Thiruvallur

News August 10, 2024

தலைவர்களுக்கு பாதுகாப்பு வழங்குவது அரசின் கடமை

image

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் காவல்துறை ஆரம்பத்தில் சுணக்கமாக இருந்தாகவும் தற்போது விசாரணை தீவிரமாக நடைபெற்றுக் வருவதாகவும் புரட்சி பாரதம் கட்சித் தலைவர் ஜெகன் மூர்த்தி தெரிவித்தார். அதுமட்டுமல்லாமல், மக்களுக்கும், தலைவர்களுக்கும் பாதுகாப்பு வழங்க வேண்டியது அரசின் கடமை என கூறினார். மேலும், வரும் சட்டமன்ற தேர்தலில் கூட்டணி குறித்து தேர்தலுக்கு 2 மாதங்கள் முன்னதாக தெரிவிக்கப்படும் என்றார்.

News August 9, 2024

திருவள்ளூரில் நாளை பள்ளிகள் இயங்கும்

image

தமிழகம் முழுவதும் 2 ஆம் சனிக்கிழமையான நாளை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து முதன்மை கல்வி அலுவலர் இன்று உத்தரவிட்டார். ஆனால், திருவள்ளூரில் ஆடிக்கிருத்திகையை ஒட்டி கடந்த 29ஆம் தேதி உள்ளூர் விடுமுறை வழங்கப்பட்டது. இந்த விடுமுறையை ஈடு செய்யும் வகையில், நாளை முழு வேலை நாளாக செயல்படும் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதனால், நாளை பள்ளி, கல்லூரி, அரசு அலுவலங்கள் அனைத்தும் இயங்கும். ஷேர் பண்ணுங்க.

News August 9, 2024

திருவள்ளூரில் காற்றுடன் மழை

image

திருவள்ளூர் மாவட்டத்தில் காலை முதல் வெயில் வாட்டி வந்தநிலையில், தற்போது பரவலாக மழை பெய்து வருகிறது. பொன்னேரி, மீஞ்சூர், பழவேற்காடு, சோழவரம், செங்குன்றம், புழல், கும்மிடிப்பூண்டி சுற்றுவட்டார இடங்களில் பலத்த காற்றுடன் மிதமான மழை பெய்து வருகிறது. திருவள்ளூர் மாவட்டத்தில் காற்றுடன் கூடிய மழை பெய்து வருவதால் பல இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.

News August 9, 2024

திருவள்ளூரில் தமிழ்ப் புதல்வன் திட்டம் தொடக்கம்

image

திருவள்ளூர் மாவட்டம், பட்டறைபெரும்புதூரில் உள்ள அரசு சட்டக் கல்லூரியில் தமிழ்ப் புதல்வன் திட்டத்தின் கீழ் பயன்பெறும் 6,681 மாணவர்களுக்கு வங்கி பற்று அட்டையை அமைச்சர் ஆர்.காந்தி இன்று (ஆக.9) வழங்கினார். இந்தநிகழ்வில் மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர், எம்எல்ஏக்கள் வி.ஜி.ராஜேந்திரன், எஸ்.சந்திரன், எஸ்.சுதர்சனம், துரை.சந்திரசேகர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

News August 9, 2024

திருவள்ளூரில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

image

தமிழ்நாட்டில் வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட 6 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் ஒரு சில இடங்களிலும், இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (30 – 40 கி.மீ வேகத்தில்) கூடிய லேசானது முதல் கனமழை பெய்யக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News August 9, 2024

திருவள்ளூர் மாவட்டத்தில் ஏரிகளின் நீர்மட்ட விபரம்

image

சென்னைக்கு குடிநீர் வழங்கும் புழல் ஏரியில் 2,490 மில்லியன் கன அடி தண்ணீரும், சோழவரம் ஏரியில் 98 மில்லியன் கன அடி தண்ணீரும் செம்பரம்பாக்கம் ஏரியில்1,491 மில்லியன் கன அடி தண்ணீரும், பூண்டி ஏரியில் 86 மில்லியன் கன அடி தண்ணீரும், கண்ணன்கோட்டை தேர்வாய் கண்டிகை ஏரியில் 307 மில்லியன் கன அடி தண்ணீரும் இருப்பில் உள்ளது என இன்று (ஆக.9) காலை பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

News August 9, 2024

பொன்னேரியில் ப்ளூ காய்ச்சல் பாதிப்பு அதிகரிப்பு

image

பொன்னேரி, மீஞ்சூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக மழை விட்டு விட்டு பெய்து வருகிறது. இந்நிலையில், பருவநிலை மாற்றம் காரணமாக சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை ப்ளூ காய்ச்சலால் அதிகளவில் பரவி வருகிறது. இதனால் தனியார் மருத்துவமனை மற்றும் அரசு மருத்துவமனைகளில் நோயாளிகள் கூட்டம் சமீபமாக அதிகரித்த நிலையில், பொன்னேரி அரசு மருத்துவமனையில் நோயாளிகள் கூட்டம் அதிகரிக்க தொடங்கியுள்ளது.

News August 9, 2024

ஆம்ஸ்ட்ராங் வழக்கில் பாஜக பிரமுகருக்கு சம்மன்

image

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் வடசென்னை பாஜக வழக்கறிஞர் பால் கனகராஜ் நேரில் ஆஜராக போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர். போலீசார் சம்மன் அனுப்பியதைத் தொடர்ந்து, போலீசார் அவரிடம் இன்று விசாரணை நடத்த உள்ளனர். நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில், பால் கனகராஜ் வடசென்னை தொகுதியில் போட்டியிட்டார். பிரபல ரவுடிகள் சம்போ செந்தில், நாகேந்திரனுக்கு வழக்கறிஞராக செயல்பட்டதால் போலீசார் அவரிடம் விசாரணை நடத்த உள்ளனர்.

News August 9, 2024

ஆம்ஸ்ட்ராங் குடும்பத்தினருக்கு மிரட்டல்: ஒருவர் கைது

image

ஆம்ஸ்ட்ராங் குடும்பத்தினருக்கு கொலை மிரட்டல் விடுத்தது தொடர்பாக போலீசார் ஒருவரை கைது செய்த்துள்ளனர். ஆம்ஸ்ட்ராங் மனைவி மற்றும் குழந்தையை கொலை செய்து விடுவதாக, கடந்த சில நாட்களுக்கு முன்பு அவரது வீட்டிற்கு கடிதம் ஒன்று வந்தது. இதையடுத்து, அவரது வீட்டிற்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. மிரட்டல் தொடர்பாக கடலூரைச் சேர்ந்த பள்ளித் தாளாளர் அருண்ராஜை போலீசார் தற்போது கைது செய்துள்ளனர்.

News August 9, 2024

திருவள்ளூர் மாவட்டத்திற்கு நாளை முழு வேலை நாள்

image

திருவள்ளூர் மாவட்டத்துக்கு ஆடிக்கிருத்திகையை ஒட்டி கடந்த 29ஆம் தேதி உள்ளூர் விடுமுறை வழங்கப்பட்டது. இந்த விடுமுறையை ஈடு செய்யும் வகையில், நாளை ஆகஸ்ட் 10ஆம் தேதி முழு வேலை நாளாக செயல்படும் என மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் அறிவித்திருந்தார். இதனால், நாளை பள்ளி, கல்லூரி, அரசு அலுவலங்கள் அனைத்தும் இயங்கும். அதனால், விடுமுறை என யாரும் நினைத்துவிட வேண்டாம். ஷேர் பண்ணுங்க.

error: Content is protected !!