Thenilgiris

News December 4, 2024

நீலகிரி காவல்துறை சார்பில் பணம் சேமிப்பு திட்டம்!

image

நீலகிரி மாவட்ட காவல்துறை சார்பில் பணம் சேமிப்பு திட்ட விழிப்புணர் ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, மது அருந்தாமல் வாகனம் ஓட்டினால் ரூ.10,000, இருசக்கர வாகனத்தில்   ஹெல்மெட் அணிந்தால் ரூ.1000, 3 பேர் பயணம் செய்யாமல் இருந்தால் ரூ.1000 சேமிக்கலாம் . சீட் பெல்ட் அணிந்து இருந்தால் ரூ.1,000, வாகனத்தில் இன்சூரன்ஸ் வைத்திருந்தால் ரூ.700 முதல் 2000 வரை சேமிக்கலாம் என தெரிவிக்கப்பட்டள்ளது. 

News December 4, 2024

நீலகிரியில் இன்று இரவு ரோந்து அலுவலர்கள் விவரம் 

image

நீலகிரி மாவட்டத்தில் இன்று இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். உதகை நகரம் மற்றும் ஊரக பகுதி, குன்னூர் நகரம் மற்றும் ஊரக பகுதி, கூடலூர்,பந்தலூர் நகரம் மற்றும் ஊரக பகுதியில் இரவு ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் மற்றும் அவசர தேவைக்கான தொலைபேசி எண்கள் வெளியிடப்பட்டுள்ளது. மக்கள் தங்கள் அவசர உதவிக்கு உடனடியாக அழைக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

News December 3, 2024

உதகை அரசு மருத்துவக் கல்லூரிக்கு வெடிகுண்டு மிரட்டல் 

image

நீலகிரி மாவட்டம் உதகையில் அரசு மருத்துவக் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இங்கு சுமார் 1000க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் மருத்துவம் பயின்று வருகின்றனர். இந்நிலையில் இன்று முதலாம் ஆண்டு தேர்வு நடைபெற்று வந்த நிலையில், இ-மெயில் மூலம் கல்லூரிக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்தது. உடனடியாக காவல்துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டு, விரைந்து வந்து சோதனை மேற்கொண்டனர். இதில் அந்த தகவல் வதந்தி என்பது தெரியவந்தது. 

News December 3, 2024

நீலகிரி காவல்துறை சார்பில் பணம் சேமிப்பு திட்டம்!

image

நீலகிரி மாவட்ட காவல்துறை சார்பில் பணம் சேமிப்பு திட்ட விழிப்புணர் ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, மது அருந்தாமல் வாகனம் ஓட்டினால் ரூ.10,000, இருசக்கர வாகனத்தில்   ஹெல்மெட் அணிந்தால் ரூ.1000, 3 பேர் பயணம் செய்யாமல் இருந்தால் ரூ.1000 சேமிக்கலாம் . சீட் பெல்ட் அணிந்து இருந்தால் ரூ.1,000, வாகனத்தில் இன்சூரன்ஸ் வைத்திருந்தால் ரூ.700 முதல் 2000 வரை சேமிக்கலாம் என தெரிவிக்கப்பட்டள்ளது. 

News December 3, 2024

நீலகிரி மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தல்!

image

நீலகிரி மாவட்டத்திற்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதை அடுத்து, பாதுகாப்பு நடவடிக்கைகளில் மாவட்ட நிர்வாகம் முழு வீச்சில் ஈடுபட்டுள்ளது. மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தெரிவிக்கையில், ரெட் அலர்ட் காரணமாக நீலகிரிக்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு தடை ஏதும் விதிக்கப்படவில்லை. ஆனால், கனமழை தொடரும் பட்சத்தில் பாதுகாப்பான பயணத்தை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள் என தெரிவித்தார்.

News December 3, 2024

நீலகிரில் மழையை எதிர்கொள்ள தயார்-கலெக்டர் 

image

நீலகிரி ஆட்சியர் லட்சுமி பவ்யா தண்ணீரு நேற்று விடுத்துள்ள செய்தி குறிப்பில்,’தமிழ்நாடு பேரிடர் மீட்பு குழுவை சேர்ந்த 80பேர், 4 குழுக்களாக உதகை, கூடலூர், குன்னூர். கோத்தகிரி ஆகிய பகுதிகளில் கண்காணிப்பு மற்றும் மீட்பு பணியில் ஈடுபடப் தயார் நிலையில் உள்ளனர். மேலும் 42 மண்டல அதிகாரிகள் கொண்ட குழுக்கள் தயாராக உள்ளனர்” என்றார்.

News December 3, 2024

நீலகிரியில் பள்ளிகளுக்கு விடுமுறை

image

நீலகிரி மாவட்டத்தில் இன்று (டிச.3) பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஃபெஞ்சல் புயல் காரணமாக தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் அதிகனமழை பெய்து வருகிறது. இதனால் பல்வேறு பகுதிகளில் மழைநீர் சூழ்ந்துள்ளது. இந்நிலையில், நீலகிரி மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

News December 3, 2024

அவ்வையார் விருது பெற விண்ணப்பிக்க அழைப்பு

image

பெண்களின் முன்னேற்றத்திற்காக சேவை புரிந்தவர்கள் அவ்வையார் விருது பெற விண்ணப்பிக்கலாம் என நீலகிரி மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தண்ணீரு தெரிவித்துள்ளார். குறைந்தபட்சம் ஐந்து ஆண்டுகள் பெண் குலத்திற்கு பெருமை சேர்க்கும் வகையிலான நடவடிக்கைகள் சமூக சீர்திருத்தம், மகளிர் மேம்பாடு மத நல்லிணக்கம் மொழி தொண்டு, ஆகிய துறைகளில் சிறந்து விளங்கும் மகளிராக இருத்தல் வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News December 2, 2024

நீலகிரி: மழையில் வீடு இடிந்து ஒருவர் உயிரிழப்பு 

image

ஃபெஞ்சல் புயல் கரையை கடந்த நிலையில் நீலகிரி மாவட்டம், ஊட்டி சுற்றுவட்டார பகுதிகளில் இன்று மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் ஊட்டி நொண்டிமேடு ஒத்தெ மரம் பகுதியில், மழையின் காரணமாக ஒரு வீடு இடிந்ததில், இடிபாடுகளில் சிக்கி ஆறுமுகம் என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவல் அறிந்த தீயணைப்பு மற்றும் காவல் துறையினர் விரைந்து உடலை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

News December 2, 2024

நீலகிரிக்கு RED ALERT

image

தமிழகத்தில் வடகடலோர மாவட்டங்களை புரட்டி போட்ட ஃபெஞ்சல் புயல் கரையைக் கடந்து, காற்றழுத்த தாழ்வு நிலையாக மாறி மேற்கு நோக்கி மெதுவாக நகர்ந்து வருகிறது. அதன் காரணமாக நிலகிரி மாவட்டத்திற்கு தற்போது அதி கனமழைக்கான ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் காலை முதலே மழை பெய்துவரும் நிலையில், மக்களை பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

error: Content is protected !!