India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
அம்பத்தூர், ஐ.சி.எப் காலனியைச் சேர்ந்தவர் ராஜேஷ் (23). இவரிடம் முகப்பேர் பகுதியைச் சேர்ந்த மூர்த்தி (32) என்பவர் கஞ்சா விற்குமாறு கட்டாயப்படுத்தியுள்ளார். இதனை மறுத்த ராஜேஷை, மூர்த்தி தனது நண்பர்களுடன் சேர்ந்து கொலை செய்து அம்பத்தூர் ஏரியில் நேற்று வீசியுள்ளார். போலீசார், மூர்த்தி, யுவராஜ்(19), சிவகுமார்(23), சரவணன்(27), நந்தகுமார்(22), சுஜித் (21) ஆகிய 6 பேரை இன்று (ஆக.2) கைது செய்தனர்.
மீஞ்சூர் அடுத்த உத்தண்டி கண்டிகை நாலூரில், ‘ஜாக்’ என்ற உள்ளூர் சிலம்பம் அகாடமி ஒன்று செயல்படுகிறது. இதில் பயிற்சி பெறும் மாணவர்கள், தமிழ்நாடு அமெச்சூர் சிலம்பம் அசோசியேசன் சார்பில், கோயம்புத்தூர் கற்பகம்பாள் பல்கலைக்கழகத்தில் நடந்த 21ஆவது மாநில அளவிலான சிலம்ப போட்டியில் பங்கேற்றனர். இதில், ஜூனியர், சீனியர் 28 பேர் பங்கேற்று தங்கம், வெள்ளி , வெண்கலப் பதக்கங்களை வென்று சாதனை படைத்தனர்.
திருவள்ளூர், தமிழ்நாட்டில் வேகமாக வளரும் ஒரு மாவட்டம். இம்மாவட்டம், தொழில்துறை மற்றும் வர்த்தக முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்த்துள்ளது. பல கல்வி நிறுவனங்கள், உற்பத்தி பிரிவுகள், வணிக நிறுவனங்கள், மத நினைவுச் சின்னங்கள் மற்றும் கோயில்கள் திருவள்ளூர் மாவட்டத்தின் முக்கியத்துவத்தை மேம்படுத்துகின்றன. இங்கு வீரராகவ கோவில் இருப்பதால் இன்று திருவள்ளூர் நன்கு அறியப்படுகிறது. ஷேர் பண்ணுங்க.
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் இன்று தேசிய விண்வெளி தினம் -2024 நிறைவு நாளில் மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர் விண்வெளி செயல்பாடுகள் குறித்து மாணவ, மாணவிகளுக்கு கருத்துரைகள் வழங்கி, விண்வெளி செயல்பாடுகள் குறித்த கண்காட்சி மற்றும் Quiz போட்டிகளில் சிறப்பாக செயல்பட்ட மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று ஆட்சியர் பிரபுசங்கர் தலைமையில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறையின் கீழ் அரசு மருத்துவமனைகளில் செயல்படுத்தப்படும் வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்து ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இந்நிகழ்வில் அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் ரேவதி, சுகாதாரப் பணிகளின் இணை இயக்குநர் மீரா, மாவட்ட சுகாதார அலுவலர் பிரியாராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
திருத்தணி தெக்கலூர் ஊராட்சியை சேர்ந்த ராமாபுரம் இருளர் காலனியில் வசிப்பவர் கண்ணையன்-நந்தினி தம்பதியினர். இவர்களின் 2 வயது ஆண் குழந்தை உறவினர் வீட்டில் விட்டு கணவன்- மனைவி இருவரும் வேலைக்கு சென்றுள்ளனர். உறவினர் வீட்டருகே விளையாடிக் கொண்டிருந்த குழந்தை காணாததால் தேடிய போது அருகில் உள்ள ஓடையில் விழுந்து உயிரிழந்தது தெரியவந்தது. இது குறித்து திருத்தணி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
ஆர்.கே.பேட்டை சேர்ந்த தனியார் நிறுவன பேருந்து ஓட்டுநர் கேசவன், நேற்று நடந்த சாலை விபத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். இதைத் தொடர்ந்து, அவரது குடும்பத்தினரின் சம்மதத்துடன் அவரது கண்கள் இன்று தானமாக அளிக்கப்பட்டன. இந்த நிகழ்வில், ஆர்.கே.பேட்டை லயன்ஸ் சங்கத்தினர் பங்கேற்றனர். சோகமான சூழலிலும் பிறருக்கு உதவ வேண்டும் என்ற கேசவன் குடும்பத்தினரின் பெருந்தன்மையை, கிராமத்தினர் பாராட்டி வருகின்றனர்.
வரும் ஆகஸ்ட் 10ஆம் தேதி (சனிக்கிழமை) திருவள்ளூர் மாவட்டத்திற்கு முழு வேலை நாள் ஆகும். ஆம், கடந்த 29ஆம் தேதி ஆடி கிருத்திகையை முன்னிட்டு திருவள்ளூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட கலெக்டர் பிரபு சங்கர் உத்தரவிட்டார். அதனை ஈடு செய்யும் விதமாக, ஆகஸ்ட் 10ஆம் தேதி வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதனால், பள்ளி, கல்லூரி மாணவர்கள், அரசு ஊழியர்கள் விடுமுறை என்று நினைத்துவிட வேண்டாம்.
நில மோசடி வழக்கில் பாதிக்கப்பட்ட நடிகை கவுதமி விசாரணைக்காக நேற்று காஞ்சிபுரம் நீதிமன்றத்தில் ஆஜரானார். திருவள்ளூரில் உள்ள தனது நிலத்தை விற்று தருமாறு அழகப்பனிடம் கவுதமி கேட்டுள்ளார். அழகப்பன் தனது நண்பர்களுடன் சேர்ந்து கவுதமியின் சொத்துகளை அபகரித்துள்ளார். இதுதொடர்பான வழக்கில், ஜாமின் கோரி அழகப்பன் மனுத்தாக்கல் செய்துள்ளார். அவருக்கு ஜாமின் வழங்க கூடாது என நேற்று நீதிபதியிடம் கவுதமி தெரிவித்தார்.
திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர் தலைமையில் இன்று (ஜூலை 31) நடைபெற்ற கூட்டுறவு செயல் திட்ட பணிகள் குறித்த ஆய்வு கூட்டத்தில் காஞ்சிபுரம் மத்திய கூட்டுறவு வங்கி மூலம் 25 பயனாளிகளுக்கு ரூ.89.86 லட்சம் வங்கி கடன் உதவிக்கான காசோலையினை வழங்கினார். நிகழ்வில் காஞ்சிபுரம் மத்திய கூட்டுறவு வங்கியின் கூடுதல் பதிவாளர் சிவமலர், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் சண்முகவள்ளி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
Sorry, no posts matched your criteria.