India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தமிழின் முன்னணி செய்தி நிறுவனமான WAY2NEWS-ல் நீங்களும் நிருபர் ஆகலாம். நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் கூடலூர், உதகை, குன்னூர், கோத்தகிரி, பந்தலூர், குந்தா ஆகிய பகுதிகளில் நடக்கும் அன்றாட நிகழ்ச்சிகளை செய்தியாக பதிவிட்டு வருவாய் ஈட்டலாம். மேலும், விபரங்களுக்கு 95819-22022 என்ற எண்ணை தொடர்ப்பு கொள்ளலாம். மேலும், whats’s app பண்ணலாம்.
சென்னை தலைமைச் செயலகத்தில் அமைச்சர் பொன்முடி நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் ‘கூடலூர் பகுதியில் கடந்த சில நாட்களாக ஆண் காட்டு யானை ஒன்று தொடர்ந்து நடமாடி வருகிறது. அதனை கண்காணிக்க இரவு பகலாக குழுக்கள் இயங்கி வருகின்றன. கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டுள்ளன, டிரோன் மூலம் கண்காணிக்கப்பட்டு வருகின்றது. வனத்துறையினருக்கு பந்தலூர் பகுதியில் உள்ள பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் ‘ என்றார்.
2017 – 2022 வரையிலான ராணுவ நிலைக்குழு அறிக்கை, லோக்சபாவில் நேற்று முன்தினம் தாக்கல் செய்யப்பட்டது. அதில் கூறப்பட்டுள்ளதாவது: கடந்த 2017 – 2022 வரை 34 விமானப்படை விமானங்கள் விபத்தில் சிக்கியுள்ளன. இதில், குன்னுாரில் முப்படைகளின் தளபதி பிபின் ராவத் பயணம் செய்த ஹெலிகாப்டர் விபத்து வானிலை மாற்றம் காரணமாக தடுமாறிய விமானியின் தவறே காரணம் என ராணுவ நிலைக்கு குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
பந்தலூர் அருகே சேரம்பாடி மற்றும் பிதர்காடு வனச் சரகங்களுக்கு உட்பட்ட பகுதியில் புல்லட் என்ற யானை மக்களை இரவு நேரங்களில் அச்சுறுத்தி வருகின்றன. இந்தநிலையில் படைச்சேரி, சின்கோனா, யானை பள்ளம் பகுதிகள் உட்பட்ட 30 வீடுகளை இடித்து உணவு பொருட்களை தின்று சென்று உள்ளன. இதை தொடர்ந்து அப்பகுதிக்கு 2 கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டு, யான விரட்டும் பணி துவக்கப்பட்டது.
குந்தா, உதகை தாலுக்காவிற்கு உட்பட்ட 8 கூட்டுறவு தேயிலை தொழிற்சாலையில், அங்கத்தினர்களுக்கு அக்டோபர் மாதத்தில் அரசு நிர்ணயித்த பசுந்தேயிலைக்கான விலையை கொடுக்காததால், விவசாயிகள் வீதியில் இறங்கி போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர். வரும் 21-ம் தேதிக்குள் கொடுக்கவில்லை எனில் விவசாயிகள் முன்னெடுக்கும் சிறை நிரப்பும் போராட்டத்திற்கு, அனைத்து அரசியல் கட்சியினர், விவசாய சங்கத்தினர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
➤ டீசலுக்கு மாற்றப்பட்ட மலை ரயில் இன்ஜின்கள் ➤ கூடலூரில் மண் கடத்தல்: 2 லாரிகள் பறிமுதல் ➤ கோத்தகிரியில் தேயிலை விவசாயிகள் கூட்டம் ➤ குன்னூரில் நாளை மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம் ➤ பந்தலூரில் 4 வீடுகளை சேதப்படுத்திய காட்டு யானை ➤ நீலகிரி மாவட்டத்தில் கேரட் விலை வீழ்ச்சி ➤ உதகையில் காங்கிரஸ் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம் ➤ நீலகிரியில், இரவில் கருஞ் சிறுத்தை உலா
நீலகிரி மாவட்டத்தில் இன்று (19.12.2024) இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் வெளியிடப்பட்டுள்ளது. உதகை நகரம் ஊரக உட்கோட்டம், குன்னூர் உட்கோட்டம், கூடலூர் மற்றும் தேவாலா உட்கோட்டம் ஆகிய காவல் நிலைய அதிகாரிகளின் தொடர்பு எண்கள் நீலகிரி மாவட்ட காவல்துறையால் வெளியிடப்பட்டுள்ளது
நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்துக்கு வரும் சுற்றுலா பயணிகளை, வனத்துறையினர் தெப்பக்காடு வரவேற்பு மையத்திலிருந்து, தங்கள் வாகனம் மூலம் வனப்பகுதிக்கு அழைத்து சென்று வருகின்றனர். இந்நிலையில் வனத்தில் வாகன சவாரி சென்ற சுற்றுலா பயணிகள், சிறுத்தை மரக்கிளையில் அமர்ந்து ஓய்வெடுத்ததை, ஆச்சரியத்துடன் பார்த்து ரசித்தனர். மேலும், இதனை வனத்துறையினர் மற்றும் சுற்றுலா பயணிகள் புகைப்படம் எடுத்துள்ளனர்.
நீலகிரி மாவட்டம் பந்தலூர் வட்டம் சேரம்பாடி பிதர்காடு வனச்சரகம் பகுதியில் காட்டு யானைகளின் தொல்லையால் ஏற்பட்ட வீட்டு உபயோகப் பொருட்களுக்கு உரிய இழப்பீடு வழங்கப்படும் என வனச்சரகர் அய்யனார் கூறியுள்ளார். இந்நிலையில் போராட்டத்தில் ஈடுபட்ட டேன் டீ தொழிலாளர்கள் அட்டகாசம் செய்து வரும் காட்டு யானையை மயக்க ஊசி கண்டுபிடித்தோ அல்லது கும்கி யானையைக் கொண்டு விரைவில் விரட்ட வேண்டும் என கூறியுள்ளனர்.
நீலகிரி மாவட்டம், குன்னூர் வட்டத்தில், “உங்களைத் தேடி உங்கள் ஊரில்” திட்டத்தின் கீழ் இரண்டாவது நாளான இன்று குன்னூர் நகராட்சிக்குட்பட்ட வண்டிச்சோலை நகராட்சி நடுநிலைப்பள்ளியில் முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தின் கீழ் மாணவ, மாணவியர்களுக்கு வழங்கப்படும் உணவின் தரத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் லட்சுமி பவ்யா தண்ணீரு, நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்.
Sorry, no posts matched your criteria.