India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கவரைப்பேட்டையில் ரயில் விபத்து மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், காலை 10 மணிக்கு புறப்பட இருந்த சென்னை – விசாகப்பட்டினம் விரைவு ரயில், மதியம் 2.40க்கு புறப்படும். காலை 10.10க்கு புறப்பட இருந்த சென்னை – அகமதாபாத் நவஜீவன் விரைவு ரயில், மாலை 4.30க்கு புறப்படும். இரு ரயில்களும் அரக்கோணம், ரேணிகுண்டா, கூடூர் மார்க்கத்தில் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே கூறியுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி சக்தி நகரில் வீட்டில் இருந்த சிலிண்டர் வெடித்து விபத்து ஏற்பட்டது. பூந்தமல்லியில் குமார் என்பவர் வீட்டில் சிலிண்டர் வெடித்ததில் 2 சிறுவர்கள் உள்பட 5 பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்து குறித்து போலீசார் நேரில் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
வங்கக்கடலில் நிலவும் கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்று தமிழ்நாட்டின் 14 மாவட்டங்களில் நல்ல மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனிடையே, திருவள்ளூர் மாவட்டத்திற்கு ஆரஞ்சு எச்சரிக்கை கொடுக்கப்பட்டிருக்கிறது. இது மட்டும் இல்லாமல் அக்.14, 15 ஆகிய நாட்களுக்கு மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் இந்தியா வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.
கவரைப்பேட்டை ரயில் விபத்தை அடுத்து இன்று 18 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. திருப்பதி-புதுவை, சென்னை-திருப்பதி 2 மார்க்கத்திலும் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. கடப்பா-அரக்கோணம், அரக்கோணம்-புதுவை, அரக்கோணம்-திருப்பதி, விஜயவாடா-சென்னை, சூலூர்பேட்டை-நெல்லூர் உள்ளிட்ட 18 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
கவரைப்பேட்டை அருகே நடந்த ரயில் விபத்தில் தண்டவாளங்களின் இணைப்பு துண்டிக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பொன்னேரியை அடுத்து கவரைப்பேட்டை ரயில் நிலையத்தில் நேற்று இரவு இந்த விபத்து நேரிட்டது. சரக்கு ரயில் மீது பயணிகள் ரயில் மோதியதில் பல பெட்டிகள் தடம்புரண்டதாக ரயில்வே கூறியுள்ளது. இந்த ரயில் விபத்து நாசவேலை காரணமா என போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
ஆவடி இன்று இரவு 10.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.
திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று இரவு 10.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.
திருவள்ளூர் மாவட்டம் கவரப்பேட்டை ரயில் நிலையத்தில் நின்று கொண்டிருந்த சரக்கு ரயில் மீது ஆந்திரா நோக்கிச் சென்ற பயணிகள் ரயில் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில், சரக்கு ரயிலின் 2 பெட்டிகள் தீப்பிடித்து எரிந்து வருகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளுர் தெற்கு மாவட்ட கழக செயல்வீரர்கள், வீராங்கணைகள் கூட்டம் பட்டாபிராமில் K.K.R. மஹால் நாளை காலை நடக்கிறது. மாநில, மாவட்ட நிர்வாகிகள், பிற அணி மாவட்ட செயலாளர்கள், பகுதி கழக செயலாளர்கள், பகுதி கழக நிர்வாகிகள், நகர கழக செயலாளர்கள், நகர கழக நிர்வாகிகள், கிளை கழக செயலாளர்கள், அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு திருவள்ளூர் அதிமுக தெற்கு மாவட்ட செயலாளர் அலெக்சாண்டர் அழைப்பு விடுத்துள்ளார்.
திருத்தணி அடுத்த கேசவராஜகுப்பத்தைச் சேர்ந்த நபர், பாண்ட்ரவேட்டில் வசிக்கும் சமூகத்தினரை தவறாக சித்தரித்து வீடியோ பதிவிட்டுடிருந்தனர். இது குறித்து பொதட்டூர்பேட்டை போலீஸார் வீடியோ பதிவிட்ட நபர் மீது வழக்கு பதிவு செய்தனர். இதுபோன்று இருசமூகங்களுக்கு இடையே மோதல்கள் ஏற்ப்படுத்தும் விதத்தில் வீடியோ பதிவிடும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எச்சரித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.