று வந்துள்ளது தெரியவந்துள்ளது. சிறுவனை கைதுசெய்த போலீசார் திருவள்ளூர் சீர்திருத்த பள்ளியில் சேர்த்தனர்.

News May 28, 2024

திருவள்ளூர்: வியாபாரி அடித்துக் கொலை

image

ஆவடி அருகே ரவீந்திரன் நகரை சேர்ந்தவர் துணி வியாபாரி குணசேகரன் (48). இந்நிலையில் நேற்று மாலை குணசேகரன் அருகில் உள்ள மாமனார் வீட்டுக்கு சென்றுள்ளார். அங்கு சற்று மனநிலை பாதிக்கப்பட்ட மைத்துனர் கணேஷ் (52) என்பவருக்கும் குணசேகரனுக்கும் நடந்த தகராறில், கணேஷ் அருகில் கிடந்த உருட்டுக்கட்டை எடுத்து குணசேகரனை சரமாரியாக அடித்து கொலை செய்தார். திருமுல்லைவாயல் போலீசார் கணேஷை கைதுசெய்தனர்.

News May 27, 2024

திருவள்ளூர்: இரவு ரோந்து போலீசார் விபரம் வெளியீடு

image

திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று (மே.27) இரவு ரோந்துப் பணியில் ஈடுபடும் காவல் அதிகாரிகளின் விவரம் மற்றும் தொடர்பு கொள்ள கைப்பேசி எண்கள் வெளியிடப்பட்டு உள்ளது. பொதுமக்கள் குற்றச்சம்பவங்கள் மற்றும் அவசர உதவிக்கு மேற்கண்ட காவல் அதிகாரிகளை தொடர்புக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை திருவள்ளூர் மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது.

News May 27, 2024

திருவள்ளூர் திருத்தணி முருகன் கோயில் சிறப்புகள்!

image

முருகனின் 5ஆம் படை வீடான திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோயில், முருகனின் கிரீட வைரக்கல்லாக இத்தலம் விளங்குகிறது. அருணகிரிநாதரின் திருப்புகழில் திருத்தணியை கைலாயத்துடன் ஒப்பிட்டு பாடல் இயற்றியுள்ளார். அருட்பிரகாச வள்ளலாரின் திருவருட்பாவிலும் இக்கோயிலை குறிப்பிட்டுள்ளார். இங்கு சரவணப் பொய்கை தீர்த்தக் குளமும் உள்ளது. இன்றளவும் 365 படிகளை பூஜை செய்து பாடல் பாடி பூஜிப்பது வழக்கத்தில் உள்ளது.

News May 27, 2024

திருத்தணி கோவிலில் உள்துறை செயலாளர் சாமி தரிசனம்

image

திருத்தணி முருகன் கோவிலுக்கு நேற்றைய தினம் தமிழ்நாட்டின் மாநில உள்துறை செயலாளர் அமுதா தன் குடும்பத்தினருடன் கோவிலுக்கு வந்தார். இதன் பின்னர் கோவிலுக்கு சென்று ஒவ்வொரு சன்னதிகளுக்கும் சென்று அர்ச்சனை செய்து வழிபட்டார். இதனைத் தொடர்ந்து கோவில் சார்பில் அவருக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. அப்போது அவருடன் திருத்தணி போலீஸ் டிஎஸ்பி விக்னேஷ் தமிழ்மாறன் உடன் இருந்தார்.

News May 27, 2024

திருவள்ளூர்: தண்ணீர் தொட்டி இடிந்து தொழிலாளி பலி

image

பூந்தமல்லி அருகே ஆலப்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் கூலி தொழிலாளி அமிர்தராஜ் (56). நேற்று இவர் வானகரத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து கொண்டிருந்தபோது, தண்ணீர் தொட்டி இடிந்து அமிர்தராஜ் மீது விழுந்தது. இதில் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே அமிர்தராஜ் உயிரிழந்தார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News May 27, 2024

திருவள்ளூர்: சங்கட சதுர்த்தி… சிறப்பு பூஜை

image

திருத்தணி மாபொசி சாலையில் உள்ள முருகன் கோயில் உப கோயிலான சுந்தர விநாயகர் கோயிலில் சங்கட சதுர்த்தி விழாவை முன்னிட்டு நேற்று மாலை விநாயகருக்கு பால், தயிர், தேன், பஞ்சாமிர்தம், பன்னீர், அபிஷேகம் நடைபெற்றது. இந்த விழாவில் திருத்தணி நகரம் மற்றும் அதனை சுற்றுபுற பகுதியில் இருந்து திரளான பக்தர்கள் வருகைதந்து விநாயகருக்கு பூக்கள், அருகம்புல், பழம், தேங்காய் உடைத்தும் வழிபட்டனர்.

News May 26, 2024

திருவள்ளூர் மாவட்ட மக்களின் கவனத்திற்கு

image

திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று (மே 26) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் காவல் அதிகாரிகளின் விவரம் மற்றும் தொடர்பு கொள்ள கைப்பேசி எண்கள் வெளியிடப்பட்டுள்ளது. பொதுமக்கள் குற்ற சம்பவங்கள் மற்றும் அவசர உதவிக்கு மேற்கண்ட காவல் அதிகாரிகளை தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை திருவள்ளூர் மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது.

News May 26, 2024

2ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்

image

தமிழகத்தில் வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவானதை தொடர்ந்து புயல் உருவாக வாய்ப்பு இருப்பதாக தமிழக அரசு அறிவித்திருந்தது. இந்த நிலையில் திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அடுத்த எண்ணூர் துறைமுகத்தில் 2ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. இதன் மூலம் பழவேற்காடு, எண்ணூர் கடலோர மீனவர்கள் முன்னெச்சரிக்கையாக இருக்க தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!