India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருவள்ளூர் உட்பட சில மாவட்டங்களுக்கு இன்று இரவு 7 மணி வரை இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் சாலைகளில் தண்ணீர் தேங்கி, போக்குவரத்து பாதிப்பு எற்பட வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பகல் முழுவதும் வெயில் வாட்டிய நிலையில் இரவு குளிர்ச்சியான வானிலை நிலவ வாய்ப்புள்ளது.
திருவள்ளூரில் உள்ள சிபிஎம் அலுவலகத்தில் காங்கிரஸ், சிபிஎம், விசிக, சிபிஐ, மதிமுக உள்ளிட்ட கட்சிகள் சார்பில் மதிமுக மாவட்ட செயலாளர் மு.பாபு தலைமையில் கூட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர் மற்றும் வருவாய் துறையினரின் அடாவடி போக்கை கண்டித்து, வரும் 23ஆம் தேதி திருவள்ளூர் ரயில் நிலையம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது என தீர்மானிக்கப்பட்டது.
திமுக இளைஞரணி சார்பில் கருணாநிதி நூற்றாண்டு பேச்சுப்போட்டி விரைவில் நடைபெற உள்ளது. இதில் கல்லூரி மாணவர்கள் பங்கேற்கும் வகையில், அதற்கான விண்ணப்பப் வடிவங்களை சா.மு.நாசர் எம்எல்ஏ இன்று (ஜூலை 12) ஆவடி, பட்டாபிராம் இந்து கல்லூரி நிர்வாகத்திடம் வழங்கினார். நிகழ்வில் கல்லூரி முதல்வர் கல்விக்கரசி, திமுக நிர்வாகிகள் ராஜி, விஜயன் தேசிங்கு, சுரேஷ்குமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
திருவள்ளூர் மாவட்டம் கே.ஜி.கண்டிகையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் 2ம் கட்ட மக்களுடன் முதல்வர் திட்டத்தினை அமைச்சர் காந்தி, கலெக்டர் பிரபுசங்கர், திருத்தணி எம்எல்ஏ சந்திரன் ஆகியோர் முன்னிலையில் தொடங்கி வைத்தார். பின்னர் மனு வழங்கிய பயனாளிகளுக்கு உடனடி தீர்வு கண்டு அதற்கான ஆணைகளை வழங்கினார். மேலும், துறை வாரியாக பயனாளிகளுக்கு நலத்திட்டங்களை வழங்கினார். இதில் டிஆர்ஓ உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
திருவள்ளூர் சரகத்தில் உதவி ஆய்வாளர் கர்ணன், ஊத்துக்கோட்டை சரகத்தில் உதவி ஆய்வாளர் பூபாலன், திருத்தணி சரகத்தில் உதவி ஆய்வாளர் சீனிவாசன், கும்மிடிப்பூண்டி சரகத்தில் உதவி ஆய்வாளர் ஆறுமுகம் ஆகியோர் இன்று (ஜூலை11) இரவு ரோந்து பணியில் ஈடுபடுகின்றனர். மேற்கண்ட அதிகாரிகளின் கைப்பேசி எண்கள் வெளியிடப்பட்டுள்ளது. பொதுமக்கள் அவசர உதவிக்கு மேற்கண்ட காவல் அதிகாரிகளை தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருவள்ளூர் அருகே செவ்வாப்பேட்டை அரசு பள்ளியில் மாணவிகளை பாலியல் தொல்லை கொடுத்ததாக இரு ஆசிரியர்களை நேற்று போலீசார் போக்சோவில் கைது செய்தனர். இதனைக் கண்டித்து இன்று (ஜுலை 11) காலை 9.15 மணி அளவில் சுமார் 200 மாணவிகள் அங்குள்ள சி.டி.எச் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து வட்டாட்சியர் வாசுதேவன் தலைமையில் போலீசார் பேச்சுவார்த்தை நடத்திவருகின்றனர்.
சென்னைக்கு குடிநீர் வழங்கும் புழல் ஏரியில் 2,713 மில்லியன் கன அடி தண்ணீரும், சோழவரம் ஏரியில் 130 மில்லியன் கன அடி தண்ணீரும் செம்பரம்பாக்கம் ஏரியில் 1,439 மில்லியன் கன அடி தண்ணீரும், பூண்டி ஏரியில் 70 மில்லியன் கன அடி தண்ணீரும், கண்ணன்கோட்டை தேர்வாய் கண்டிகை ஏரியில் 300 மில்லியன் கனஅடி தண்ணீரும் இருப்பில் உள்ளது என இன்று (ஜூலை 11) காலை பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று காலை 6 முதல் இன்று காலை 6 மணி வரை பெய்த மழை அளவு விவரம்: பொன்னேரி 78 மிமீ, செங்குன்றம் 75 மிமீ, ஆவடி 73 மிமீ, சோழவரம் 54 மிமீ, தாமரைப்பாக்கம் 48 மிமீ, பூண்டி 28 மிமீ, ஊத்துக்கோட்டை 28 மிமீ, திருவள்ளூர் 25 மிமீ மழை பெய்துள்ளது. மாவட்டத்தில் மொத்தமாக 525 மி.மீட்டர் மழை பெய்துள்ளது. மழை தற்போதும் தொடர்ந்து பெய்துவருவதால் மாவட்ட மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
திருத்தணி கேஜி கண்டிகையில் ஊரகப் பகுதிகளில் மக்களுடன் முதல்வர் திட்டம் 2ம் கட்ட பகுதியை இன்று காலை 9 மணிக்கு அமைச்சர் காந்தி தொடங்கி வைக்கிறார். ஜெகத்ரட்சகன் எம்பி, மாவட்ட ஆட்சியர் டாக்டர் பிரபு சங்கர், எம்எல்ஏ சந்திரன் ஆகியோர் இதில் பங்கேற்கின்றனர். இதில் அகூர் உள்ளிட்ட எட்டு கிராம பொதுமக்கள் பங்கேற்று தங்கள் கோரிக்கைகள் குறித்து மனு நிவாரணம் பெற்றுக்கொள்ள ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
திருவள்ளூரில் உள்ள இந்திரா கல்லூரியில் மாணவர்களுக்கிடையே நடைபெற்ற விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு அளிக்கும் நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்ட நகைச்சுவை நடிகர் யோகிபாபு மாணவர்கள் சாதி மதமின்றி பழகுங்கள் என அறிவுரை வழங்கினார். தொடர்ந்து வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளையும் வழங்கினார்.
Sorry, no posts matched your criteria.