Thiruvallur

News June 27, 2024

திருவள்ளூரில் மழைக்கு வாய்ப்பு

image

தமிழகத்தில் திருவள்ளூர் உள்ளிட்ட 12 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் பல்வேறு இடங்களில் தண்ணீர் வெள்ளம்போல் தேங்கும், போக்குவரத்து நெரிசல் ஏற்படும். வெளியே செல்வோர் குடை, ரெயின்கோட் எடுத்துச் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

News June 27, 2024

வேல்டெக் கல்வி குழுமத்தின் நிறுவனர் காலமானார்

image

ஆவடி அருகே வெள்ளானூர் வேல்டெக் கல்வி குழுமத்தின் நிறுவனர் சகுந்தலா ரங்கராஜன் (82) நேற்று ( ஜூன் 26) மாலை காலமானார். அவரது இறுதிச் சடங்கு இன்று (ஜூன் 27) பிற்பகல் 3 மணி அளவில் பல்கலைக்கழக விருந்தினர் மாளிகையில் நடைபெறும். மதியம் 2.45 மணி வரை மாணவர்கள், பேராசிரியர்கள், பொதுமக்கள் அஞ்சலி செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது எனப் பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவித்துள்ளது.

News June 26, 2024

திருவள்ளூர்: இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு

image

திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று (ஜூன் 26) இரவு ரோந்துப் பணியில் ஈடுபடும் காவல் அதிகாரிகளின் விவரம் மற்றும் தொடர்பு கொள்ள கைப்பேசி எண்கள் வெளியிடப்பட்டுள்ளன. பொதுமக்கள் குற்றச்சம்பவங்கள் மற்றும் அவசர உதவிக்கு மேற்கண்ட காவல் அதிகாரிகளை தொடர்புக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை திருவள்ளூர் மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது.

News June 26, 2024

திருவள்ளூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை

image

திருத்தணியில் அமைந்துள்ள முருகப்பெருமானின் ஐந்தாம் படை வீடான அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் வரும் ஜூலை 29 (திங்கள்கிழமை) ஆடிக்கிருத்திகை திருவிழா நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு, திருவள்ளூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் இன்று உத்தரவிட்டுள்ளார். இந்த விடுமுறை ஈடு செய்யும் விதமாக ஆகஸ்ட் 10 (சனிக்கிழமை) வேலை நாளாக செயல்படும் என தெரிவித்துள்ளார்.

News June 25, 2024

திருவள்ளூர் எம்.பி யாக சசிகாந்த் செந்தில் பதவியேற்பு

image

திருவள்ளூர் மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற காங்கிரஸ் வேட்பாளர் சசிகாந்த் செந்தில் இன்று நாடாளுமன்ற எம்.பி-யாக பதவி ஏற்றுக்கொண்டார். நடைபெற்று வரும் நாடாளுமன்ற கூட்டத் தொடரில், தற்காலிக மக்களவைத் தலைவர் மஹதாப் அவருக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். சசிகாந்த் செந்தில், திருவள்ளூர் மக்களவைத் தொகுதியில் முதல் முறையாக எம்.பி-யாக பதிவியேற்றுள்ளார்.

News June 25, 2024

திருவள்ளூர்: கேரளாவிற்கு கடத்த முயன்ற எத்தனால் பறிமுதல்

image

கும்மிடிப்பூண்டி, எளாவூர் அதிநவீன சோதனைச்சாவடி அருகே இன்று போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது, பீகாரில் இருந்து கேரளாவுக்கு கடத்த முயன்ற எத்தனாலை போலீசார் பறிமுதல் செய்தனர். விசாகப்பட்டினம் மார்க்கமாக சென்னை எண்ணூருக்கு கொண்டு சென்று, அங்கிருந்து கேரளாவுக்கு கடத்தி செல்லப்பட இருந்த 110 எத்தனால் கேன்களை ரோந்து வாகன உதவி ஆய்வாளர் தலைமையிலான போலீசார் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

News June 24, 2024

திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கூட்டம்

image

திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கத்தில் இன்று (24.06.2024) நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர் அவர்கள் மாற்றுத்திறனாளிகள் மற்றும் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டு உரிய நடவடிக்கை எடுக்கும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இந்த கூட்டத்தில் ஆட்சியர் அலுவலக ஊழியர்கள் பலரும் கலந்துகொண்டனர்.

News June 24, 2024

மாவட்ட மீனவர் காங். தலைவர் நியமனம்

image

தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வ பெருந்தகை ஒப்புதலோடு, அகில இந்திய மீனவர் காங். தலைவர் ஆம்ஸ்ட்ராங் பெர்னாண்டோ பரிந்துரை மற்றும் மாநில தலைவர் ஜோர்தான் ஆலோசனையின் பேரில் திருவள்ளூர் மாவட்ட மீனவர் காங். தலைவராக பழவேற்காடு ஜெயராமன் நியமிக்கப்பட்டுள்ளார். இவருக்கு காங். கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் ஏராளமானோர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

News June 24, 2024

இளைஞர் கொலை: தந்தை – தம்பி கைது

image

பூந்தமல்லி அருகே மேட்டுக்குப்பம் பகுதியை சேர்ந்தவர் ஆசைமணி(60). இவரது மகன்கள் விஜய்(35) – அஜய் (26). கஞ்சா போதைக்கு அடிமையாகி இருந்த விஜய் நேற்று முன்தினம் வீட்டில் தகராறு செய்யவே, அவரை தந்தை ஆசைமணி, தம்பி அஜய் ஆகியோர் அடித்து கொலை செய்து சடலத்தை சுடுகாட்டில் எரித்துள்ளனர். இது தொடர்பாக போலீசார் ஆசைமணி, அஜய் இருவரையும் நேற்று(ஜூன் 23) இரவு கைது செய்தனர்.

News June 23, 2024

கழிவு நீர் தொட்டியில் ஆண் சடலம்

image

பூந்தமல்லி அருகே உள்ள மதுரவாயில் பகுதியை சேர்ந்த சரண்ராஜ் என்பவர் அதே பகுதியில் உள்ள கழிவு நீர் தொட்டியில் சடலமாக கிடந்துள்ளார். அவரது உடலை கைப்பற்றிய மதுரவாயல் போலீசார் கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இவர் தவறுதலாக தொட்டியில் விழுந்து உயிரிழந்தாரா?அல்லது யாரேனும் கொலை செய்து தூக்கி வீசினரா என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

error: Content is protected !!