India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருவள்ளூர் மாவட்டத்துக்கு ஆடிக்கிருத்திகையை ஒட்டி கடந்த 29ஆம் தேதி உள்ளூர் விடுமுறை வழங்கப்பட்டது. இந்த விடுமுறையை ஈடு செய்யும் வகையில், நாளை ஆகஸ்ட் 10ஆம் தேதி முழு வேலை நாளாக செயல்படும் என மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் அறிவித்திருந்தார். இதனால், நாளை பள்ளி, கல்லூரி, அரசு அலுவலங்கள் அனைத்தும் இயங்கும். அதனால், விடுமுறை என யாரும் நினைத்துவிட வேண்டாம். ஷேர் பண்ணுங்க.
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில், பிரபல ரவுடியான நாகேந்திரனின் பெயர் FIR-இல் சேர்க்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்ட அஸ்வத்தாமன், நாகேந்திரனின் மகன் ஆகும். ஆயுள் கைதியான நாகேந்திரன் வேலூர் சிறையில் இருந்தாலும், வடசென்னை சம்பவங்களை நன்கு அறிந்து வைத்திருப்பவர். இந்நிலையில், அவரை கைது செய்வதற்கு உண்டான ஆணையை செம்பியம் போலீசார் வேலூர் சிறை நிர்வாகத்திடம் வழங்க உள்ளனர்.
திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று சட்டம்- ஒழுங்கு, சாலை பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு ஆய்வு கூட்டம், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தடுப்பு தொடர்பான ஆய்வுக் கூட்டம், போதைப்பொருள் தடுப்பு குறித்து ஒருங்கிணைப்புக் குழு ஆய்வு கூட்டம் மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர் தலைமையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் துறை சார்ந்த அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
சென்னையில் மாநகரப் பேருந்தில் கத்தியுடன் சுற்றிய 10 மாணவர்களை போலீசார் கைது செய்தனர். பூந்தமல்லி-திருவொற்றியூர் சென்ற 101 என்ற பேருந்தில் தனியார் கல்லூரி மாணவர்கள் ஆபாச பாடல்கள் பாடுவதாக பேருந்து ஓட்டுநர், நடத்துனர் தானியங்கிக் கதவை மூடிவிட்டு போலீசாருக்குத் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து, அங்கு வந்த போலீசார் கத்தியுடன் போதையில் இருந்த 11 மாணவர்களை கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்து செய்தனர்.
கும்மிடிப்பூண்டி அடுத்த மாதர்பாக்கம் அருகே செதில்பாக்கத்தில் 118 குடும்பங்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை பாதிரிவேடு போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து வருவாய் துறையினர் ஒரு மாதத்திற்குள் அனைவருக்கும் வீட்டு மனை பட்டா வழங்கப்படும் என போராட்டக் குழுவினரிடம் தெரிவித்தனர்.
திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று இரவு 7 மணி வரை இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை பரவலாக பெய்து வருகிறது. திருவள்ளூர் மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக வெயில் வாட்டி வந்த நிலையில், இன்று மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
பகுஜன் சமாஜ்வாதி கட்சியின் மாநிலத் தலைவர் கே.ஆம்ஸ்ட்ராங் கடந்த ஜூலை 5ஆம் தேதி சென்னை பெரம்பூரில் கூலிப்படையால் வெட்டி கொலை செய்யப்பட்டார். இந்நிலையில், ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு நீதி வேண்டி இயக்குநர் பா.ரஞ்சித் தலைமையில் சென்னை வள்ளூவர் கோட்டத்தில் நாளை மதியம் 2:00 மணியளவில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளதாக நீலம் பண்பாட்டு மையம் அறிவித்துள்ளது.
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தொடர்புடைய ரவுடி சம்போ செந்திலை, தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். இதற்காக, மும்பையில் போலீசார் முகாமிட்டுள்ளனர். மேலும், சம்போ செந்திலின் கூட்டாளியான ஈசாவை, சேலம் மத்திய சிறையில் இருந்து அழைத்து வரப்பட்டு விசாரித்து வருகின்றனர். அதேபோல், மற்றொரு கூட்டாளியான எலி யுவராஜிடமும் சம்போ செந்திலின் தூத்துக்குடி – சென்னை நெட்வொர்க் குறித்து விசாரித்து வருகின்றனர்.
11 வயதுக்கு உட்பட்ட மாநில அளவிலான மினி ரோல்பால் சாம்பியன்ஷிப் போட்டி, திண்டுக்கல் மாவட்டத்தில் நடைபெற்றது. இதில், திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உட்பட 21 மாவட்ட சிறுவர் அணிகள், 8 சிறுமியர் அணிகள் பங்கேற்றன. அனைத்து போட்டிகள் முடிவில், சிறுவர்களில் திருவள்ளூர் மாவட்ட அணி முதலிடம் பிடித்தது. போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு, கோப்பைகள் பரிசாக வழங்கப்பட்டன.
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் 21 பேர் கைது செய்யப்பட்டிருக்கும் நிலையில், இன்று காலை வேலூர் சிறையில் உள்ள பிரபல ரவுடி நாகேந்திரனின் மகன் அஸ்வத்தமன் காவல்துறையால் கைது செய்யப்பட்டு எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். இவரை சென்னை போலீசார் ஆகஸ்ட் 21ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் எடுத்து விசாரிக்க எழும்பூர் நீதிமன்ற மேஜிஸ்திரேட் ஜெகதீசன் உத்தரவிட்டுள்ளார்.
Sorry, no posts matched your criteria.