Thiruvallur

News March 21, 2025

இளைஞர் படுகொலை வழக்கில் 6 பேரிடம் விசாரணை 

image

திருவாலங்காடு அருகே சின்னம்மா பேட்டை லோகேஷ் (24) இவர் கஞ்சா போதை பழக்கத்திற்கு அடிமையானவர். இந்நிலையில் லோகேஷை அடையாளம் தெரியாத நபர்கள் நார்த்தவாடா செல்லும் சாலையில் வெட்டி படுகொலை செய்து விட்டு தப்பி சென்றுள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த திருத்தணி டிஎஸ்பி கந்தன் தலைமையிலான போலீசார் சந்தேகத்தின் பேரில் 6 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News March 21, 2025

ஓட்டுநர், நடத்துநர் பணிக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்

image

ஓட்டுநர், நடத்துநர் பணியிடங்களுக்கு இன்று (மார்.21) முதல் விண்ணப்பிக்கலாம். சென்னை மாநகர போக்குவரத்து கழகம் – 364, மாநில அரசு விரைவு போக்குவரத்து கழகம் – 318, தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் (விழுப்புரம்) – 322 பணியிடங்கள் உள்ளன. 24 வயது நிறைந்திருக்க வேண்டும். 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தமிழில் எழுத பேச தெரிந்திருக்க வேண்டும். ஓட்டுநர் உரிமம் கட்டாயம். <>விண்ணப்பிக்கும்<<>> லிங்க்

News March 21, 2025

திருத்தணி அருகே இளைஞர் வெட்டிக்கொலை

image

திருவள்ளூர் – திருத்தணி, நார்த்தவாடா பகுதியில் இன்று (மார்.21) காலை லோகேஷ் (19) என்ற இளைஞரை மர்ம கும்பல் ஒன்று சரமாரியாக வெட்டி கொலை செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பியோடிய கும்பல் குறித்து திருவாலங்காடு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், கொலைக்கான காரணம் குறித்தும் விசாரித்து வருகின்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

News March 21, 2025

ஆசை வார்த்தை கூறி மாணவியிடம் பாலியல் அத்துமீறல்

image

திருத்தணியை சேர்ந்த பிளஸ் 1 மாணவியிடம், ஜோதிநகரை சேர்ந்த வெங்கடேசன் (26) , காதலிப்பதாக ஆசை வார்த்தைகள் கூறியுள்ளார், இதை நம்பிய அம்மாணவியை மூன்று நாட்களுக்கு முன் ஆந்திர மாநிலத்திற்கு அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. இது குறித்து சிறுமியின் பெற்றோர் கொடுத்த புகாரின்படி போலீசார் வழக்கு பதிவு செய்து,நேற்று வெங்கடேசனை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.

News March 21, 2025

திருவள்ளூரில் கிராம சபை கூட்டம் தேதி மாற்றம்

image

திருவள்ளூர் மாவட்டத்தில் அனைத்து கிராம ஊராட்சிகளிலும், உலக தண்ணீர் தினம் 23.03.2025 அன்று நடைபெற இருந்த கிராம சபை கூட்டம், நிர்வாக காரணங்களால் கிராம சபை கூட்டம் வரும் 29.03.2025 அன்று மாற்றி அமைக்கப்பட்டுள்ளது என ஆட்சியர் தெரிவித்து உள்ளார். இதில் மக்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியர் பிரதான் தெரிவித்துள்ளார்.

News March 20, 2025

திருவள்ளூர் மாவட்ட இரவு ரோந்து போலீஸ் விவரம்

image

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள (20-03-2025) வியாழக்கிழமை அன்று இரவு ரோந்து போலீசார் விவரங்களை காவல் நிலையம் வாரியாக திருவள்ளூர் மாவட்ட காவல்துறை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இரவு நேரங்களில் குற்ற சம்பந்தப்பட்ட நிகழ்வுகள் குறித்து தகவல்கள் தெரிவிக்க மேற்கண்ட தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

News March 20, 2025

துணை மின் நிலையங்கள் அமைத்து வருகிறோம்: அமைச்சர்

image

“திருவள்ளூர் மாவட்டத்தில் 31 துணை மின் நிலையங்கள் அமைக்க இந்த ஆண்டில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதிகரித்து வரும் மின் தேவையை ஈடுசெய்ய, ஆய்வு செய்து தேவையான இடங்களில் துணை மின் நிலையங்கள் அமைத்து வருகிறோம்” என கும்மிடிப்பூண்டி எம்எல்ஏ கோவிந்தராஜன் கேள்விக்கு சட்டப்பேரவையில் அமைச்சர் செந்தில் பாலாஜி பதில் அளித்துள்ளார்.

News March 20, 2025

தீராத வியாதிகளை தீர்க்கும் வைத்திய வீரராகவர்

image

திருவள்ளூரில் பிரசித்தி பெற்ற வீரராகவர் கோவில் உள்ளது. மூலவரை, வைத்திய வீரராகவர், பிணி தீர்க்கும் வீரராகவர் என்றும் பக்தர்கள் அழைக்கிறார்கள். இங்கு 3 அம்மாவாசைகளுக்கு தொடர்ந்து வந்து வழிபட்டால், தீராத வியாதிகள், வயிற்றுவலி, காய்ச்சல் ஆகியவை குணமாகும் என்பது பக்தர்களின் நம்பிகையாக உள்ளது. தவிர, திருமணத்தடை, குழந்தை பாக்கியம் போன்ற வேண்டுதலும் நிறைவேறும் என்பது ஐதீகம். ஷேர் பண்ணுங்க.

News March 20, 2025

அமேசான், பிளிப்கார்ட் கிடங்குகளில் திடீர் சோதனை

image

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அமேசான், பிளிப்கார்ட் நிறுவனத்திற்கு சொந்தமான கிடங்குகளில் இந்திய தர நிர்ணய அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர். இதில் BIS முத்திரை இல்லாத உலோக குடிநீர் பாட்டில்கள், குழந்தைகள் விளையாடும் பொம்மைகள் என ரூ.36 லட்சம் மதிப்பிலான தரமற்ற பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து தரமற்ற பொருட்கள் விற்பனை செய்வதாக புகார் எழுந்த நிலையில் இந்த சோதனை நடத்தப்பட்டுள்ளது.

News March 20, 2025

அமேசான், ஃபிளிப்கார்ட் சேமிப்புக் கிடங்குகளில் சோதனை

image

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அமேசான், ஃபிளிப்கார்ட் சேமிப்புக் கிடங்குகளில் அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு லட்சக்கணக்கில் மதிப்புள்ள தரமில்லாத பொருள்களை பறிமுதல் செய்துள்ளனர். பொருள்களின் சோதிக்கும் மத்திய தர நிர்ணய அதிகாரிகள் இன்று திருவள்ளூர் மாவட்டம் புதுவாயலில், கொடுவள்ளி பகுதிகளில் உள்ள அமேசான் சேமிப்புக் கிடங்கில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து சோதனை மேற்கொண்டனர்.

error: Content is protected !!