Thiruvallur

News March 24, 2024

பராமரிப்பு பணி காரணமாக ரயில் சேவை ரத்து

image

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி – மீஞ்சூர் ரயில் நிலையங்கள் இடையே, வரும் 25, 26, 27 ஆகிய நாட்களில் காலை 9:25 மணி முதல் 11:40 மணி வரை ரயில் பாதை மேம்பாட்டு பணிகள் நடைபெற உள்ளன. இதனால், சென்னை சென்ட்ரல் – கும்மிடிப்பூண்டி மார்கத்தில் மூன்று நாட்களுக்கு, ஏழு மின்சார ரயில்களின் சேவை பகுதி நேரமாக ரத்து செய்யப்படுவதாக ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

News March 24, 2024

திருவள்ளூர்: காங்கிரஸ் வேட்பாளர் அறிவிப்பு

image

திருவள்ளூர் மக்களவைத் தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் வேட்பாளராக முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி சசிகாந்த் செந்தில் அறிவிக்கப்பட்டுள்ளார். மக்களவைத் தேர்தல் 2024 வரும் ஏப்ரல் மாதம் 19ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதற்காக தமிழகம், புதுவையில் திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதில், 7 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியலை அக்கட்சி நேற்று வெளியிட்டுள்ளது.

News March 23, 2024

திருவள்ளூரில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு

image

தமிழகத்தில் திமுக கூட்டணியில் 9 இடங்களில் காங்கிரஸ் போட்டியிடும் என அறிவிக்கப்பட்டது. அதன் அடிப்படையில், திருவள்ளூர் தொகுதியில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சசிகாந்த் செந்தில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். கடந்த கர்நாடக சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் வெற்றிக்கு வித்திட்டவர். மிகவும் துடிப்பாக செயல்படக்கூடியவர் என்ற நற்பெயர் பெற்றுள்ளார்.

News March 23, 2024

பகுஜன் சமாஜ் கட்சியின் வேட்பாளர் அறிமுக கூட்டம்

image

செங்குன்றத்தில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் இன்று தமிழ்நாடு பகுஜன் சமாஜ் கட்சியின் இறுதி வேட்பாளர் பட்டியல் அறிவிப்பும், திருவள்ளூர் பாராளுமன்ற வேட்பாளர் அறிமுக கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டம் இக்கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் மற்றும் முன்னாள் மேல் சபை எம்பியுமான அசோக் சித்தார்த் கலந்துகொண்டு பட்டியலை வெளியிட்டு திருவள்ளூர் பாராளுமன்ற வேட்பாளர் மகிழ்மதியை அறிமுகம் செய்தனர்.

News March 23, 2024

திருவள்ளூர் ஆட்சியர் முக்கிய அறிவிப்பு!

image

தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் ஏப்.19 ஆம் தேதி நடைபெறுகிறது. திருவள்ளூர் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் அத்தியாவசிய பணியில் ஈடுபடும் அரசு ஊழியர்கள், தபால் ஓட்டு போட வசதி ஏற்படுத்தப்பட்டு உள்ளதாக மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர் தெரிவித்துள்ளார். இதற்கான விண்ணப்ப படிவம் ’12 டி’ ஐ பூர்த்தி செய்து அந்தந்த தொகுதிக்குட்பட்ட உதவி தேர்தல் அலுவலரிடம் மார்ச் 25ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க அறிவுறுத்தி உள்ளார்.

News March 23, 2024

திருவள்ளூர் அதிமுக தேர்தல் பணிக்குழு நிர்வாகிகள் நியமனம

image

மக்களவை தேர்தல் வருகின்ற ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அனைத்து கட்சி நிர்வாகிகளும் தேர்தலில் வெற்றி பெறுவதற்கு தீவிரம் காட்டி வருகின்றனர். இந்த நிலையில் திருவள்ளூர் நாடாளுமன்ற தொகுதிக்கான அதிமுக தேர்தல் பணிக்குழு நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இதில் பி.வேணுகோபால், அப்துல் ரஹீம், ரமணா, மாதவரம் மூர்த்தி உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர்.

News March 23, 2024

வருமானவரித்துறை சார்பில் புதிய கட்டுப்பாட்டு அறை

image

நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா, இலவச பொருட்கள் விநியோகம் நடப்பதை தடுக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக வருமானவரித்துறை சார்பில் 24 மணி நேர கட்டுப்பாட்டு அறை பொன்னேரி பழைய தாலுகா அலுவலக வளாகத்தில் திறக்கப்பட்டுள்ளது. 1800 4256669 என்ற இலவச எண் மற்றும் 9445394453 புகார் அளிக்க தெரிவிக்கப்பட்டுள்ளது.

News March 23, 2024

தேர்தல்: நேரடியாக மோதும் பாஜக-காங்கிரஸ்

image

திருவள்ளூர் (தனி) மக்களவைத் தொகுதியில் தேசிய கட்சிகளான பாஜகவும், காங்கிரஸும் நேருக்கு நேர் மோதுகின்றன. பாஜக சார்பில் பொன்.பாலகணபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். காங்கிரஸ் சார்பில் ரஞ்சன் குமார் அறிவிக்கப்படலாம் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. எப்படி இருந்தாலும் பாஜக-காங்கிரஸ் மோதல் கன்ஃபார்ம்! உங்கள் கருத்து என்ன?

News March 22, 2024

பூந்தமல்லியில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் அதிரடி

image

பூந்தமல்லி கிராமத்தில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் இன்று சோதனை மேற்கொண்டனர். அப்போது, மும்பையை சேர்ந்த வேணுகோபால் என்பவர் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு சென்ற ₹13, 84, 684 பணத்தை பறிமுதல் செய்து உரிய ஆவணங்களை சமர்ப்பித்து பணத்தை பெற்றுக் கொள்ளும்படி தெரிவித்தனர். பின்னர் பூந்தமல்லி அரசு கருவூலத்தில் இந்த பணம் ஒப்படைக்கப்பட்டது.

News March 22, 2024

திருவள்ளூர் தேமுதிக வேட்பாளர் இவர்தான்!

image

தேமுதிக சார்பில் திருவள்ளூர் (தனி) மக்களவைத் தொகுதியில் நல்லதம்பி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். மக்களவைத் தேர்தல் 2024ஐ ஒட்டி தமிழகத்தில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்துள்ள தேமுதிகவுக்கு 5 தொகுதிகள் பங்கீடு செய்யப்பட்டுள்ளன. அதனடிப்படையில், வேட்பாளர்களை தேமுதிக தற்போது அறிவித்துள்ளது. விஜயகாந்த் இல்லாமல் தேமுதிக சந்திக்கும் முதல் தேர்தல் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!