India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தமிழ்நாட்டில் 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு முடிவுகள் இன்று (மே 10) வெளியாகியுள்ளது. அதன்படி திருவள்ளூர் மாவட்டத்தில் 86.52% தேர்ச்சி விகிதம் பதிவாகியுள்ளது. இதில் மாணவர்கள் 82.52% பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். மாணவியர் 90.56% தேர்ச்சி அடைந்துள்ளனர். www.tnresults.nic.in, www.dge.tn.gov.in ஆகிய இணையதளங்கள் மூலம் தேர்வு முடிகளை அறிந்து கொள்ளலாம்.
தேசிய அளவிலான 50 போட்டிகள் மே 6 முதல் 8 வரை ஆந்திர மாநிலம் ஒங்கோலில் நடைபெற்றது. இதில் தமிழக அணி சார்பாக பல்வேறு மாவட்டங்களிலிருந்து 12 வீரர்கள் கலந்துகொண்டு சிறப்பாக விளையாடி நான்காம் இடம் பிடித்துள்ளனர். இதில் திருவள்ளூர் மாவட்டத்திலிருந்து 5 வீரர்கள் பங்கு பெற்றனர். மாணவர்களுடன் தமிழ்நாடு 50 பால் கிரிக்கெட் சங்க செயலாளர் சீனிவாசன் மற்றும் காஞ்சிபுரம் மாவட்ட செயலாளர் இராமதாஸ் சென்றிருந்தனர்.
திருவள்ளூர் நகராட்சியில் முன்னாள் நகரமன்ற தலைவராக பதவி வகித்தவர் ராசகுமார். இவர் திமுக மூத்த நிர்வாகி ஆவார். திருவள்ளூரில் வசித்து வந்த இவர் உடல்நலக் குறைவு ஏற்பட்டு திடீரென உயிரிழந்தார். இவரது மறைவை ஒட்டி இன்று திமுக சார்பில் நடைபெற இருந்த அனைத்து நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
திருவள்ளூர் மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று (மே.09) 4 மணி வரை லேசான இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கோடையின் வெப்பம் அதிகமான நிலையில் தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே ஆங்காங்கு மழை பொழிவு ஏற்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
திருவள்ளூர் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் டாக்டர் அம்பேத்கர் சட்டக்கல்லூரி கூட்டரங்கத்தில் 12ஆம் வகுப்பு தேர்ச்சி அடைந்த மாணவ மாணவிகளுடைய திறன் வளர்ச்சி அடைவதற்கான நான் முதல்வன் கல்லூரி கனவு திட்டத்தின் முகாமினை மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் குத்துவிளக்கேற்றி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். இதில் 600-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர்.
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த வெள்ளகுளம் கண்டிகை பகுதியைச் சேர்ந்தவர் சிவகுமார் (35). இவருடைய தம்பி தேவேந்திரன். சிவக்குமார் இவருடைய தம்பி மாமியாருடன் தகாத உறவில் இருப்பதாக தெரிந்துகொண்ட தேவேந்திரன் பட்டப்பகலில் அவரை ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை செய்து விட்டு பொன்னேரி காவல் நிலையத்தில் சரணடைந்தார். இதுகுறித்து பொன்னேரி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
தொழுவூர் குப்பம் பகுதியில் J.R.S கால்பந்து குழு முன்னெடுப்பில் 25ஆம் ஆண்டு கோடைகால கால்பந்தாட்ட பயிற்சி முகாம் நடைபெற்று வருகிறது. அதையொட்டி பயிற்சியில் கலந்துக்கொண்ட விளையாட்டு வீரர்களுக்கு சீருடைகள் திமுக சார்பில்
திருவள்ளூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் சே.பிரேம் ஆனந்த்
வழங்கினார். அனைவரும் சிறப்பான முறையில் பயிற்சி பெற வேண்டும் என வாழ்த்தினார்.
பள்ளிப்பட்டை சேர்ந்தவர் அப்துல் ரகுமான் (68), லாரி ஓட்டுநர். இவர் நேற்றிரவு காஞ்சிபுரத்தில் லோடு இறக்கிவிட்டு அங்கிருந்து ஆர்.கே.பேட்டை வழியாக வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது நாதன்குளம் அருகே நள்ளிரவு 12 மணிக்கு இவரது வாகனத்தை மறித்த இருவர், பணம் கேட்டு மிரட்டினர். பணம் இல்லை என்றதும், கத்தியால் ரகுமானை வெட்டிவிட்டு தப்பினர். புகாரின்பேரில் போலீசார் கொள்ளையர்களை தேடிவருகின்றனர்.
12ம் வகுப்பு முடித்த மாணவர்களுக்கான ‘கல்லூரிக் கனவு’ நிகழ்ச்சி அட்டவணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இந்நிகழ்வில் சிறந்த கல்வியாளர்கள் கலந்துகொண்டு 12ம் வகுப்பிற்கு பிறகு உயர்கல்வியியல், கலை அறிவியல், பொறியியல், அறிவியல் தொழில்நுட்ப பிரிவுகள் என்னென்ன படிப்புகள் உள்ளன என்பது தொடர்பாக விரிவான தகவல்களை மாணவ, மாணவியருக்கு வழங்க உள்ளனர். அதன்படி, திருவள்ளூரில் நாளை (மே 9) இந்நிகழ்ச்சி நடைபெறுகிறது.
தென்னிந்திய பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்குகளில் காற்றின் திசை மாறுபாடு நிலவுகிறது. இதனால் தமிழகத்தில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் மணிக்கு 30 முதல் 40 கிமீ வரை லேசானது முதல் மிதமான மழை பெய்யும். அதன்படி திருவள்ளூர் உட்பட 12 மாவட்டங்களில் இன்று காலை 10 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Sorry, no posts matched your criteria.