Thiruvallur

News August 2, 2024

திருவள்ளூரில் இன்று இரவு 10 மணி வரை மழை

image

தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து பல பகுதிகளில் மழை வெளுத்து வாங்கி வருகின்றது. இந்நிலையில், குமரி, நெல்லை உள்ளிட்ட 14 மாவட்டங்களில் இன்று இரவு 10 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், வெளியே செல்லும்போது முன்னெச்சரிக்கையுடன் செல்லவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன்படி திருவள்ளூரில் இன்று இரவு 10 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

News August 2, 2024

திருவள்ளூரில் இன்று இரவு 7 மணி வரை மழை

image

தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து பல பகுதிகளில் மழை வெளுத்து வாங்கி வருகின்றது. இந்நிலையில், குமரி, நெல்லை உள்ளிட்ட 14 மாவட்டங்களில் இன்று இரவு 7 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், வெளியே செல்லும்போது முன்னெச்சரிக்கையுடன் செல்லவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன்படி திருவள்ளூரில் இன்று இரவு 7 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

News August 2, 2024

திருவள்ளூர் மக்களே ரயில்கள் ரத்து

image

சென்னை சென்ட்ரலில் இருந்து இரவு 11.40, 12.05 மணிக்கு புறப்படும் மின்சார ரயில்களும், பட்டாபிராமில் இருந்து ஆவடிக்கு இரவு 11.50 மணிக்கு புறப்படும் மின்சார ரயிலும் இன்று மற்றும் ஆகஸ்ட் 4ஆம் தேதி ரத்து செய்யப்படும். ஆவடியில் இருந்து பட்டாபிராமுக்கு அதிகாலை 3 மணிக்கு புறப்படும் மின்சார ரயில் ஆகஸ்ட் 3 மற்றும் 5ஆம் தேதி ரத்து செய்யப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

News August 2, 2024

இளைஞரை கொன்று ஏரியில் வீச்சு: 6 பேர் கைது

image

அம்பத்தூர், ஐ.சி.எப் காலனியைச் சேர்ந்தவர் ராஜேஷ் (23). இவரிடம் முகப்பேர் பகுதியைச் சேர்ந்த மூர்த்தி (32) என்பவர் கஞ்சா விற்குமாறு கட்டாயப்படுத்தியுள்ளார். இதனை மறுத்த ராஜேஷை, மூர்த்தி தனது நண்பர்களுடன் சேர்ந்து கொலை செய்து அம்பத்தூர் ஏரியில் நேற்று வீசியுள்ளார். போலீசார், மூர்த்தி, யுவராஜ்(19), சிவகுமார்(23), சரவணன்(27), நந்தகுமார்(22), சுஜித் (21) ஆகிய 6 பேரை இன்று (ஆக.2) கைது செய்தனர்.

News August 2, 2024

மாநில அளவில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பதக்கம்

image

மீஞ்சூர் அடுத்த உத்தண்டி கண்டிகை நாலூரில், ‘ஜாக்’ என்ற உள்ளூர் சிலம்பம் அகாடமி ஒன்று செயல்படுகிறது. இதில் பயிற்சி பெறும் மாணவர்கள், தமிழ்நாடு அமெச்சூர் சிலம்பம் அசோசியேசன் சார்பில், கோயம்புத்தூர் கற்பகம்பாள் பல்கலைக்கழகத்தில் நடந்த 21ஆவது மாநில அளவிலான சிலம்ப போட்டியில் பங்கேற்றனர். இதில், ஜூனியர், சீனியர் 28 பேர் பங்கேற்று தங்கம், வெள்ளி , வெண்கலப் பதக்கங்களை வென்று சாதனை படைத்தனர்.

News August 2, 2024

திருவள்ளூர் பற்றி உங்களுக்கு தெரியுமா?

image

திருவள்ளூர், தமிழ்நாட்டில் வேகமாக வளரும் ஒரு மாவட்டம். இம்மாவட்டம், தொழில்துறை மற்றும் வர்த்தக முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்த்துள்ளது. பல கல்வி நிறுவனங்கள், உற்பத்தி பிரிவுகள், வணிக நிறுவனங்கள், மத நினைவுச் சின்னங்கள் மற்றும் கோயில்கள் திருவள்ளூர் மாவட்டத்தின் முக்கியத்துவத்தை மேம்படுத்துகின்றன. இங்கு வீரராகவ கோவில் இருப்பதால் இன்று திருவள்ளூர் நன்கு அறியப்படுகிறது. ஷேர் பண்ணுங்க.

News August 1, 2024

மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கிய கலெக்டர்

image

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் இன்று தேசிய விண்வெளி தினம் -2024 நிறைவு நாளில் மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர் விண்வெளி செயல்பாடுகள் குறித்து மாணவ, மாணவிகளுக்கு கருத்துரைகள் வழங்கி, விண்வெளி செயல்பாடுகள் குறித்த கண்காட்சி மற்றும் Quiz போட்டிகளில் சிறப்பாக செயல்பட்ட மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

News August 1, 2024

ஆட்சியர் தலைமையில் ஆய்வு கூட்டம்

image

திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று ஆட்சியர் பிரபுசங்கர் தலைமையில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறையின் கீழ் அரசு மருத்துவமனைகளில் செயல்படுத்தப்படும் வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்து ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இந்நிகழ்வில் அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் ரேவதி, சுகாதாரப் பணிகளின் இணை இயக்குநர் மீரா, மாவட்ட சுகாதார அலுவலர் பிரியாராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

News August 1, 2024

திருத்தணி அருகே 2 வயது குழந்தை உயிரிழப்பு

image

திருத்தணி தெக்கலூர் ஊராட்சியை சேர்ந்த ராமாபுரம் இருளர் காலனியில் வசிப்பவர் கண்ணையன்-நந்தினி தம்பதியினர். இவர்களின் 2 வயது ஆண் குழந்தை உறவினர் வீட்டில் விட்டு கணவன்- மனைவி இருவரும் வேலைக்கு சென்றுள்ளனர். உறவினர் வீட்டருகே விளையாடிக் கொண்டிருந்த குழந்தை காணாததால் தேடிய போது அருகில் உள்ள ஓடையில் விழுந்து உயிரிழந்தது தெரியவந்தது. இது குறித்து திருத்தணி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

News August 1, 2024

விபத்தில் உயிரிழந்த ஓட்டுநரின் கண்கள் தானம்

image

ஆர்.கே.பேட்டை சேர்ந்த தனியார் நிறுவன பேருந்து ஓட்டுநர் கேசவன், நேற்று நடந்த சாலை விபத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். இதைத் தொடர்ந்து, அவரது குடும்பத்தினரின் சம்மதத்துடன் அவரது கண்கள் இன்று தானமாக அளிக்கப்பட்டன. இந்த நிகழ்வில், ஆர்.கே.பேட்டை லயன்ஸ் சங்கத்தினர் பங்கேற்றனர். சோகமான சூழலிலும் பிறருக்கு உதவ வேண்டும் என்ற கேசவன் குடும்பத்தினரின் பெருந்தன்மையை, கிராமத்தினர் பாராட்டி வருகின்றனர்.

error: Content is protected !!