Thiruvallur

News April 7, 2024

சமோசா விற்று வாக்குகள் சேகரித்த எம்எல்ஏ

image

கடம்பத்தூர் மேற்கு ஒன்றியம் மப்பேடு ஊராட்சியில் இன்று திருவள்ளூர் தனி நாடாளுமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் சசிகாந்த் செந்தில்லை ஆதரித்து சமோசா விற்று வாக்குகள் சேகரித்தார் திருத்தணி எம்எல்ஏ சந்திரன். உடன் ஒன்றிய செயலாளர் ரமேஷ் உட்பட கூட்டணி கட்சியின் கழக நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

News April 6, 2024

ரயில் தாமதம் – பயணிகள் அவதி

image

சென்னை மூர் மார்க்கெட்டில் இருந்து திருவள்ளூர் புறப்படும் மின்சார ரெயில்கள் சுமார் அரைமணி நேரம் தாமதமாக புறப்படுகின்றன. கடந்த ஒரு வாரமாகவே ரெயில்கள் தாமதமாக இயக்கப்பட்டு வருகின்றன. இதன் காரணமாக திருவள்ளூர், அரக்கோணம் பகுதிகளுக்கு செல்லும் பயணிகள் கடும் அவதிக்கு ஆளாகி வருகிறார்கள். இது தொடர்பாக அதிகாரிகளிடம் தகவல் தெரிவித்தாலும் கண்டு கொள்வதில்லை என்று பயணிகள் குற்றம் சாட்டுகிறார்கள்.

News April 6, 2024

திருவள்ளூர்: பதற்றமான சாவடி எண்ணிக்கை வெளியீடு

image

திருவள்ளூர் மாவட்டத்திற்குட்பட்ட மக்களவைத் தொகுதியில் பதற்றமான வாக்குச்சாவடிகள், மிகவும் பதற்றமான வாக்குச்சாவடிகள் எண்ணிக்கை விவரம் வெளியாகியுள்ளது. அதன்படி, திருவள்ளூர் தொகுதியில் 170 – 5, அரக்கோணம் தொகுதியில் 258 – 15 ஆகியவை பதற்றமான – மிகவும் பதற்றமான வாக்குச்சாவடிகள் என்று தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்துள்ளார்.

News April 5, 2024

வாக்களிப்பது குறித்து மராத்தான்

image

திருத்தணியில் 18 வயது நிரம்பியவர்கள் வாக்களிக்க வலியுறுத்தி, இன்று காலை 100 சதவீத வாக்குப்பதிவு விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டம் நடைபெற்றது. இதில் கல்லூரி மாணவ மாணவிகள் உட்பட பல்வேறு தரப்பினர் பங்கேற்று விழிப்புணர்வை ஏற்படுத்தினர். இந்நிகழ்ச்சியை வருவாய் கோட்டாட்சியர் தீபா, காவல்துறை டிஎஸ்பி விக்னேஷ் ஆகியோர் பங்கேற்று துவக்கி வைத்தனர்.

News April 5, 2024

டாஸ்மாக் கடைகளுக்கு 4 நாள் விடுமுறை

image

தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற உள்ளது. வாக்குப்பதிவை முன்னிட்டு டாஸ்மாக் கடைகள் ஏப்ரல் 17 முதல் ஏப்ரல் 19ஆம் தேதி வரை மூடப்படுகிறது. அதேபோல் வாக்கு எண்ணிக்கை நாளான ஜூன் 4ஆம் தேதியும் டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சட்டம் ஒழுங்கு பாதுகாப்பு கருதி இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

News April 5, 2024

திருவள்ளூர்: திடீர் ஆய்வு மேற்கொண்ட தேர்தல் அலுவலர்

image

மக்களவைத் தேர்தல் 2024ஐ முன்னிட்டு, மாதவரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் இன்று மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டிருக்கும் இருப்பு அறையின் விவரங்கள் குறித்த பதிவேடுகளை மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான பிரபுசங்கர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

News April 4, 2024

திமுக ஆலோசனை கூட்டம்

image

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் இன்று திருவள்ளூர் மேற்கு மாவட்ட கழக செயலாளர்கள் அலுவலகத்தில், திருத்தணி சட்டமன்ற உறுப்பினர் சந்திரன் அவர்களின் தலைமையில் மேற்கு மாவட்டம் அமைப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் வேட்பாளர்களை வெற்றி பெற செய்வதற்கு ஆலோசனை வழங்கப்பட்டது.

News April 4, 2024

பள்ளி பேருந்தில் பாலியல் தொல்லை: வழிகாட்டு நெறிமுறை

image

தனியார் பள்ளி பேருந்தில் மாணவர்களுக்கு ஏற்படும் பாலியல் தொல்லையை தடுக்க வழிகாட்டு நெறிமுறைகளை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது. அதில், பள்ளியில் ‘மாணவர் மனசு’ பெட்டி வைக்கப்பட்டு அதில் பெறப்படும் குறைகளை 24 மணி நேரத்தில் தீர்க்க வேண்டும். ஓட்டுநருக்கு போக்சோ சட்டம் குறித்து பயிற்சி வழங்க வேண்டும். ஓட்டுநர், உதவியாளர்கள் குறித்த விவரங்களை EMIS Portalஇல் பதிவேற்ற வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளது.

News April 4, 2024

திருவள்ளூர்: சரக்கு ரயில் மோதி 2 பேர் மரணம்

image

பொன்னேரி அடுத்த தச்சூரில் சேலத்தை சேர்ந்த 4 பேர் தங்கி பெயிண்டிங் பணி செய்துவந்தனர். பெயிண்டிங் வேலை முடிந்து 4 பேரும் சொந்த ஊர் செல்ல நேற்றிரவு பொன்னேரி ரயில் நிலையம் சென்றனர். அங்கு 4 பேரும் தண்டவாளத்தை கடக்க முயன்றபோது, அதில் ஒருவர் தவறி தண்டவாளத்தில் விழுந்தார். இதையடுத்து அவரும், அவரை தூக்கச் சென்ற மற்றொருவரும் சரக்கு ரயில் மோதி இறந்தனர். இதுகுறித்து ரயில்வே போலீசார் விசாரிக்கின்றனர்.

News April 4, 2024

திருவள்ளூர்: பதற்றமான வாக்குச் சாவடிகளில் கலெக்டர் ஆய்வு

image

மக்களவைத் தேர்தலையொட்டி திருவள்ளூர் (தனி) தொகுதிக்குட்பட்ட கும்மிடிப்பூண்டியில் உள்ள பல்வேறு வாக்குச்சாவடி மையங்களை மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான பிரபு சங்கர் நேற்று (ஏப்ரல் 3) ஆய்வுசெய்தார். பதற்றமான வாக்குச்சாவடி, கடந்த கால தேர்தல்களில் 90 சதவீதத்துக்கு அதிகமாக வாக்குப்பதிவு நடைபெற்ற வாக்குச்சாவடி மையங்களையும் ஆய்வுசெய்தார். இதில் தேர்தல் நடத்தும் உதவி அலுவலர்கள் உடனிருந்தனர்.

error: Content is protected !!