India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் இன்று (14.06.2024) மாவட்ட ஆட்சித் தலைவர் பிரபுசங்கர் அவர்கள் பெண்களுக்கான ஒருங்கிணைந்த சேவை மையம் (ONE STOP CENTRE) கட்டுவதற்கான இடம் தேர்வு குறித்து கள ஆய்வு மேற்கொண்டார். உடன் மருத்துவமனை ஊழியர்கள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் பலர் கலந்துகொண்டு கள ஆய்வு மேற்கொண்டனர்.
தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தின் சார்பில் காலி பணியிடங்களை நிரப்ப கோரியும், 10 ஆண்டுகள் பணி முடிந்த ஊழியர்களுக்கு பதவி உயர்வு வழங்கிடவும், ஊழியருக்கு குடும்ப பாதுகாப்பு ஊதியம் வழங்கிட வலியுறுத்தி திருவள்ளூர் அருகே பெரியபாளையம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் நிர்வாகிகள் சிவலிங்கம், தினேஷ், சிவா, காந்திமதி, மாரிமுத்து உள்ளிட்ட ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
சோழவரம் அருகே ஆரணி பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையால் மக்களுக்கு இடையூறு இருந்தது. இதையடுத்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் பேரூராட்சித்தலைவர் ராஜேஸ்வரி டாஸ்மாக்கை வேறு இடத்திற்கு மாற்றக் கூறி அதிகாரிகளை சந்தித்து புகாரளித்தார். இந்த நிலையில் மேற்கண்ட டாஸ்மாக் கடையை அதிகாரிகள் நேற்று பூட்டி சீல் வைத்தனர். மேலும், பேருராட்சி தலைவர் ராஜேஸ்வரிக்கு பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்.
திருத்தணி புச்சிரெட்டிப்பள்ளியைச் சேர்ந்தவர் சியாம் சுந்தர் மீது பல்வேறு வழக்குகள் உள்ளன. இவர் ரயில் நிலையத்திலிருந்து வெளியே வந்தபோது, இவரை இவருடைய நண்பர்கள் ஜோதி நகர் சஞ்சய் குமார், விக்ரம், ஜெயக்குமார், லோகேஷ், 17 வயது சிறுவன் ஆகியோர் தாக்கினர். மேலும் நாட்டு வெடிகுண்டு போட்டு கொன்றுவிடுவோம் என மிரட்டியதாக கொடுத்த புகாரின்பேரில் 4 பேர் கைதுசெய்யப்பட்டு லோகேஷை போலீசார் வலைவீசி தேடுகின்றனர்.
தாம்பரம் -மதுரவாயல் பைபாஸ் சாலை, பூந்தமல்லி அருகே தரப்பாக்கம் பகுதியில் இரும்புத் தடுப்பில் நைலான் கயிற்றில் சுமார் 25 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவர் மர்மமான முறையில் இன்று மாலை இறந்து கிடந்தார். தகவல் அறிந்து போலீசார் விரைந்து வந்து சடலத்தை மீட்டு, உடற்கூறு சோதனைக்கு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இவர் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது கொலை செய்யப்பட்டாரா என போலீசார் விசாரிக்கின்றனர்.
திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று (ஜூன்- 13) இரவு ரோந்துப் பணியில் ஈடுபடும் காவல் அதிகாரிகளின் விவரம் மற்றும் தொடர்பு கொள்ள கைப்பேசி எண்கள் வெளியிடப்பட்டு உள்ளது. பொதுமக்கள் குற்றச்சம்பவங்கள் மற்றும் அவசர உதவிக்கு மேற்கண்ட காவல் அதிகாரிகளை தொடர்புக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை திருவள்ளூர் மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது.
திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று (ஜூன் 13) இரவு மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இடியுடன் கூடிய மிதமான மழை இரவு 7 மணி வரை பெய்யக்கூடும் என்றும், இதனால் போக்குவரத்து பாதிக்கப்படக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஆவடி காவல் ஆணையரகத்திற்குட்பட்ட அனைத்து காவல் நிலையங்களிலும் சிறப்பாக பணியாற்றிய காவல் அதிகாரிகள், காவலர்களுக்கு பாராட்டு விழா நேற்று ஆவடியில் நடைபெற்றது. இதில் ஆணையர் கி.சங்கர் கலந்துகொண்டு சிறப்பாக பணியாற்றிய அதிகாரிகள், காவலர்களை பாராட்டி சான்றிதழ், பரிசுகளை வழங்கி கௌரவித்தார். இந்த நிகழ்வில் துணை ஆணையர்கள், உதவி ஆணையர்கள், ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் கலந்து கொண்டனர்.
திருவள்ளூர் மாவட்டத்தில் பதிவான மழை அளவு:
அதிகபட்சமாக ஆவடியில் 6 செமீ, கும்மிடிப்பூண்டி 1.8 செமீ, பொன்னேரி 1 செமீ, செங்குன்றம் தலா 2.8 செமீ, சோழவரம் 3.5 செமீ, திருத்தணி 1.7 செமீ, பூண்டி 2.1 செமீ, செம்பரம்பாக்கம் 8.2 மிமீ, திருவள்ளூர் 3.2 செமீ, ஜமீன் கொரட்டூர் 7 மிமீ, பூவிருந்தவல்லி 7 மிமீ, பள்ளிப்பட்டு 5 மிமீ, மழை அளவு பதிவானது. சராசரியாக திருவள்ளூர் மாவட்டத்தில்
18.81 மிமீ மழை பதிவாகியுள்ளது.
திருத்தணி கோட்டத்தில் நகரம் 2 மின்வாரிய அலுவலகத்துக்குட்பட்ட அ.கூர், தெக்கலூர், சூரிய நகரம், கஜலட்சுமிபுரம், தரணி வராகபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களில் மின்பாதை பராமரிப்பு பணிகள் மேற்கண்ட பகுதிகளில் மேற்கொள்ள உள்ளன. எனவே இப்பகுதிகளில் எல்லாம் இன்று (ஜூன் 13) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்தடை ஏற்படும் என்று திருத்தணி கோட்ட செயற்பொறியாளர் பாஸ்கர் தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.