India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
இந்திய பாதுகாப்பு படைகளின் முதலாவது தலைமைத் தளபதி 3-வது ஆண்டு நினைவு தினம் என்பதால், விபத்து நேரிட்ட பகுதியில் உள்ள நினைவுத்தூணில் முப்படை அதிகாரிகள் பயிற்சிக் கல்லூரி கமாண்டன்ட் லெப்.ஜெனரல் வீரேந்திர வாட்ஸ் மலர்வளையம் வைத்து நேற்று அஞ்சலி செலுத்தினார். பின்னர், உயிரிழந்த 14 பேரின் படங்களுக்கு மலர்கள் தூவி மரியாதை செலுத்தினார். ராணுவ இசையுடன், துப்பாக்கி ஏந்திய ராணுவ வீரர்கள் மரியாதை செலுத்தினர்.
நீலகிரி, ஊட்டி நகராட்சி கமிஷனராக இருந்தவர் ஜஹாங்கீர் பாஷா. இவர் சட்ட விரோத செயல்பாடுகளுக்கு பணம் வாங்கி, அனுமதி வழங்குவதாக, குற்றச்சாட்டு எழுந்தது.அவரிடம் கணக்கில் வராத பணம் 11.70 லட்சம் ரூபாயை பறிமுதல் செய்யப்பட்டு, அவர் மீது ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில் ஜஹாங்கீர் பாஷாவை முன்தேதியிட்டு (நவ.29) சஸ்பெண்ட் செய்து நகராட்சி நிர்வாக ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.
நீலகிரி மாவட்டத்தில் இன்று (07.12.2024) இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவல்துறை அதிகாரிகள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் வெளியிடப்பட்டுள்ளது. உதகை நகரம் ஊரக உட்கோட்டம், குன்னூர் உட்கோட்டம், கூடலூர் மற்றும் தேவாலா உட்கோட்டம் ஆகிய காவல் நிலைய அதிகாரிகளின் தொடர்பு எண்கள் நீலகிரி மாவட்ட காவல்துறையால் வெளியிடப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்ட ஆட்சியர் கூடுதல் அலுவலகத்தில், முன்னாள் படைவீரர் நலத்துறையின் சார்பில், கொடி நாள் தினத்தை முன்னிட்டு, கொடி நாள் நிதி வழங்கி, கொடி நாள் வசூலை இன்று மாவட்ட ஆட்சித்தலைவர் லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் தொடங்கி வைத்தார். உடன் முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குநர் (பொ) இந்திரகுமார் உட்பட பலர் உள்ளனர்.
நீலகிரி மாவட்டத்தில் நடமாடும் எக்ஸ்ரே வாகனம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ள நிலையில் இன்று அதற்கான துவக்க விழா நடைபெற்றது. இதனை நீலகிரி மாவட்ட ஆட்சித் தலைவர் லட்சுமி பவ்யா தண்ணீர் கொடி அசைத்து, பொதுமக்கள் பயன்பாட்டிற்காக தொடங்கி வைத்தார். அப்போது அருகில் அரசுத்துறை அதிகாரிகள் பலர் இருந்தனர்.
நீலகிரி மாவட்டத்தில் ஆபத்து நிறைந்த இடங்களை கண்டறிந்து கடந்த 2020ஆம் ஆண்டு நெடுஞ்சாலை துறை சார்பாக புதிய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு, குவி கண்ணாடிகள் பொருத்தப்பட்டது. இந்நிலையில் தற்போது அந்த கண்ணாடிகள் பல இடங்களில் சேதமடைந்துள்ள. இதனால் வாகன விபத்துகள் ஏற்படும் அபாயம் உள்ளதால், சம்பந்தப்பட்ட துறை விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
நீலகிரி: பசுந்தேயிலை வரத்து அதிகரித்துள்ள நிலையில், கடந்த மாதத்திற்கான விலை ரூ.20.80ஆக குறைந்து உள்ளது. தேயிலை அதிகரித்தும், விலை குறைந்ததால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். கூட்டுறவு தேயிலை தொழிற்சாலை முன்னாள் துணைத் தலைவர் ராஜ்குமார் கூறுகையில், தற்போது விலை உயர்த்தி திடீரென விலை குறைவாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதால், மீண்டும் விவசாயிகள் பாதிக்கப்படும் சூழ்நிலையை ஏற்பட்டு உள்ளது,’ என்றார்.
பசுந்தேயிலை வரத்து அதிகரித்துள்ள நிலையில், கடந்த மாதத்திற்கான விலை ரூ.20.80ஆக குறைந்து உள்ளது. தேயிலை அதிகரித்தும், விலை குறைந்ததால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். கூட்டுறவு தேயிலை தொழிற்சாலை முன்னாள் துணைத் தலைவர் ராஜ்குமார் கூறுகையில், தற்போது விலை உயர்த்தி திடீரென விலை குறைவாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதால், மீண்டும் விவசாயிகள் பாதிக்கப்படும் சூழ்நிலையை ஏற்பட்டு உள்ளது,’ என்றார்.
முதல்நிலை பொறுப்பாளர்கள் அவசர காலத்தில் செயல்பட தயாராக இருக்க வேண்டும், நீலகிரியில் அபாயகரமான பகுதிகளை தொடர்ந்து தீவிரமாக கண்காணிப்பதுடன், நிவாரண முகாம்களை தயார் நிலையில் வைத்து கொள்ள வேண்டும் என சிறப்பு கண்காணிப்பு அலுவலர் அறிவுறுத்தினார். இக்கூட்டத்தில் கலெக்டர் லட்சுமி பவ்யா தண்ணீரு, மாவட்ட வருவாய் அலுவலர் நாராயணன், சப்–கலெக்டர் சங்கீதா, ஊட்டி ஆர்.டி.ஓ., சதீஷ் அரசுத்துறை அதிகாரிகள் இருந்தனர்.
தமிழ்நாடு முழுவதும் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் B.Pharm, D.Pharm சான்று பெற்றவர்கள், முதல்வர் மருந்தகம் அமைக்க www.mudhalvarmarundhagam.tn.gov.in என்ற இணையதளம் மூலம் டிச.05ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டிருந்து. இந்நிலையில், டிச.10ஆம் தேதி வரை இணையதளம் மூலம் விண்ணபிக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக நீலகிரி மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் தயாளான் தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.