India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நீலகிரி: குன்னுார் வெலிங்டன் ராணுவ கல்லுாரி அதிகாரிகளுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பங்கேற்க ஜனாதிபதி திரவுபதி முர்மு வருகிறார். 27ம் தேதி கோவையிலிருந்து ஹெலிகாப்டரில் ஊட்டி வருகிறார். 28ம் தேதி சாலை மார்க்கமாக சென்று நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். இந்நிலையில் ஜனாதிபதி செல்லும் தாவரவியல் பூங்கா சாலை உட்பட சில பகுதிகளில் நகராட்சி, மாநில, தேசிய நெடுஞ்சாலை துறையினர் ‘பேட்ச்’ பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
நீலகிரி மாவட்டத்திற்கு உட்பட்ட அனைத்து கிராம ஊராட்சிகளிலும்23ஆம் காலை 11 மணியளவில் உள்ளாட்சிகள் தின கிராம சபைக் கூட்டம் நடைபெறவுள்ளது. இக்கிராம சபைக் கூட்டம் ஊராட்சி மன்றத் தலைவர்கள் தலைமையில் அந்தந்த கிராம ஊராட்சிகளில் நடைபெறவுள்ளது. எனவே மேற்கண்ட கிராம சபைக் கூட்டத்தில் கிராம ஊராட்சி பொது மக்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ளுமாறு மாவட்ட நிர்வாகம் மூலம் கேட்டுக் கொள்ளப்படுகிறது.
குன்னூர், அருவங்காடு, கேத்தி எள்ளநல்லி வழியாக செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் நடந்து வந்த விரிவாக்க பணிகள் பாதியில் நிறுத்தப்பட்டுள்ளன. இதையடுத்து தொடர் மழையின் காரணமாக ஆங்காங்கே அகற்றப்படாத மண் குவியல்கள் சேறும் சகதியுமாக மாறியுள்ளன. இந்த சமயத்தில் நேற்று மேட்டுப்பாளையத்திலிருந்து கோழி உரம் ஏற்றி வந்த லாரி சேற்றில் சறுக்கி விபத்து ஏற்பட்டது. டிரைவர் கருப்புசாமி சிறு காயத்துடன் தப்பினார்.
நீலகிரி மாவட்டத்தில் இரவு நேர காவல் பணிக்காக காவல் துறை அதிகாரிகள் தலைமையில், நாள்தோறும் இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்படுகிறார்கள். இந்நிலையில் உதகை நகரம், உதகை கிராமியம், குன்னூர் உட்கோட்டம், கூடலூர் மற்றும் தேவால உட்கோட்டத்தில் ரோந்து பணி அலுவலர்கள் விவரம், மாவட்ட காவல் துறை அலுவலரால் (21.11.2024) இன்று வெளியிடப்பட்டுள்ளது.
➤ நீலகிரிக்கு குடியரசுத் தலைவர் வருகை ➤ தேயிலை வாரிய கல்வி உதவித்தொகை விண்ணப்பம் நிறுத்தம் ➤ ஊட்டி பூண்டு திடீர் விலை வீழ்ச்சி ➤ ஊட்டி தீட்டுக்கல் பகுதியில் வெளி ஆட்கள் நுழைய தடை ➤ விதிமீறி வெட்டப்படும் சில்வர் ஓக் மரங்கள் ➤ கூடலூரில் சாலையை சீரமைத்த ஓட்டுநர்கள் ➤ மாணவி பாலியல் வன்கொடுமை: 3 பேர் கைது ➤ தேவாலாவில் சுகாதார துறை கள ஆய்வு ➤ நெடுகுளா பகுதியில் பனி மூட்டம் அதிகரிப்பு
மலைகளின் அரசி என்று போற்றப்படுகின்றன நீலகிரி மாவட்டத்திற்கு, வருடத்திற்கு சுமார் 25 லட்சம் சுற்றுலா பயணிகள் வந்து செல்வதாக கூறப்படுகிறது. இந்நிலையில் நீலகிரி மாவட்டத்திற்கு வருகின்ற வாகனங்கள் அனைத்தும் பதிவு செய்து வர வேண்டும் என்ற நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில், மாவட்டத்தின் தாங்கும் தன்மையை ஆய்வு செய்ய பெங்களூருவை சேர்ந்த ஐ.எம.எம் நிறுவனம் மூலம் ஆய்வு செய்ய தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
நீலகிரி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் என்.எஸ்.நிஷா பதவி ஏற்ற நாளில் இருந்து, காவலர்களின் நலனில் அக்கறை கொண்டு அவர்களது குறைகளைக் கேட்பது முதல், பணி ஊக்குவிப்பு வரை கவனித்து வருகிறார். இந்த நிலையில் தனிப்பிரிவு காவலர்களில் சிறப்பாக பணியாற்றியவர்களை தேர்ந்தெடுத்து அவர்களை பாராட்டி சான்றிதழ்களை இன்று வழங்கினார்.
நீலகிரி மாவட்டத்தில் தேயிலை தோட்டங்களில் ஊடுபயிராக சில்வர் ஓக் மரங்கள் வளர்க்கப்படுகின்றன. இந்த மரங்கள் முதிர்ந்த நிலையில் குடும்ப தேவைக்காக விவசாயிகள் விற்பனை செய்கின்றனர். இந்நிலையில் கோத்தகிரி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் வருவாய்க்கு சொந்தமான இடங்களில் வளர்க்கப்படும் மரங்கள் விதிகளை மீறி வெட்டி கடத்தப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
கோத்தகிரியில் ‘கழிவறை இல்லாத மாவட்டம்’ விழிப்புணர்வு நிகழ்ச்சி, ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், தலைவர் ராம்குமார் தலைமையில் நடைபெற்றது. இதில் சுகாதாரம் ஒரு அடிப்படை மனித உரிமை. எல்லா இடத்திலும் சுகாதாரத்தின் தேவை முக்கியம். திறந்தவெளியில் மலம் கழிப்பு, கடுமையான நோய்களுக்கு வழிவகுக்கும். நீலகிரி பொருத்தவரை கிராமப்புறங்களில், திறந்தவெளி கழிப்பிடம் இல்லாத நிலை உருவாகியுள்ளது என தெரிவிக்கப்பட்டது.
இந்திய ஜனாதிபதி திரௌபதி முர்மு நீலகிரி வருகையைத் தொடர்ந்து பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிர படுத்தப்பட்டுள்ளன. ஊட்டி தீட்டுக்கல் ஹெலிபேட் பகுதி போலீஸ் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டுள்ளது. ஹெலிபேட் தளத்தை சீரமைக்கும் பணிகள் நேற்று முதல் நடைபெற்று வருகின்றன. வெடிகுண்டு நிபுணர்கள் தீவிர சோதனை செய்யப்பட்டது. தற்போது ஹெலிபேட் தளத்தை சுற்றியுள்ள பகுதிகளில் வெளி ஆட்கள் நுழைய போலீசார் தடை விதித்துள்ளனர்.
Sorry, no posts matched your criteria.