India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர் விடுத்துள்ள செய்தி குறிப்பில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக கடந்த செ10 முதல் செ24 வரை மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றது. இதில் வெற்றி பெற்ற 2412 வீரர்களுக்கு இன்று மாலை4 மணி அளவில் பட்டரைபெரும்புதூர் உள்ள சென்னை அம்பேத்கர் சட்டக் கல்லூரியில் வளாகத்தில் பரிசளிப்பு விழா நடக்கிறது. என தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று இரவு 10.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.
திருவள்ளூர் காவல்துறை வெளியிட்டுள்ள செய்தியில் இந்தியா போஸ்ட்-லிருந்து டெலிவரி முகவரியில் பிழை உள்ளதாகவும் அதனால் பேக்கேஜ் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. எனவே டெலிவரி முகவரியை புதுபிக்க வேண்டும் என குறுஞ்செய்தியுடன் லிங்க் அனுப்பப்படுகிறது. தற்போது டெலிவரி முகவரி பிழைத்திறுத்தம் என புதுவகையான சைபர் மோசடி நடைபெறுவதால், பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்கும் படி மாவட்ட காவல்துறை தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் இன்று 27 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, திருவள்ளூர் மாவட்டத்தில் இரவு 7 மணி வரை இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவித்துள்ளது. உங்கள் பகுதிகளில் மழை பெய்தால் தெரிவிக்கவும்.
சின்னத்திரை நடிகை சித்ரா மர்ம மரணம் குறித்து அவரது கணவர் கைது செய்யப்பட்டிருந்த நிலையில், திருவள்ளூர் மாவட்ட மகளிர் நீதிமன்றம் கடந்த சில மாதங்களுக்கு முன் அளித்த தீர்ப்பில் ஹேம்நாத் விடுதலை செய்யப்பட்டார். இந்த நிலையில் அவரது விடுதலையை எதிர்த்து சித்ராவின் தந்தை காமராஜ் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து உள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வர இருப்பதாக கூறப்படுகிறது.
திருவள்ளூர் மாவட்டத்தில் ஃபேஸ்புக் மற்றும் வாட்ஸ் அப் போன்ற செயலிகளில் மூலம் வரும் குறுஞ்செய்திகளில் Trading-ல் முதலீடு செய்தால் இரு மடங்கு லாபம் பெறலாம் என போலியான விளம்பரங்கள் மற்றும் குறுஞ்செய்திகளை நம்பி பொதுமக்கள் லட்ச கணக்கில் பணத்தை முதலீடு செய்து ஏமாற வேண்டாம். இணைப்புகளில் இணைய வேண்டாம் என திருவள்ளூர் காவல்துறை எச்சரித்துள்ளது.
தமிழகத்தில் இன்று 22 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, திருவள்ளூர் மாவட்டத்தில் இரவு 7 மணி வரை இடி, மின்னலுடன் மழை பெய்யக்கூடும் என தெரிவித்துள்ளது. அதற்கான ஆரஞ்சு எச்சரிக்கையும் விடுத்துள்ளது. உங்கள் பகுதியில் மழை பெய்தால் தெரிவிக்கவும்.
திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர் வருகின்ற அக் 2 ஆம் தேதி புதன்கிழமை காந்தி ஜெயந்தி முன்னிட்டு மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம் காலை 11 மணியளவில் நடத்த வேண்டும். இந்த கிராம சபை கூட்டத்தில் கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொது நிதி செலவினம் குறித்து விவாதித்தல் உள்ளிட்ட விவாதங்களில் பொதுமக்கள் பங்கேற்குமாறு அழைப்பு விடுத்துள்ளார்.
திருவள்ளூர் மாவட்டத்தில் பழுதடைந்த அரசு தொடக்க, நடுநிலைப் பள்ளிகளை சீரமைக்கவும், புதிய பள்ளி கட்டடம் மற்றும் வகுப்பறைகள் கட்டுவதற்கு, 10.82 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து, ஆட்சியர் அனுமதி வழங்கியுள்ளார். இப்பணிகள் 6 மாதத்திற்குள் முடித்து பயன்பாட்டிற்கு வர வேண்டும் என, வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கு ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.
திருவள்ளூர் மாவட்டம் பொதட்டூர்பேட்டை அடுத்த கொத்தகுப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் விஜயலுநாயுடு. இவருடைய வீட்டின் பூட்டை உடைத்து 99 சவரன் நகை, 70 ஆயிரம் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர். கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Sorry, no posts matched your criteria.