Thenilgiris

News December 10, 2024

இதை அரசு பேருந்துகளில் எடுத்து வந்தால் அபராதம்!

image

நீலகிரி மாவட்டத்துக்கு வரும் அரசு பேருந்துகளில் பிளாஸ்டிக் குடிநீர் பாட்டில்கள் எடுத்து வர தடை விதிக்கப்பட்டுள்ளது. பயணிகள் பிளாஸ்டிக் குடிநீர் பாட்டில்கள், குளிர்பான பாட்டில்கள், கேரி பேக்குகள் எடுத்து வர தடைவிதிக்கப்பட்டுள்ளது. இதை நடத்துனரும், ஓட்டுனரும் கண்காணிக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தவறும் பட்சத்தில் அபராதம் விதிக்கப்படும் என உதகை போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது.

News December 10, 2024

டிவி வாங்குவதற்காக நிதி வழங்கிய மாவட்ட ஆட்சியர்

image

நீலகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தண்ணீரு அவர்கள், உதகை எம்.பாலாடாவில் உள்ள ஏகலைவா அரசு மாதிரி உண்டு, உறைவிட மேல்நிலைப்பள்ளி மாணவியர் விடுதிக்கு, தொலைக்காட்சி பெட்டி (டிவி) வாங்குவதற்காக, மாவட்ட ஆட்சியரின் விருப்புரிமை நிதியிலிருந்து ரூ.40,000க்கான காசோலையினை பள்ளி தலைமை ஆசிரியரிடம் வழங்கினார்.

News December 9, 2024

குன்னூர் – மேட்டுப்பாளையம் சாலையில் விபத்து

image

நீலகிரி: குன்னூர் – மேட்டுப்பாளையம் சாலையில் பர்லியாருக்கு அருகே இன்று உதகையிலிருந்து கோவை நோக்கி சென்று கொண்டிருந்த அரசு பேருந்து மீது, வளைவில் முந்த முயன்ற பொலிரோ வாகனம் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் யாருக்கும் எந்த ஒரு பாதிப்பும் ஏற்படவில்லை. இதனால் குன்னூர் – மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

News December 9, 2024

ஊட்டி உருளை கிழங்கு விலை நிலவரம்

image

நீலகிரி கூட்டுறவு விற்பனை சங்கம் விவசாயிகளின் உருளை கிழங்குகளை ஏலத்தின் மூலம் விலை நிர்ணயம் செய்து விற்பனை செய்து வருகிறது. இந்த நிலையில் இன்று (9.12.24) நடந்த ஏலத்தில் முதல் ரகம் ஒரு மூட்டை அதிகபட்ச விலையாக ரூ.2,090 மும், குறைந்த பட்சமாக ரூ.1,350 த்திற்கும் விற்பனை ஆனது. இதில் மொத்தம் 3,000 மூட்டை ஏலம் விடப்பட்டது.

News December 9, 2024

திருமண நிகழ்வில் மதுபானம் தவிர்ப்பு

image

படுகர் சமுதாய கூட்டம் கோத்தகிரியில் நடைபெற்றது. தும்மனட்டி ஊர் தலைவர் கண்ணன் வரவேற்றார். கிராம தலைவர் ராமகிருஷ்ணன் தலைமை வகித்தார். நாக்குப்பெட்டா தலைவர் முருகன், தொதநாடு சீமை நல சங்க தலைவர் பாபு ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், திருமணம், பிறந்தநாள் விழா, சீர் போன்ற வைகளில் மது பானம் வழங்குவதை நிறுத்த வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

News December 9, 2024

நீலகிரி எல்லையில் சோதனைக்கு பிறகே அனுமதி

image

நீலகிரி மாவட்டத்திற்கு வரும் வாகனங்கள் பிளாஸ்டிக் பொருட்கள் சோதனைக்குப் பின்னரே அனுமதிக்கப்படுகின்றன என நீலகிரி ஆட்சியர் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் மாவட்டத்திற்குள் நுழைவதைத் தடுக்கும் நோக்கில் எல்லையோர சாவடிகளில் சோதனை மேற்கொண்ட பிறகே வாகனங்கள் அனுமதிக்கப்படுகின்றன. உள்ளூர் மக்களும் பிளாஸ்டிக் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும், என்றார்.

News December 9, 2024

நீலகிரி கலெக்டர் அழைப்பு

image

நீலகிரி கலெக்டர் வெளியிட்ட அறிக்கையில், வள்ளுவர் சிலையின் வெள்ளி விழாவை ஒட்டி பல்வேறு போட்டிகளை தமிழ் வளர்ச்சி துறை நடத்தி பரிசுகள் வழங்க உள்ளது. போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு பாராட்டு சான்றிதழ், பதக்கம் வழங்க உள்ளது. பள்ளி மாணவர்கள் தங்களது படைப்புகளை இம்மாதம்,18ம் தேதிக்குள் வீடியோ, போட்டோ மற்றும் பி.டி.எஃப். வடிவில், tndiprmhkural@gmail.com என்ற மின்னஞ்சலில் அனுப்ப அழைப்பு விடுத்துள்ளார்.

News December 9, 2024

நீலகிரி: கட்டுப்பாட்டை இழந்த கார் விபத்து

image

கேரளா மாநிலம் வயநாடு பகுதியை சேர்ந்த ஐந்து இளைஞர்கள், காரில் நேற்று முன்தினம், இரவு, தேவர்சோலை சாலை வழியாக, கூடலூர் நோக்கி வந்தனர். இரவு, 9:45 மணிக்கு இரண்டாவது மைல் பகுதியை கடந்து, கூடலூர் நோக்கி வரும்போது, கார் கட்டுப்பாட்டை இழந்து மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது. அதில், காரில் பயணித்த வயநாட்டை சேர்ந்த ஸ்ரீகாந்த உள்ளிட்ட ஐந்து இளைஞர்கள் சிறு காயங்களுடன் உயிர் தப்பினர்.

News December 8, 2024

நீலகிரி: காவல் அதிகாரிகளின் இரவு ரோந்து பணி விபரம்

image

நீலகிரி மாவட்டத்தில் இன்று (08.12.2024) இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள், உதகை நகரம், ஊரக உட்கோட்டம், குன்னூர் உட்கோட்டம், கூடலூர் மற்றும் தேவாலா உட்கோட்டம் ஆகிய காவல் நிலைய அதிகாரிகளின் தொடர்பு எண்கள், நீலகிரி மாவட்ட காவல்துறையால் வெளியிடப்பட்டுள்ளது.

News December 8, 2024

கூடலூர் அருகே பிடிபட்ட மலைப்பாம்பு

image

நீலகிரி மாவட்டம் கூடலூர் அடுத்த அல்லூர் பகுதியில் ராட்சத மலை பாம்பு ஒன்று இருப்பதை கண்ட அப்பகுதி மக்கள் உடனடியாக வனத்துறைக்கு தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்த வனத்துறை விரைந்து வந்து மலைப்பாம்பை பிடித்தனர். பிடிக்கப்பட்ட மலைப்பாம்பை வனத்துறை வாகனத்தின் மூலம் வனப்பகுதியில் கொண்டு சென்று விடுவதற்கான பணியில் வனத்துறை ஈடுபட்டனர்.

error: Content is protected !!