India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

திருவள்ளூர் மாவட்ட காவல் துறை சார்பில் நேற்று (26.01.2026) இரவு முதல் இன்று காலை வரை ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் விவரம், காவல் நிலையம் வாரியாக மக்களின் எளிதான தொடர்பு வசதிக்காக வெளியிடப்பட்டுள்ளது.பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் சட்ட ஒழுங்கை உறுதி செய்யும் நோக்கில் மேற்கொள்ளப்படும். மக்கள் தங்களது பகுதிக்கான பொறுப்பு அதிகாரிகளை நேரடியாக தொடர்பு கொள்ளும் வசதியையும் வழங்குகிறது.

பூத் கமிட்டி போட ஆள் இல்லாத கட்சி காங்கிரஸ் என திமுக எம்எல்ஏ கோ தளபதி பேசினார். இந்நிலையில் திருவள்ளூர் எம்பி சசிகாந்த் செந்தில் வெளியிட்டுள்ள செய்தியில் ’கூட்டணியின் ஒருமைப்பாட்டை காக்க வேண்டியது அனைவரின் கடமை.” இதை கோ.தளபதி MLA புரிந்து நடந்து கொள்வார் என நம்புகிறேன் அவருடைய இந்த விமர்சனம் கடும் கண்டனத்திற்குரியது அதை உடனடியாக அவர் திரும்ப பெற வலியுறுத்தியுளார்.

திருவள்ளூர் மக்களே, உணவு பொருளுக்கு எப்படி காலாவதி தேதி உள்ளதோ அதே போன்று, A.26, B.26, C.26, D.26 (A.26-மார்ச் – 2026 என்று அர்த்தம்) என கேஸ் சிலிண்டர்களுக்கும் காலாவதி தேதி குறிப்பிடப்படும். A – (Jan/Feb/Mar), B – (Apr/May/Jun), C – (Jul/Aug/Sep), D – (Oct/Nov/Dec), இனிமே உங்க சிலிண்டரை சரிபார்த்து வாங்குங்க. காலாவதி சிலிண்டராக இருந்தால் 1800-2333-555 புகார் அளியுங்க. இதை அனைவரும் SHARE பண்ணுங்க!

திருவள்ளூர் மக்களே, போஸ்ட் ஆபீஸில் ‘பால் ஜீவன் பீமா யோஜனா’ என்ற திட்டத்தின் கீழ் நாள் ஒன்றுக்கு வெறும் ரூ.6 பிரீமியமாக செலுத்தினால், 5 வருடங்கள் கழித்து ரூ.1 லட்சம் வரை ஆயுள் காப்பீடு கிடைக்கும். இதனை 5 முதல் 20 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் பெயரில் தொடங்கலாம். கூடுதல் தகவலுக்கு உங்கள் அருகிலுள்ள போஸ்ட் ஆபீஸ்-ஐ அணுகவும். (நல்ல தகவலை SHARE பண்ணுங்க)

1.மனித உரிமைகள் ஆணையம் – 044-22410377
2.அரசு பேருந்து குறித்த புகார்கள் – 1800 599 1500
3. ஊழல் புகார் தெரிவிக்க – 044-22321090
4.குழந்தைகளுக்கான அவசர உதவி 1098
5.முதியோருக்கான அவசர உதவி -1253
6.தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி- 1033
7.பெண்கள் பாதுகாப்பு- 181 / 1091. இதனை ஷேர் பண்ணுங்க

திருத்தணி முருகன் கோவிலில் நேற்று(ஜன.25) பெய்த துாரல் மழையிலும், ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர். இந்நிலையில், இன்று(ஜன.26) முதல் மூன்று நாட்களுக்கு ஆட்டோக்கள் செல்ல தடை விதிக்கப் பட்டுள்ளது. மேலும், வருகிற பிப்.1ஆம் தேதி தைப்பூசம் என்பதால், கோயிலுக்கு பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருவர். எனவே, அன்று ஒரு நாள் ஆட்டோக்களுக்கு தடை விதிக்கப்படுவதாக, கோயில் இணை ஆணையர் ரமணி தெரிவித்தார்.

இந்தியாவின் 77ஆவது குடியரசு தினம் நாடு முழுக்க இன்று(ஜன.26) கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. குடியரசு தினத்தையொட்டி இன்று காலை 8 மணிக்கு திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கொடி ஏற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் பிரதாப் கலந்து கொண்டு கொடியை ஏற்றி வைத்தார்

திருவள்ளூர் மாவட்டத்தில் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு மற்றும் காவல் நிலையங்களில் கள்ள மதுபானம், போதைப் பொருள்கள் கடத்தல் போன்ற வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட 44 வாகனங்கள் வருகிற ஜன.29-ஆம் தேதி காலை 10 மணிக்கு திருவள்ளூர் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அலுவலக வளாகத்தில் உள்ள ஆயுதப் படை மைதானத்தில் ஏலம் விடப்பட உள்ளன. இதில் தேவைப்படுவோர் கலந்துகொள்ளலாம். தகவலை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

திருவள்ளூர் மாவட்டத்தில் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு மற்றும் காவல் நிலையங்களில் கள்ள மதுபானம், போதைப் பொருள்கள் கடத்தல் போன்ற வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட 44 வாகனங்கள் வருகிற ஜன.29-ஆம் தேதி காலை 10 மணிக்கு திருவள்ளூர் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அலுவலக வளாகத்தில் உள்ள ஆயுதப் படை மைதானத்தில் ஏலம் விடப்பட உள்ளன. இதில் தேவைப்படுவோர் கலந்துகொள்ளலாம். தகவலை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

திருவள்ளூர்: புழல் விசாரணை சிறையில் திருவல்லிக்கேணியைச் சேர்ந்த ஜோசப்(49) என்பவர் கஞ்சா வழக்கில் கைதாகி அடைக்கப்பட்டார். இந்நிலையில், கடந்த ஜன.21ஆம் தேதி இவருக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது. உடனடியாக அவரை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால், அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று(ஜன.25) ஜோசப் உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
Sorry, no posts matched your criteria.