India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருமழிசை பேரூராட்சித் தலைவராக இருந்த வடிவேலு, கடந்த மே மாதம் விபத்தில் உயிரிழந்தார். இதையடுத்து, தலைவர் பதவிக்கான தேர்தல் இன்று (ஆகஸ்ட் 6) நடைபெற்றது. இதில், திமுக சார்பில் மகாதேவன் போட்டியிட்டார். அவரை எதிர்த்து அதிமுக சார்பில் யாரும் போட்டியிடாததால், மகாதேவன் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். அவருக்கு திமுக மாவட்டச்செயலாளரும், எம்.எல்.ஏ.வுமான சா.மு.நாசர் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்தனர்.
திருமழிசை பேரூராட்சித் தலைவருக்கான இடைத்தேர்தலை, அதிமுக புறக்கணித்துள்ளது. பேரூராட்சி தலைவராக இருந்த வடிவேலு, கடந்த மே மாதம் நடந்த விபத்தில் சிக்கி உயிரிழந்தார். இதனால், தலைவர் பதவிக்கான இடைத்தேர்தல் இன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இதில், திமுக சார்பாக மகாதேவன் மற்றும் அதிமுக சார்பாக ரமேஷ் ஆகியோர் போட்டியிட்ட நிலையில், கடைசி நேரத்தில் அதிமுக தேர்தலை புறக்கணித்துள்ளது.
திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று (ஆகஸ்ட் 5) காலை முதல் இன்று (ஆகஸ்ட் 6) காலை வரை பெய்த மழை அளவு: திருவேலங்காட்டில் 26 மி.மீ, ஊத்துக்கோட்டை 16 மி.மீ, பள்ளிப்பட்டு 15 மி.மீ, சோழவரம், பூண்டி, செங்குன்றம் இடங்களில் 11 மி.மீ மழை பெய்துள்ளது. மாவட்டத்தில் சராசரியாக 14 மி.மீட்டர் மழை பெய்துள்ளது. தொடர்ந்து 2 நாள்களாக பெய்து வரும் மழையால் ஏரிகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
திருவள்ளூர் மாவட்டம் திருமழிசை பேரூராட்சி தலைவர் பதவிக்கான இடைத்தேர்தல், இன்று (ஆகஸ்ட் 6) பேரூராட்சி அலுவலகத்தில் நடைபெற உள்ளது. இதில், திமுக சார்பாக மகாதேவன் மற்றும் அதிமுக சார்பாக ரமேஷ் ஆகியோர் போட்டியிடுகின்றனர். கடந்த மே மாதம் நடந்த விபத்து ஒன்றில், பேரூராட்சி தலைவர் வடிவேல் சாலை விபத்தில் உயிரிழந்தார். அவரது மறைவைத் தொடர்ந்து, புதிய தலைவருக்கான தேர்தல் நடைபெற உள்ளது. யார் வெற்றி பெறுவார்?
சென்னை துறைமுகம் பகுதியில் இருந்து நிலக்கரியை ஏற்றிக்கொண்டு சரக்கு ரயில் இன்று மாலை மும்பைக்கு புறப்பட்டது. இந்த ரயில் திருவள்ளூர், அரக்கோணம் வழியாக திருத்தணி ரயில் நிலையம் பகுதியில் செல்லும்போது திடீரென ரயில் இணைப்பு பெட்டி துண்டிக்கப்பட்டு சிறிது தூரம் ரயில் பின்னோக்கி ஓடியது. இதன் பின்னர் காட் கொடுத்த தகவலின் பேரில் உடனடியாக ரயில் நிறுத்தப்பட்டு சரி செய்து அதன் பின்னர் ரயில் புறப்பட்டது.
திருவள்ளூர் மாவட்டம், ஆர்.கே.பேட்டை வட்டத்துக்குட்பட்ட வெள்ளாத்தூர் கிராமம் சி.எம். அண்ணாமலை பாலிடெக்னிக் கல்லூரியிலும், பள்ளிப்பட்டு ஒன்றியம் கரிம்பேடு பத்மாவதி திருமண மண்டபத்திலும் நாளை காலை 10 மணிக்கு மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் நடைபெற உள்ளது. அப்பகுதியைச் சேர்ந்த மக்கள் கோரிக்கை மனுக்களை வழங்கி நிவாரணம் தேடிக் கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் அறிவித்துள்ளார்.
திருவள்ளூர் மாவட்ட பழவேற்காடு – பூம்புகார் மீனவர்களிடையே கடலில் திடீரென மோதல் ஏற்பட்டுள்ளது. 5 நாட்டிக்கல் தூரத்தில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது, ஒருவரையொருவர் சரமாரியாக தாக்கிக் கொண்டனர். இந்த மோதலில் 2 பேருக்கு பலத்த காயம் ஏற்பட்டு, சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். எல்லைத் தாண்டி வந்து மீன்பிடிப்பதாக, ஏற்கெனவே இவர்களிடையே தகராறு ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
எண்ணூர் முதல் மகாபலிபுரம் வரை ரூ.12,301 கோடி திட்ட மதிப்பீட்டில் 133 கி.மீ நீளம் கொண்டு நடைபெற்று வரும் சென்னை சுற்று வட்டச்சாலையான 6 வழிச்சாலை திட்டப் பணியின் 2ஆவது பிரிவான புன்னப்பாக்கம் முதல் திருவள்ளுர் வரை நடைபெற்று வரும் சாலைப் பணிகளை அமைச்சர் உதயநிதி இன்று ஆய்வு செய்தார். இந்நிகழ்வில், அமைச்சர் எ.வ.வேலு, ஆட்சியர் பிரபுசங்கர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான பொன்னை பாலு, ராமு, அருள், ஹரிதரன், சிவசக்தி ஆகிய 5 பேரை, 7 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க எழும்பூர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. இதனால், பூந்தமல்லி கிளை சிறையில் அடைக்கப்பட்டிருந்த அவர்களை, போலீசார் பாதுகாப்புடன் அழைத்துச் சென்றனர். பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவரான ஆம்ஸ்ட்ராங், கடந்த 5ஆம் தேதி மர்ம நபர்களால் படுகொலை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று காலை முதல் இன்று காலை வரை பெய்த மழை அளவு பின் வருமாறு:- திருவள்ளூர், ஆவடி, ஜமீன் கொரட்டூர் ஆகிய பகுதிகளில் 25 மி.மீ, ஊத்துக்கோட்டையில் 24 மி.மீ, சோழவரத்தில் 22 மி.மீ, பூந்தமல்லியில் 19 மி.மீ, செங்குன்றத்தில் 18 மி.மீட்டர் மழை பெய்துள்ளது. மாவட்டத்தில் மொத்த மழை அளவு 19.மி.மீட்டர். கடந்த இரு தினங்களாக மாவட்டத்தில் மழை பெய்வதால் ஏரிகளுக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது.
Sorry, no posts matched your criteria.