Thiruvallur

News May 19, 2024

திருவள்ளூர்: வசந்த மண்டபத்தில் எழுந்தருளிய வீரராகவப் பெருமாள்

image

திருவள்ளூர் வீரராகவ பெருமாள், கோடை வசந்த விழாவை ஒட்டி, அகோபில மடம் வசந்த மண்டபத்தில் எழுந்தருளினார். மூன்றாவது நாளாக நடைபெறும் இந்த விழாவில், தினசரி வசந்த மண்டபத்தில் எழுந்தருளும் வீரராகவ பெருமாளை திரளான பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். கோடையில் பக்தர்களுக்கு இனிமையாக காட்சி தரும் விதமாக வீரராகவ பெருமாள், வசந்த மண்டபத்தில் எழுந்தருளி வருகிறார்.

News May 19, 2024

ஆவடி: இளைஞர் புழல் சிறையில் அடைப்பு

image

ஆவடி அடுத்த அண்ணனூர் பகுதியைச் சேர்ந்தவர் மாதவன் (65). பிப்ரவரி மாதம் இவரை திருவள்ளூர் அருகே பள்ளிப்பட்டு பகுதியைச் சேர்ந்த சரவணன் (32) என்பவர் வீடு புகுந்து வெட்டி கொலை செய்து விட்டு தலைமறைவானார். அம்பத்தூர் நீதிமன்றத்தில் சரணடைந்த சரவணனை, திருமுல்லைவாயல் போலீசார் காவல் எடுத்து விசாரணை நடத்தினர். அப்போது அவர் கொலை செய்ததை ஒப்புக் கொண்டதையடுத்து, மீண்டும் நேற்று புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

News May 18, 2024

பூந்தமல்லி: 2300 போதை மாத்திரைகள் பறிமுதல்

image

பூந்தமல்லி அருகே ராமாபுரம், சாந்தி நகர் சுடுகாடு அருகே போதை மாத்திரை விற்பனை நடைபெறுவதாக ராமாபுரம் போலீசாருக்கு இன்று தகவல் வந்தது. போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று போதை மாத்திரை விற்பனை செய்த ராமாபுரம், நடேசன் நகரைச் சேர்ந்த தினேஷ் (24), வசந்தகுமார் (23), ஹரிகரன் (24), 17 வயதுடைய சிறுவன் ஆகிய 4 பேரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து இருந்து 2300 போதை மாத்திரைகளை போலீஸார் பறிமுதல் செய்தனர்.

News May 18, 2024

ஆவடி: ரயில் மோதி ஓட்டுநர் பலி

image

ஆவடி வீட்டு வசதி வாரிய குடியிருப்பைச் சேர்ந்த தனியார் பேருந்து ஓட்டுனர் நித்யானந்தா (43). இந்நிலையில் நேற்று மாலை நித்யானந்தா ஆவடி ரயில் நிலையம் அருகே தண்டவாளத்தை கடக்க முயன்றார். அப்போது அந்த வழியாக வந்த மின்சார ரயில் அவர் மீது மோதியதில் ரயில் சக்கரத்தில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே நித்யானந்தா உயிரிழந்தார். புகாரின் பேரில் ஆவடி ரயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News May 18, 2024

திருவள்ளூர்: விபத்தை தடுக்க தானியங்கி சிக்னல் அமைப்பு

image

ஊத்துக்கோட்டை திருவள்ளூர் மார்க்கத்தில் 30-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இந்த வழித்தடத்தில் பூண்டி சத்தியமூர்த்தி நீர்த்தேக்கம் உள்ளது. திருவள்ளூர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளிலிருந்து நீர்த்தேக்கம் செல்ல தினமும் ஏராளமானோர்  வாகனங்களில் செல்கின்றனர். விபத்தை தடுக்கும்பொருட்டு மாவட்ட போலீசார் பூண்டி கூட்டு சாலையில் தானியங்கி சிக்னல் அமைத்தனர். இதனால் இரவு நேரங்களில் விபத்து தவிர்க்கப்படுகிறது.

