India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கோத்தகிரி தாலுகாவில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று(2.12.24) மாவட்ட நிர்வாகம் விடுமுறை அறிவித்துள்ளது. முன்னதாக, உதகை, கூடலூர் தாலுகாக்களுக்கு விடுமுறை அறிவித்த நிலையில், தற்போது கோத்தகிரியில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
உதகை, கூடலூர் தாலுகாக்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று (2.12.24) மாவட்ட நிர்வாகம் விடுமுறை அறிவித்துள்ளது. தமிழகத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக மாணாக்கரின் நலன் கருதி 2 தாலுகாக்களில் விடுமுறை என கலெக்டர் லட்சுமி பவ்யா தண்ணீரு அறிவித்துள்ளார்.
நீலகிரி மாவட்டம் உதகைக்கு நேற்று வருகை தந்த இந்திய தேர்தல் ஆணையர் சுக்பீர் சிங் சந்து அவர்களை, தமிழகம் அரசினர் விருந்தினர் மாளிகையில் மலர்கொத்து கொடுத்து நீலகிரி மாவட்ட ஆட்சியரும், மாவட்ட தேர்தல் அலுவலருமான லட்சுமி பவ்யா தண்ணீரு வரவேற்றார். இந்த சந்திப்பின்போது மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் என். எஸ் நிஷா உடன் இருந்தார்.
நீலகிரி மாவட்டத்தில் இன்று (1-12-2024) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். உதகை நகரம் மற்றும் ஊரக பகுதி, குன்னூர் நகரம் மற்றும் ஊரக பகுதி, கூடலூர் நகரம் மற்றும் ஊரக பகுதியில் இரவு ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் மற்றும் அவசர தேவைக்கான தொலைபேசி எண்கள் வெளியிடப்பட்டுள்ளது. இரவு நேரத்தில் எந்த வித அவசர உதவிகளுக்கு தொடர்பு கொள்ளலாம்.
➤ ஊட்டியில் வீடு பற்றி எரிந்து தீ விபத்து ➤ நீலகிரியில் முருங்கைக்காய் விலை உயர்வு ➤ கட்டபெட்டு பகுதியில் நாளை மின் நிறுத்தம் ➤ கூடலூர்: கடும் பனிப்பொழிவு, வாகன ஓட்டிகள் அவதி ➤ உதகை கர்நாடக பூங்காவில் இம்மாத இறுதியில் மலர் கண்காட்சி ➤ குந்தா – குன்னூர் சாலையில் கடும் பனிமூட்டம் ➤ கோத்தகிரி பகுதி அதிமுக ஆலோசனை கூட்டம் நடைபெற்றது ➤ கூடலூர் வியாபாரிகள் போராட்ட எச்சரிக்கை
ஊட்டியில் உள்ள கர்நாடகா பூங்காவில் முதல் முறையாக இம்மாதம் இறுதியில் மலர் கண்காட்சி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக பூங்காவை தயார் செய்யும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இம்மாதம் 20ஆம் தேதிக்கு மேல் 10 நாட்கள் நடத்த பூங்கா நிர்வாகம் திட்டமிடப்பட்டுள்ளது. கிறிஸ்மஸ், புத்தாண்டு மற்றும் அரையாண்டு தேர்வு விடுமுறைக்கு ஊட்டிக்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு ஒரு புதிய அனுபவமாக இருக்கும்.
குன்னூர், கிருஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு தொடர் விடுமுறை காரணமாக ஊட்டி வரும் சுற்றுலா பயணிகளின் வசதிக்காக டிசம்பர் 28ஆம் தேதி முதல் ஜனவரி 2 வரை ஊட்டிக்கு சிறப்பு மலை ரயில் இயக்க ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது. மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டிக்கு காலை 9.10 மணி, ஊட்டியில் இருந்து மேட்டுப்பாளையம் 11.25 மணி என 2 முறை இயக்கப்படுகிறது.
1977-க்குப் பிறகு கொங்கு மண்டலத்தில் புயல் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என கோவை வெதர்மேன் சந்தோஷ் கிருஷ்ணன் கூறியுள்ளார். ஃபெஞ்சல் புயல், ஈரோடு, திருப்பூர், கோவை வழியாக கேரளா சென்று அரபிக்கடல் செல்லும் எனவும், ஊட்டியில் கனமழை பெய்யலாம் எனவும் தெரிவித்துள்ளார். இதனால் நீலகிரியில் வெள்ளப் பெருக்கு, நிலச்சரிவு ஏற்படலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
➤ தேவர் சோலையில் கடையில் தீ விபத்து ➤ கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு ஒத்திவைப்பு ➤ ஒட்டுப்பட்டரையில் சுற்றி திரியும் ஓற்றை காடொருமை ➤ கூடலூர் கல்லூரியில் கூடுதல் பாடப்பிரிவு துவங்க நடவடிக்கை ➤ கட்டிட இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் நிவாரண நிதி ➤ கமர்சியல் சாலை பகுதியில் வீட்டில் தீ விபத்து ➤ கோத்தகிரி வந்த எம்.பி ஆ.ராசாவுக்கு வரவேற்பு
உதகை ராஜ்பவனில் நேற்று ( 29 தேதி ) குடியரசு தலைவர் திரௌபதி முர்மு முன்னிலையில், பழங்குடியினர் பங்கேற்ற கலாச்சார நடனங்கள் நடைபெற்றது. அப்போது குடியரசு தலைவருக்கு பழங்குடி கைவினைஞர் செதுக்கிய அவரது உருவ படத்தை, நீலகிரி ஆதிவாசி நல சங்க செயலாளர் எம் ஆல்வாஸ் வழங்கினார். மேலும், குடியரசு தலைவர், பழங்குடியினருக்கு நினைவு பரிசுகளை வழங்கினார் . அதை தொடர்ந்து குழு புகைப்படம் எடுக்கப்பட்டது.
Sorry, no posts matched your criteria.