India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
12ம் வகுப்பு முடித்த மாணவர்களுக்கான ‘கல்லூரிக் கனவு’ நிகழ்ச்சி அட்டவணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இந்நிகழ்வில் சிறந்த கல்வியாளர்கள் கலந்துகொண்டு 12ம் வகுப்பிற்கு பிறகு உயர்கல்வியியல், கலை அறிவியல், பொறியியல், அறிவியல் தொழில்நுட்ப பிரிவுகள் என்னென்ன படிப்புகள் உள்ளன என்பது தொடர்பாக விரிவான தகவல்களை மாணவ, மாணவியருக்கு வழங்க உள்ளனர். அதன்படி, திருவள்ளூரில் நாளை (மே 9) இந்நிகழ்ச்சி நடைபெறுகிறது.
தென்னிந்திய பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்குகளில் காற்றின் திசை மாறுபாடு நிலவுகிறது. இதனால் தமிழகத்தில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் மணிக்கு 30 முதல் 40 கிமீ வரை லேசானது முதல் மிதமான மழை பெய்யும். அதன்படி திருவள்ளூர் உட்பட 12 மாவட்டங்களில் இன்று காலை 10 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை, மாதவரம் பகுதியைச் சேர்ந்தவர் வேதா மேரி (68). இவர் குற்ற வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று புழல் சிறையில் கடந்த ஆண்டு ஏப்ரல் முதல் அனுபவித்து வந்தார். இந்த நிலையில் உடல் நலக்குறைவால் ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட வேதா மேரி இன்று இறந்தார். புகாரின் பேரில் புழல் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
எண்ணூர், சத்தியவாணி முத்து நகர் பகுதியைச் சேர்ந்த பாக்கியம் (65) நேற்றிரவு தனது வீட்டு வாசலில் அமர்ந்திருந்தார். அப்போது 2 பைக்கில் வந்த 3 பேர் பாக்கியத்தை சரமாரியாக வெட்டி விட்டு தப்பியோடினர். இதையடுத்து ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் இன்று காலை உயிரிழந்தார். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் மூதாட்டியின் பேரன் மகி என்பவரை அந்த கும்பல் கொலை செய்ய வந்திருப்பது தெரியவந்தது.
திருவள்ளூர் தொகுதி மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு, வாக்குப்பதிவு இயந்திரங்கள் திருவள்ளூர், பெருமாள்பட்டியில் உள்ள தனியார் பள்ளியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று காலை தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு மையத்திற்கு வந்து பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்தார். அப்போது மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர், ஆவடி காவல் ஆணையர் சங்கர் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
திருவள்ளூர், பெரிய பாளையத்தில் அமைந்துள்ளது பவானி அம்மன் கோயில். பாவனி அம்மன் கிருஷ்ணனின் தங்கையாக பாவிக்கப்படுகிறார். புராணக்கதையைக் கொண்ட இக்கோவிலில், சமீபத்தில் புரணமைக்கப்பட்டது. இதில் மாதங்கி அம்மனுக்கு தனிச்சன்னதியும் உள்ளது. அம்மன் கையில் சங்கு சக்கரம், வாள், அமிர்தக் கலசத்துடன் காட்சி தருகிறார். இது நகரத்திற்குள் அமைந்து அதன் அழகை அதிகரிக்கிறது.
பூந்தமல்லி அருகே நசரத்பேட்டையில் வாடகைக்கு வீடு எடுத்து போதை ஊசிகள், கஞ்சா விற்பனை செய்வதாக நசரத்பேட்டை போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் போதை ஊசிகள், கஞ்சா விற்பனை செய்த செம்பரம்பாக்கத்தைச் சேர்ந்த சூர்யா (29), சந்தோஷ் (21), தூத்துக்குடியைச் சேர்ந்த அமிர்தலிங்கம் (21), சூர்யா (21) மற்றும் 17 வயதுடைய 3 சிறுவர்களை நேற்று (மே 6) அதிரடியாக கைதுசெய்தனர்.
திருவள்ளூர் மாவட்டம் பெருமாள்பட்டு தனியார் பள்ளியிலுள்ள வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மையத்தை திருவள்ளூர்(தனி) நாடாளுமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் பிரபுசங்கர் அவர்கள் இன்று ( 06.05.2024) பார்வையிட்டு ஆய்வு செய்தார். உடன் துறை சார்ந்த அலுவலக ஊழியர்கள் இருந்தனர்.
ஆவடி அருகே திருமுல்லைவாயில் பகுதியை சேர்ந்த ஆட்டோ டிரைவர் சத்யராஜ் (36). இவரது மனைவி சுகன்யா (33). இந்த நிலையில் நேற்று தம்பதிக்கு இடையே ஏற்பட்ட குடும்பத் தகராறில், கத்தியால் சுகன்யாவின் கழுத்தில் சத்யராஜ் சரமாரியாக குத்தியுள்ளார். அவரை உறவினர்கள் மீட்டு கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். திருமுல்லைவாயல் போலீசார் வழக்கு பதிவு செய்து சத்யராஜை இன்று கைது செய்தனர்.
12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள
புழல் சிறையில் ஒட்டுமொத்தமாக தேர்வெழுதிய 35 கைதிகளில் 32 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். புழல் தண்டனை சிறையில் 26 ஆண் கைதிகளில் 24 பேர் தேர்ச்சி பெற்றனர். புழல் விசாரணை சிறையில் 6 ஆண் கைதிகளும் தேர்ச்சி பெற்றனர். புழல் மகளிர் சிறையில் தேர்வெழுதிய 3 பெண்களில் 2 பெண் கைதிகள் தேர்ச்சி. 91.43% விழுக்காடு தேர்ச்சி பெற்றுள்ளனர்.
Sorry, no posts matched your criteria.