News May 18, 2024

திருவள்ளூர்: புதுமைப்பெண் திட்டத்தில் 8616 மாணவிகள் பயன்

image

புதுமைப்பெண் திட்டத்தின் மூலம் 6 முதல் +2 வரை அரசு பள்ளியில் பயின்று உயர் கல்வியில் சேர்ந்த 2.73 லட்சம் கல்லூரி மாணவிகளுக்கு மாதந்தோறும் ஆயிரம் உதவித்தொகை வழங்கப்படுகிறது. திருவள்ளூர் மாவட்டத்தில் புதுமைப்பெண் திட்டத்தின் மூலம் 8616 மாணவிகள் பயன் பெற்றுள்ளனர். இத்திட்டம் செயல்படுத்துவதன் மூலம் உயர் கல்விக்கு செல்லும் மாணவிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக கலெக்டர் த.பிரபுசங்கர் நேற்று தெரிவித்தார்.

News May 18, 2024

திருவள்ளூர்: மறுவாழ்வு முகாமில் 198 வீடுகள்

image

கும்மிடிப்பூண்டி உள்ள இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் 198 வீடுகள் கட்டப்பட உள்ளதை ஒட்டி பொன்னேரி சார் ஆட்சியர் வாகே சங்கேத் பல்வந்த் இன்று நேரில் ஆய்வு செய்தார். இந்த நிகழ்வில் கும்மிடிப்பூண்டி வட்டாட்சியர் பிரீத்தி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சந்திரசேகர், அமிழ்த மன்னன் உடன் இருந்தனர். மேற்கண்ட 198 வீடுகள் தலா 5 லட்சத்து 7 ஆயிரம் ரூபாய் மதிப்பில் கட்டப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

News May 17, 2024

திருவள்ளூர் இரவு ரோந்து போலீஸார் விபரம்

image

திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று (மே.17) இரவு ரோந்துப் பணியில் ஈடுபடும் காவல் அதிகாரிகளின் விவரம் மற்றும் தொடர்பு கொள்ள கைபேசி எண்கள் வெளியிடப்பட்டு உள்ளது. பொதுமக்கள் குற்றச்சம்பவங்கள் மற்றும் அவசர உதவிக்கு மேற்கண்ட காவல் அதிகாரிகளை தொடர்புக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை திருவள்ளூர் மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது.

News May 17, 2024

போதை மாத்திரைகள் விற்பனை: 2 வாலிபர்கள் கைது

image

ஆவடி காவல் ஆணையரகத்திற்கு உட்பட்ட அம்பத்தூர் மார்க்கெட்டில் போதை மாத்திரைகள் விற்பனை செய்வதாக ஆணையர் கி.சங்கருக்கு இன்று ரகசிய தகவல் வந்தது. அவர் உத்தரவின் பேரில் தனிப்படை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று போதை மாத்திரை விற்பனை செய்த அம்பத்தூர், காமராஜபுரம் பகுதியைச் சேர்ந்த ரஞ்சித் (23), பார்த்திபன் (23) ஆகிய 2 பேரை கைது செய்து அவர்களிடமிருந்து 1140 போதை மாத்திரைகள் பறிமுதல் செய்தனர்.

News May 17, 2024

வீட்டுக்குள் அடைத்து வைத்த 18 நாய்கள் மீட்பு

image

பூந்தமல்லி, காட்டுப்பாக்கம் பகுதியில் பிரியா என்பவர் வீட்டில் நாய்களை வைத்து பராமரித்து வருகிறார். இந்த நிலையில் கடந்த சில வாரங்களாக இவரது வீடு பூட்டி கிடப்பதால் நாய்களுக்கு உணவு வழங்காமல் இரவு முழுதும் குரைத்துக் கொண்டு இருக்கிறது. இதையடுத்து விலங்கு நல வாரிய பணியாளர்கள் 18 நாய்களை இன்று மீட்டனர். புகாரின் பேரில் பூந்தமல்லி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!