India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

நீலகிரி மாவட்ட காவல்துறையால் இன்று (17.08.2025) இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் உதவி தொடர்பு எண்கள் வெளியிடப்பட்டுள்ளது. இதில் உதகை நகரம் ஊரக உட்கோட்டம், குன்னூர் உட்கோட்டம், கூடலூர் மற்றும் தேவாலா உட்கோட்டம் காவல் நிலைய அதிகாரிகளின் தொடர்பு எண்களும் அடங்கியுள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் வணிக மற்றும் குடியிருப்பு கட்டடங்களுக்கு கட்டட அனுமதி பெற விரும்பும் பொதுமக்கள், www.onlineppath.gov.in என்ற இணையதளத்தில் உள்ள Single Window Portal வாயிலாக விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தன்னேரு தெரிவித்துள்ளார். மேலும், கட்டுமானத் தொடர்பான சந்தேகங்கள் மற்றும் தகவல்களுக்கு 94427 72701 என்ற உதவி எண்களில் தொடர்புகொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

நீலகிரியில் நியோ டைடல் பூங்கா அமைப்பதற்கான கட்டுமானப் பணிகளை மேற்கொள்ள, தமிழக அரசு டெண்டர் கோரியுள்ளது. குன்னூர், எடப்பள்ளிக்கு அருகே 8 ஏக்கர் நிலப்பரப்பில் இந்தப் பூங்கா அமைய உள்ளது. சுமார் 60,000 சதுர அடி பரப்பளவில் கட்டப்படவுள்ள இந்த நியோ டைடல் பூங்கா, சுமார் 1,000 பேருக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.இந்த மகிழ்சியான செய்தியை அணைவருக்கும் ஷேர் செய்யுங்கள்.

நீலகிரி: கூட்டு பட்டாவை தனிபட்டாவாக மாற்ற எளிய வழி, உங்கள் இடம் அல்லது மனை கூட்டு பட்டாவில் இருந்தால் மாற்ற இங்கு <
✅கூட்டு பட்டா
✅விற்பனை சான்றிதழ்
✅நில வரைபடம்,
✅சொத்து வரி ரசீது
✅மற்ற உரிமையாளர்களின் ஒப்புதல் கடிதத்துடன் விண்ணப்பித்தால் நிலத்தை அதிகாரிகள் ஆய்வு செய்து 30 – 60 நாள்களில் தனி பட்டா கிடைத்துவிடும். SHARE பண்ணுங்க!

நீலகிரி மக்களே ரயில்வே ஆட்சேர்ப்பு செல் (RRC) தற்போது மத்திய ரயில்வேயில் காலியாகவுள்ள 2418 அப்ரண்ட்டிஸ் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது. ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 11.09.2025 தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். இதற்கு 10-ம் வகுப்பு மற்றும் ITI தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். விண்ணபிக்க <

குன்னூர் அருகே கோவை கேஜி மருத்துவமனை மற்றும் வெலிங்டன் கண்ட்டோன்மென்ட் மருத்துவமனை இணைந்து நாளை காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை இலவச மருத்துவ முகாம் நடத்தப்படுகிறது. இதயம், எலும்பு, வெரிகோஸ்வெயின் நோய்களுக்கு ஆலோசனை மற்றும் இயன்முறை மருத்துவ சிகிச்சைகள் வழங்கப்படும். தேவைப்படும் நோயாளிகளுக்கு இலவச எக்கோ சிகிச்சை வழங்கப்படுகிறது.

நீலகிரி செயல்பட்டு வரும் தனியார் நிறுவனத்தில் உள்ள 25, Business Development Executive பணியிடங்களை நிரப்ப, தமிழ்நாடு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை வாயிலாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. மாத ஊதியமாக ரூ.15,000 – ரூ.25,000 வழங்கபடும். <

நீலகிரி மாவட்டம், ஸ்ரீமதுரை அம்பலமூலா பகுதியில் இரவு நேரத்தில், இரண்டு காட்டு யானைகள் முகாமிட்டன. வனத்துறையினர் அவைகளை கண்காணித்து விரட்டும் பணியில் ஈடுபட்டனர். யானை சாலை மற்றும் குடியிருப்புக்குள் நுழையும் ஆபத்து இருந்ததால், அப்பகுதியில் வாகன போக்குவரத்து நிறுத்தப்பட்டது. தொடர்ந்து டிரோன் கேமரா பயன்படுத்தி அதிலிருந்து ஒலி எழுப்பி யானைகளை அம்பலமூலா வழியாக முதுமலை வனப்பகுதிக்கு விரட்டினர்.

அரசு பேருந்துகளில் பயணிக்கும் போது Luggage-ஐ பேருந்துலேயே மறந்து வைத்து இறங்கிவிட்டால் பதட்டபட வேண்டாம். நீங்கள் வாங்கிய டிக்கெட்டில் அந்த பேருந்தின் எண் இருக்கும். அந்த விவரத்தை 044-49076326 என்ற எண்ணிற்கு அழைத்து, எங்கிருந்து எங்கு பயணித்தீர்கள்?, என்ன தவறவிடீர்கள் என்பதை கூறினால் போதும். பேருந்தின் நடத்துனர் உங்களை தொடர்புகொண்டு எங்கு வந்து பொருளை வாங்க வேண்டும் என்பதை கூறுவார். (ஷேர் பண்ணுங்க)

நீலகிரி, குன்னுார் நகர மன்ற தலைவர் சுசிலா திருச்சியில் உள்ள நகர்புற உள்ளாட்சித் துறை அமைச்சர் கே.என்.நேருவின் அலுவலகத்தில் நேரில் சென்று நேர்முக உதவியாளர் மணிகண்டன் சந்தித்து குன்னூர் நகராட்சியில் உள்ள 30 வார்டுகளுக்கு அடிப்படை தேவைகளான தடுப்புச் சுவர், நடைபாதைகள் மற்றும் அனைத்து பணிகள் செய்து தர கோரிக்கை மனு அளித்தார்.
Sorry, no posts matched your criteria.