India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சென்னைக்கு குடிநீர் வழங்கும் புழல் ஏரியில் 2,603 மில்லியன் கன அடி தண்ணீரும், சோழவரம் ஏரியில் 114 மில்லியன் கன அடி தண்ணீரும் செம்பரம்பாக்கம் ஏரியில் 1,484 மில்லியன் கன அடி தண்ணீரும், பூண்டி ஏரியில் 123 மில்லியன் கன அடி தண்ணீரும், கண்ணன்கோட்டை தேர்வாய் கண்டிகை ஏரியில் 309 மில்லியன் கன அடி தண்ணீரும் இருப்பில் உள்ளது என இன்று(ஜூலை 27) காலை பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
திருத்தணி முருகன் கோயிலில் 5 நாட்கள் ஆடி கிருத்திகை விழா மற்றும் தெப்ப திருவிழா நடைபெறவுள்ளது. இவ்விழாவிற்கு லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை புரிவார்கள் என்பதால் கோயில் பகுதி, மலைக்கோயில், படிக்கட்டுகள், சரவண பொய்கை, தற்காலிக பேருந்து நிலையங்கள் உள்ளிட்ட பகுதிகளுக்கு நேரடியாக திருவள்ளூர் மாவட்ட போலீஸ் எஸ்பி சீனிவாச பெருமாள் நேற்று பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்தார்.
பகுஜன் சமாஜ் மாநில செயலாளராக இருந்த ஆம்ஸ்ட்ராங் சென்னையில் படுகொலை செய்யப்பட்ட வழக்கில், முக்கிய குற்றவாளியான பிரதீப் நேற்று(ஜூலை 26) கைது செய்யப்பட்டார். பெரம்பூரை சேர்ந்தவர் பிரதீப். இவர் கொடுத்த துல்லியமான தகவல்களே இப்படுகொலைக்கு பெருமளவு உதவியதாக கூறப்படுகிறது. கடந்தாண்டு கொலை செய்யப்பட்ட ஆற்காடு சுரேஷ், பிரதீப்புக்கு சித்தப்பா முறை வேண்டும் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.
திருத்தணி முருகன் கோயிலில் நாளை தொடங்கி ஐந்து நாட்கள் ஆடி கிருத்திகை விழா மற்றும் தெப்ப திருவிழா நடைபெறவுள்ளது. இவ்விழாவிற்கு லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை புரிவார்கள் என்பதால் கோயில் பகுதி, மலைக்கோயில், படிக்கட்டுகள், சரவண பொய்கை, தற்காலிக பேருந்து நிலையங்கள் உள்ளிட்ட பகுதிகளுக்கு நேரடியாக திருவள்ளூர் மாவட்ட போலீஸ் எஸ் பி சீனிவாச பெருமாள் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்தார்.
திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (ஜூலை.26) வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பாக விவசாயிகள் நலன் காக்கும் கூட்டம் நடைபெற்றது. இதில், மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர் தலைமை வகித்தார். தொடர்ந்து அவர் வேளாண்மை துறை மூலம் மாநில தோட்டக்கலை வளர்ச்சித் திட்டத்தில் கத்திரி குழிதட்டு மற்றும் தென்னங்கன்றுகள் ஆகியவற்றின் கீழ் 10 விவசாயிகளுக்கு ரூ.22,260 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
திருமழிசை தொழிற்பேட்டையில் உள்ள கம்பெனியில் நாகப்பட்டினத்தைச் சேர்ந்த அகமது கபீர் (56), செல்வேந்திரன், காதர் ஆகியோர் பங்குதாரர்களாக உள்ளனர். இதில், செல்வேந்திரன் பங்குதாரர்களை ஏமாற்றி மோசடியில் ஈடுபட்டுள்ளார். தினேஷ்(41) என்பவர் மூலம் பங்குதாரர்களை ஏமாற்றி ரூ.27 கோடி மோசடி செய்துள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில் ஆவடி மத்திய குற்றப்பிரிவு போலீசார் தினேஷை கைது செய்தனர்.
திருத்தணி சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் நடைபெறவுள்ள ஆடிக்கிருத்திகை திருவிழாவின் நிகழ்ச்சி அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, 27.07.2024 அஸ்வினி கிருத்திகை, 28.07.2024 பரணி கிருத்திகை, 29.07.2024 ஆடிக்கிருத்திகை மற்றும் முதல் நான் தெப்பம், 30.07.2024 இரண்டாம் நாள் தெப்பம், 31.07.2024 மூன்றாம் நாள் தெப்பம் ஆகிய நிகழ்ச்சிநிரல்கள் மேற்கூறிய தேதிகளில்
நடைபெறவுள்ளது.
திருவள்ளூர் சரகத்தில் ஆய்வாளர் ரவிக்குமார், ஊத்துக்கோட்டை சரகத்தில் ஆய்வாளர் எழுமலை, திருத்தணி சரகத்தில் உதவி ஆய்வாளர் சுகந்தி, கும்மிடிப்பூண்டி சரகத்தில் உதவி ஆய்வாளர் மகேஷ் ஆகியோர் இன்று(ஜூலை26) இரவு ரோந்து பணியில் ஈடுபடுகின்றனர். மேற்கண்ட அதிகாரிகளின் கைப்பேசி எண்கள் வெளியிடப்பட்டு உள்ளது. எனவே பொதுமக்கள் அவசர உதவிக்கு மேற்கண்ட காவல் அதிகாரிகளை தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருத்தணியில் புகழ்பெற்ற முருகன் கோயிலில் ஆடி கருத்திகை மற்றும் தெப்ப திருவிழா நாளை தொடங்கி 5 நாட்கள் நடைபெற உள்ளது. இந்த நிலையில், ஆடிக்கிருத்திகையை ஒட்டி 5 நாட்கள் திருத்தணி நகராட்சி பகுதியில் 500க்கும் மேற்பட்ட தற்காலிக கடைகள் அமைக்கப்படும். சாலையோர கடைகளில் வரி வசூல் செய்யப்பட மாட்டாது என திருத்தணி நகராட்சி அறிவித்துள்ளது.
சென்னைக்கு குடிநீர் வழங்கும் புழல் ஏரியில் 2,603 மில்லியன் கன அடி தண்ணீரும், சோழவரம் ஏரியில் 116 மில்லியன் கன அடி தண்ணீரும் செம்பரம்பாக்கம் ஏரியில் 1,499 மில்லியன் கன அடி தண்ணீரும், பூண்டி ஏரியில் 134 மில்லியன் கன அடி தண்ணீரும், கண்ணன்கோட்டை தேர்வாய் கண்டிகை ஏரியில் 310 மில்லியன் கன அடி தண்ணீரும் இருப்பில் உள்ளது என இன்று (ஜூலை 26) காலை பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
Sorry, no posts matched your criteria.