Thenilgiris

News December 22, 2024

புல்லட் யானையை கண்காணிக்கும் பணி தீவிரம்!

image

பந்தலூர், சேரங்காடு அரசு தேயிலை தோட்டம் உள்பட பல்வேறு பகுதிகளில், புல்லட், காட்டு யானை அட்டகாசம் அதிகரித்து வருகிறது. இரவு நேரங்களில் குடியிருப்பு பகுதிகளுக்கு வரும் யானை, வீடுகளை சேதம் செய்துவிட்டு, உணவுப் பொருட்களை உண்டு செல்கின்றன. இந்நிலையில் யானையை கண்காணிக்க வனச்சரகர்கள் தலமையில் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் இரவு நேரங்களிலும் வனத்துறையினர், விடிய விடிய தீவிரமாக கண்காணிக்கின்றனர்.

News December 21, 2024

நீலகிரி அதிகாரிகளின் இரவு ரோந்து பணி விபரம்

image

நீலகிரி மாவட்டத்தில் இன்று (21.12.2024) இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் உதகை நகரம் ஊரக உட்கோட்டம், குன்னூர் உட்கோட்டம், கூடலூர் மற்றும் தேவாலா உட்கோட்டம் ஆகிய காவல் நிலைய அதிகாரிகளின் தொடர்பு எண்கள் நீலகிரி மாவட்ட காவல்துறையால் வெளியிடப்பட்டுள்ளது.

News December 21, 2024

நீலகிரி தலைப்புச் செய்திகள்

image

1.கோத்தகிரியில் மாவட்ட கால்பந்து போட்டி
2.மலை ரயில் பாதைகள் சீரமைக்கும் பணி தீவிரம்
3.கோத்தகிரியில் ஜவுளி வியாபாரிகள் சங்க கூட்டம்
4.தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி குறைதீர் கூட்டம்
5.குன்னூரில் நாளை இலவச கண் சிகிச்சை முகாம்

News December 21, 2024

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி குறைதீர் கூட்டம்

image

கோவை மண்டல வைப்பு நிதி கமிஷனர் வைபவ் சிங் தெரிவித்துள்ள தகவலில் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி சந்தாதாரர்களுக்காக வரும் 27ஆம் தேதி நிதி ஆப்கே நிகட் என்ற பெயரில் குறைதீர்ப்பு கூட்டம் அனைத்து மாவட்டங்களில் நடக்க உள்ளது.குன்னூரில் உப்பாசி ஹால்,8 ஃபிகர் ரோடு பெட்போர்டு ஆகிய இடங்களில் காலை 10:30 மணி முதல் 12:30 மணி வரை நடைபெற உள்ளது.தகுந்த சான்றிதழ்கள் உடன் நேரில் முறையிடலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News December 21, 2024

நீங்களும் ரிப்போர்ட்டர் ஆகலாம்!

image

தமிழின் முன்னணி செய்தி நிறுவனமான WAY2NEWS-ல் நீங்களும் நிருபர் ஆகலாம். நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் கூடலூர், உதகை, குன்னூர், கோத்தகிரி, பந்தலூர், குந்தா ஆகிய தாலூகா பகுதிகளில் நடக்கும் அன்றாட நிகழ்வுகளை செய்தியாக பதிவிட்டு வருவாய் ஈட்டுங்கள். மேலும், விபரங்களுக்கு 95819-22022 என்ற எண்ணை தொடர்ப்பு கொள்ளலாம். மேலும், WhatsApp பண்ணலாம்.

News December 21, 2024

கோத்தகிரியில் உழவர் சந்தை? 

image

நீலகிரி மாவட்டம் ஊட்டி பிங்கர் போஸ்ட் கூடுதல் ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. நீலகிரி மாவட்ட விவசாயிகள் ஏராளமாக கலந்து கொண்டனர். இதில் தலைமை வகித்து பேசிய நீலகிரி மாவட்ட ஆட்சித் தலைவர் லட்சுமி பவ்யா தண்ணீரு கோத்தகிரியில் உழவர் சந்தை அமைக்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று தெரிவித்தார்.

News December 21, 2024

முதுமலை தெப்பக்காடு பகுதியில் பெண் புலி இறப்பு

image

முதுமலை புலிகள் காப்பகம் தெப்பகாடு வன சரகம் நீரால் வேட்டை தடுப்பு முகாம் முன் நிலை கள பணியாளர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கூடாரப் வயல், தொட்டகட்டி பிரிவு, தொட்டகட்டி வன காவல் பகுதியில் பெண் புலி ஒன்று இறந்து கிடந்தது. தகவல் அறிந்த முதுமலை புலிகள் காப்பக துணை இயக்குநர், உதகை வன கோட்டத்தில் வனத்துறை இறந்த புலி உடல் கூராய்வுக்கு பின் எரியூட்டப்படுவதாக தெரிவித்தனர்.

News December 21, 2024

கொடநாடு வழக்கு ஜன.24 க்கு ஒத்திவைப்பு

image

கொடநாடு கொலை கொள்ளை வழக்கு ஊட்டியில் உள்ள அமர்வு நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பு வழக்கறிஞர் ஷாஜகான் மற்றும் சிபிசிஐடி ஏடிஎஸ்பி முருகவேல் ஆஜர் ஆகினர். மாவட்ட அமர்வு நீதிபதி முரளிதரன் முன்னிலையில் வழக்கு விசாரணைக்கு வந்த போது கூடுதல் அவகாசம் கோரப்பட்டதால், நீதிபதி முரளிதரன் வழக்கை ஜனவரி 24 தேதிக்கு ஒத்தி வைத்தார்.

News December 20, 2024

நீலகிரி  இரவு ரோந்து பணி விபரம்

image

நீலகிரி மாவட்டத்தில் இன்று (20.12.2024) இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் உதகை நகரம் ஊரக உட்கோட்டம், குன்னூர் உட்கோட்டம், கூடலூர் மற்றும் தேவாலா உட்கோட்டம் ஆகிய காவல் நிலைய அதிகாரிகளின் தொடர்பு எண்கள் நீலகிரி மாவட்ட காவல்துறையால் வெளியிடப்பட்டுள்ளது

News December 20, 2024

நீலகிரி தலைப்புச் செய்திகள்

image

1.உதகையில் விசிக ரயில் மறியல் போராட்டம்
2.கூடலுார் தாலுகா பகுதியில் நிர்வாக அலுவலர்கள் இடமாற்றம்
3.உதகையில் AITUC போக்குவரத்து தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
4.கூடலூர் காட்டு யானை விவகாரம்: அமைச்சர் பொன்முடி தகவல்
5.குன்னூர் ஹெலிகாப்டர் விபத்து: மனித தவறே காரணம்

error: Content is protected !!