India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருவள்ளுர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று (ஜூலை 31) மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர் தலைமையில், ஊரக வளர்ச்சி துறையில் செயல்படுத்தப்பட்டு வரும் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து துறை அலுவலர்களுடன் ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இதில், மாவட்ட வருவாய் அலுவலர் ராஜ்குமார் மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.
சென்னை கோயம்பேடு – ஆவடி இடையே மெட்ரோ ரயில் வழித்தடம் அமைக்க, விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க ஒப்பந்தம் கையெழுத்தானது. கோயம்பேட்டில் இருந்து பாடி, அம்பத்தூர் வழியே ஆவடி வரை தோராயமாக 16 கி.மீ தூரத்திற்கு, 15 உயர்மட்ட மெட்ரோ நிலையங்களுடன் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. நவம்பர் 2024 ஆம் ஆண்டுக்குள் பணிகள் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆவடி காவல் ஆணையரகத்தில் உட்பட்ட பகுதிகளில், தொடர் குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு வந்த 114 பேரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில், 68 ரவுடிகள், திருட்டு வழக்கில் 15 பேர், போதை பொருட்கள் விற்பனை வழக்கில் 24 பேர், கள்ளச்சந்தை வழக்கில் 4 பேர், இணையதள குற்ற வழக்கில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக நேற்று (ஜூலை 30) ஆணையரகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆர்.கே.பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் கேசவன். இவர், ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தனியார் கம்பெனியில் தொழிலாளர்களை ஏற்றி செல்லும் பேருந்து ஓட்டி வருகிறார். நேற்று வழக்கம்போல் தொழிலாளர்களை ஏற்றிக்கொண்டு காட்டூர் அருகே செல்லும்போது, மினி பேருந்து கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் உள்ள பனை மரத்தின் மீது மோதியது. இதில், பலத்த காயம் அடைந்த கேசவன் சம்பவ இடத்தில் உயிரிழந்தார். 2 பேருக்கு லேசான காயம் ஏற்பட்டது.
திருவள்ளூர் அருகே குழாய் போட எதிர்ப்பு தெரிவித்து ஏற்பட்ட கோஷ்டி மோதலில் கத்திக்குத்து விழுந்ததையடுத்து 11 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கடம்பத்தூர் பகுதியைச் சேர்ந்த வனிதா என்பவரது வீட்டருகே, மதன், கார்த்திக், அபிமன்யு, சத்யராஜ், சூர்யா ஆகியோர் குழாய் போடுவதற்காக வந்திருந்தனர். அப்போது ஏற்பட்ட தகராறில், மதன் தரப்பினரை கையால் தாக்கி பின்னர் கத்தியால் வெட்டியதாக கூறப்படுகிறது.
திருவள்ளூர் மாவட்டம் காக்களூர் பால் பண்ணையில், ரூ.3.50 கோடி மதிப்பீட்டில் 5,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட தயிர் உற்பத்தி ஆலை திறப்பு நேற்று திறக்கப்பட்டது. இதனை, காணொளி காட்சி வாயிலாக முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார். இதனைத் தொடர்ந்து, பால் பண்ணையில் திறப்பு விழா நிகழ்ச்சியில் பூந்தமல்லி எம்எல்ஏ ஆ.கிருஷ்ணசாமி கலந்து கொண்டு மக்கள் பயன்பாட்டிற்கு ஆலையை தொடங்கி வைத்து பார்வையிட்டார்.
மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை, நீலகிரி உள்பட 27 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. அதன்படி திருவள்ளூரில் அடுத்த 3 மணி நேரத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருவள்ளூர் மற்றும் திருத்தணி ஆகிய இடங்களில் சமூக நலத்துறை சார்பில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிய தகுதியான பெண்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. https://tiruvallur.nic.in என்ற இணையதள முகவரில் நாளைக்குள் (ஜூலை. 31) விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து சமர்பிக்குமாறு மாவட்ட நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது. மாத சம்பளம் ரூ.22,000 வரை வழங்கப்படும்.
திருமழிசை பேரூராட்சி தலைவருக்கான மறைமுக இடைத்தேர்தல், வரும் ஆகஸ்ட் 6ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில், திமுக மற்றும் அதிமுக இடையே கடுமையான போட்டி நிலவுகிறது. தற்போது பொறுப்பு தலைவராக இருக்கும் ஜெ.மாகாதேவன் திமுக சார்பாகவும், அதிமுக வேட்பாளராக நகர செயலாளர் டி.எம்.ரமேஷ் போட்டியிடும் நிலையில், உள்ளாட்சியில் நடக்கும் ஒரே இடைத்தேர்தல் என்பதால் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
திருவள்ளுரில் நாளை (ஜூலை 31) மின்வாரிய பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால், ஆவடி, பட்டாபிராம், சேக்காடு, தண்டுரை, கோபாலபுரம், ஐயப்பன் நகர், ஸ்ரீதேவி நகர், கண்ணப்பாளையம், வி.ஜி.என் நகர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை ஏற்படும். பொதுமக்கள் அதற்கு ஏற்றவாறு தங்களது பணிகளை மாற்றி அமைத்துக் கொள்ளுமாறு மின்வாரியம் தெரிவித்துள்ளது. ஷேர் பண்ணுங்க.
Sorry, no posts matched your criteria.