India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ஆந்திரா மாநிலத்தைச் சேர்ந்த மாணவர்கள் எஸ்ஆர்எம் கல்லூரியில் படித்து வருகின்றனர். இவர்கள் விடுமுறை தினத்தை முன்னிட்டு, இன்று மாலை காரில் 7 பேர் சென்னை-திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் சென்றபோது ராமஞ்சேரி அருகே லாரி மீது கார் மோதி விபத்து ஏற்பட்டது. விபத்தில் 5 கல்லூரி மாணவர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதனிடையே, மாவட்ட எஸ்.பி. மற்றும் கலெக்டர் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர்.
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே லாரி மீது கார் மோதிய விபத்தில் 5 பேர் உயிரிழந்தனர். ராமஞ்சேரி பகுதியில் சென்னை- திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் நடந்த விபத்தில் 5 பேர் பலியாகினர். சென்னை தனியார் கல்லூரி மாணவர்கள் மற்றும் ஓட்டுநர் உட்பட 8 பேர் காரில் பயணித்தபோது விபத்து ஏற்பட்டது. விபத்து குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருவள்ளூர் மாவட்டத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழக கடலோர பகுதிகளில் நிலவும் மேல் வளிமண்டல சுழற்சி காரணமாக கடந்த சில நாட்களாக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இதனால் சாலைகளில் மழைநீர் தேங்க வாய்ப்புள்ளது. இதனால், வெளியே செல்லும்போது குடை மற்றும் ரெயின் கோர்ட் எடுத்து செல்லுங்கள்.
ஆவடி மாநகராட்சியில் ஒப்பந்த தொழிலாளராக பணிபுரிந்து வந்த கோபிநாத் என்பவர் பாதாள சாக்கடைக்குள் இறங்கி சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளார். அப்போது, விஷ வாயு தாக்கியதில் மூச்சுத் திணறல் ஏற்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார். அவரது உடலை மீட்டு ஆவடி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கடந்த ஜனவரி மாதம் ஒருவரும், கடந்த ஆண்டு ஒருவரும் ஆவடி மாநகராட்சியில் விஷ வாயு தாக்கி பலியானது குறிப்பிடத்தக்கது.
ஆந்திர மாநில முன்னாள் அமைச்சரும் ,நடிகையுமான ரோஜா திருத்தணி முருகன் கோயிலுக்கு உறவினர்களுடன் காவடி எடுத்து வழிபாடு மேற்கொண்டார். சாமி தரிசனம் செய்து முருகனுக்கு கற்பூரம் ஏற்றி தேங்காய் உடைத்து நேர்த்திக் கடனை செலுத்தினார். தொடர்ந்து அர்ச்சனை செய்தும் வழிப்பட்டு சென்றார். கோவில் சார்பில் அவருக்கு வரவேற்பும் பிரசாதமும் வழங்கப்பட்டது.
சென்னைக்கு குடிநீர் வழங்கும் புழல் ஏரியில் 2,493 மில்லியன் கன அடி நீரும், சோழவரம் ஏரியில் 96 மில்லியன் கன அடி நீரும், செம்பரம்பாக்கம் ஏரியில் 1,462 மில்லியன் கன அடி நீரும் இருப்பு உள்ளது. மேலும், பூண்டி ஏரியில் 89 மில்லியன் கன அடியும், கண்ணன்கோட்டை தேர்வாய் கண்டிகை ஏரியில் 310 மில்லியன் கன அடி நீரும் இருப்பில் உள்ளதாக இன்று (ஆக.11) காலை பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று (ஆக.10) காலை முதல் இன்று (ஆக.11) காலை வரை பெய்த மழை அளவு வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, திருவள்ளூரில் 17மி.மீ, திருவாலங்காட்டில் 15மி.மீ, ஆர்.கே பேட்டையில் 14மி.மீ, தாமரைப்பாக்கத்தில் 13மி.மீ, பூண்டியில் 7 மி.மீ மழை பெய்துள்ளது. மாவட்டம் முழுவதும் சராசரியாக பெய்த மழை அளவு 66 மி.மீ ஆகும் என பேரிடர் மேலாண்மை ஆணைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அரக்கோணம் பணிமனையில் பராமரிப்பு பணி காரணமாக வரும் 12, 14- ஆம் தேதிகளில் 9 மணி முதல் 1.10 மணி வரை பகுதி நேரமாக மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படவுள்ளது. அதன்படி, சென்ட்ரல் – அரக்கோணம் ரயில் திருவள்ளூர் -அரக்கோணம் இடையே பகுதி நேரமாக ரத்து செய்யப்படுகிறது. இதே போல் சென்ட்ரல்- திருத்தணி ரயில் திருவள்ளூர்- திருத்தணி இடையே பகுதி நேரமாக ரத்து செய்யப்படுகிறது.
திருவள்ளூர் மற்றும் சுற்று வட்டார இடங்களில் மிதமான மழை பெய்து வருகிறது. ஈக்காடு, காக்களூர், மணவாளநகர், திருப்பாச்சூர் உள்ளிட்ட இடங்களில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்து வருகிறது. மேலும் திருத்தணி உள்ளிட்ட சுற்றுவட்டாரத்திலும் மழை பெய்து வருகிறது. காலை முதல் வெயில் வாட்டி வந்த நிலையில், தற்போது மழை பெய்து வருகிறது.
சென்னை சென்ட்ரல் -அரக்கோணம் இடையே ஆக.12,14 ஆகிய தேதிகளில் பகுதி நேரமாக ரயில் சேவை ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. அரக்கோணம் பணிமனையில் பராமரிப்பு பணிகள் காரணமாக காலை 11.10 முதல் 1.10 மணி வரை ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. சென்னை சென்ட்ரல்- அரக்கோணம் வரை காலை 9.10 மணிக்கு இயக்கப்படும் ரயில் திருவள்ளூர் வரை இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.