India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருத்தணி முருகன் கோயில் மற்றும் உப கோயில்களில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தப்படும் சேலை, வேஷ்டி மற்றும் துணி வகைகளை கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. இதனை இன்று திருத்தணி சந்திரன் எம்எல்ஏ பெண் பக்தர்களுக்கு இலவசமாக வழங்கினார். இதில் இணை ஆணையர் ரமணி, அறங்காவலர் மு .நாகன், திமுக நிர்வாகிகள் ஜி எஸ் கணேசன், மிக்ஸி சுரேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
ஊத்துக்கோட்டை அடுத்த கெருகம்பாக்கத்தில் ரூபாய் 25 லட்சம் மதிப்பீட்டில் தமிழக அரசின் மரகத சோலை பூங்காவை காணொளி காட்சி மூலம் தமிழக முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார். பூங்காவில் நடந்த நிகழ்ச்சியில் கும்மிடிப்பூண்டி எம்எல்ஏ டிஜே கோவிந்தராஜன் கலந்து கொண்டு பூங்கா குறித்து விவரித்து பேசினார். மேலும் வனத்துறை அதிகாரிகள் குழந்தைகளுடன் பூங்காவில் சிறிது நேரம் சுற்றி பார்த்தனர்.
சோழவரம் ஊராட்சி மன்ற துணைத் தலைவரின் கணவரும், திமுக பிரமுகருமான ஜெகன் என்பவரது வீட்டில் மர்மநபர்கள் நாட்டு வெடிகுண்டு வீசியதில் இரண்டு கார்கள் சேதமடைந்துள்ளன. மேலும், சென்னை – கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் லாரிகள் நிறுத்தும் யார்டில் நாட்டு வெடிகுண்டு வீசிய மர்மநபர்கள் அதனை தடுக்க வந்த லாரி ஓட்டுரின் கையில் கத்தியால் வெட்டியுள்ளனர். இவற்றை ஒரே மர்மகும்பல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
திருவள்ளூா் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில், நாளை காலை 10 மணிக்கு தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இதில், 25க்கும் மேற்பட்ட தனியாா் துறை நிறுவனங்கள் பங்கேற்று, 500க்கும் மேற்பட்ட காலிப் பணியிடங்களுக்கு பணியாளா்களை தோ்வு செய்ய உள்ளனா்.இதில், 10, 12ஆம் வகுப்பு, பட்டப்படிப்பு, ஐடிஐ, பட்டயம் படித்தவா்கள் பங்கேற்று பயன்பெறலாம். ஷேர் பண்ணுங்க
இன்று தமிழகம் முழுவதும் 78ஆவது சுதந்திர தினம் கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு, திருவள்ளூர் மாவட்டத்தில் இயங்கும் தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்தின் மதுபான சில்லறைக் கடைகள், அதைச் சேர்ந்த பார்கள், ஓட்டல்களில் அமைந்துள்ள மதுக்கூடங்களுக்கு இன்று மூடப்படும் என மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர் தெரிவித்துள்ளார். மீறி செயல்பட்டால் அவைகள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளார்.
நெமிலியைச் சேர்ந்த அறிவழகன்(44), செவ்வாய்பேட்டை காவல் நிலையத்தில் ஏட்டாக பணியாற்றி வருகிறார். இவர் நேற்று முன்தினம் கீழ்வெங்கடாபுரம் மாரியம்மன் கோயில் திருவிழாவில் குடும்பத்துடன் பங்கேற்றார். அப்போது சேதுபதி(23), பிரதாப்(22) ஆகியோர் குடிக்க பணம் கேட்டனர். தர மறுத்த அறிவழகனை, மறைத்து வைத்திருந்த கத்தியால் சரமாரியாக வெட்டினர். இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் இருவரையும் நேற்று கைது செய்தனர்.
திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மை நலத்துறை சார்பில் கிறிஸ்துவ மகளிர் உதவும் சங்கத்தின் கீழ் 11 நலிந்த பெண்களுக்கு தலா ரூ.15 ஆயிரம் வீதம் ரூ.1.65 லட்சத்திற்கான காசோலையை சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பி.கீதாஜீவன் இன்று (ஆக.14) மாலை வழங்கினார். நிகழ்வில் கலெக்டர் த.பிரபுசங்கர், வி.ஜி.ராஜேந்திரன் எம்.எல்.ஏ உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று இரவு 10 மணிவரை கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து வருவதால், கடந்த சில நாட்களாக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் அவ்வப்போது மழை பெய்தது. அண்மையில் பெய்த மழையால், குடியிருப்பு பகுதிகளில் முழுவதும் வெள்ளம் சூழ்ந்தது. இன்று இரவு கனமழை பெய்யும் என்பதால், தாழ்வான பகுதிகள், சாலைகளில் மழைநீர் தேங்க வாய்ப்புள்ளது.
திருவள்ளூரில் பார்வை மாற்றுத்திறனாளிகளுக்கு ஆன்லைன் பஸ் பாஸ் வழங்கிட சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளன. மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம், பூந்தமல்லி பார்வையற்றோருக்கான அரசு மேல்நிலைப் பள்ளி ஆகிய இடங்களில் வரும் 20,21,22 மற்றும் 23 ஆகிய தேதிகளில் இந்த முகாம்கள் நடைபெற உள்ளன. இதில் பார்வை மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டையுடன் பங்கேறு பயன்பெறலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வேலூர் மத்திய சிறையில் இருந்து, பிரபல ரவுடி நாகேந்திரன் சென்னைக்கு அழைத்து வரப்படுகிறார். ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் அஸ்வத்தாமன் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அவரது தந்தை நாகேந்திரனையும் போலீசார் கைது செய்தனர். அஸ்வத்தாமனை காவலில் எடுத்து விசாரித்து வரும் போலீசார், தற்போது நாகேந்திரனிடம் விசாரணை நடத்த பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அவர் எழும்பூர் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்படுகிறார்.
Sorry, no posts matched your criteria.