India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தொடர் விடுமுறை ஒட்டி மலை ரயில் பயணம் செய்ய சுற்றுலா பயணிகள் திரண்டு வந்திருந்தனர். ஜனவரி 2ஆம் தேதி வரை சிறப்பு ஏற்பாடாக “ரவுண்ட் ட்ரிப் ஜாய் டிரெயின்” எனும் பெயரில் ஊட்டி மற்றும் கேத்தி இடையே ரயில் சேவை மூன்று முறை சுற்று ரயிலாக இயக்கப்படுகிறது. நேற்றைய தினம் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. முன்பதிவில்லாத இடங்களுக்கு நீண்ட வரிசையில் சுற்றுலா பயணிகள் காத்திருந்து டிக்கெட் பெற்றுச் சென்றனர்.
உதகை ATC பகுதியில் நீலகிரி மாவட்ட அதிமுக செயலாளர் கப்பச்சி வினோத் தலைமையில் தமிழக அரசுக்கு கண்டனம் தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழ்நாட்டில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள், பாலியல் சீண்டல்கள் ஆகியவைகளை கட்டுப்படுத்த தவறிய திமுக ஆட்சிக்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டன. மாவட்ட துணை செயலாளர் கோபாலகிருஷ்ணன், சாந்தி ராமு சக்சஸ் சந்திரன் உள்பட ஏராளமானவர்கள் பங்கேற்றனர்.
ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாளான நேற்று வழக்கமான நாட்களில் வரும் எண்ணிக்கையை விட அதிகமான பயணிகள் கூட்டம் காணப்பட்டது. சுற்றுலா பயணிகளின் வாகனங்கள் அதிகளவு வந்த நிலையில் ஊட்டி நகரின் நுழைவாயில் பகுதியான தலையாட்டு மந்து முதல் சேரிங்கிராஸ் வரையிலும்,கோத்தகிரி சாலையில் தொட்டபெட்டா சந்திப்பு வரையிலும்,கூடலூர் சாலையில் பிங்கர் போஸ்ட் வரையிலும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
ஊட்டியில் அதிமுக கொறடா எஸ்.பி.வேலுமணி நேற்று கூறுகையில், “நீலகிரியின் முக்கிய பிரச்சனை இபாஸ். மாவட்ட நிர்வாகம் மெத்தனமாக இருப்பதால்,போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இ-பாஸ் நடைமுறை குளறுபடிகளால் இங்குள்ள மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. சுற்றுலா பயணிகள் வருகை 30% குறைந்துள்ளது. மாவட்ட நிர்வாகத்தின் எந்த திட்டமிடலும் இல்லை. மாவட்டத்தின் வளர்ச்சி குறைகிறது” என்றார்.
நீலகிரி மாவட்டத்தில் சுற்றுலா பயணிகள் கூட்டம் மூலை முடக்குகளில், எங்கு பார்த்தாலும், தொடர் விடுமுறை காரணமாக நிரம்பி காணப்படுகிறது. இந்த நிலையில் மலை ரயிலில் வரும் நண்பர்களையும், உறவினர்களையும் வரவேற்று கூட்டி செல்லவும், செல்பவர்களை வழி அனுப்பி வைக்கவும் கேத்தி ரயில் நிலையத்தில் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.
திருநெல்வேலி, எம்.டி.டி இந்து கல்லூரி வளாகத்தில், இந்திய செஞ்சிலுவை சங்கம் சார்பில், 7 மாவட்டங்களுக்கு நடமாடும் இலவச மருத்துவ வாகனங்கள் வழங்கும் விழா இன்று நடைபெற்றது. இதில் செஞ்சிலுவை சங்க மாநில துணை தலைவர் ஓய்வு பெற்ற நீதிபதி முனைவர் ஜெயச்சந்திரன், நீலகிரி மாவட்டத்திற்கு வழங்கிய மருத்துவ வாகனத்திற்கான சாவியை, நீலகிரி மாவட்ட செஞ்சிலுவை சங்க செயலாளர் மோரிஸ் சாந்தா குருஸ் பெற்றுக் கொண்டார்.
மது இல்லாத புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு, நீலகிரி சுற்றுலாத்துறை ஏற்பாடு செய்துள்ளது. அந்தவகையில், ஊட்டியில் உள்ள தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகத்தின் கீழ் இயங்கும், ஹோட்டல் தமிழ்நாட்டில் இம்முறை முதல் முறையாக புத்தாண்டு விழா நடக்கிறது. மேலும், வரும் டிசம்பர் 31ஆம் தேதி நள்ளிரவில் பல்வேறு நிகழ்ச்சிகளும் திட்டமிடப்பட்டுள்ளன.
நீலகிரி மாவட்டம் கூடலூர் வட்டம் பாடந்துறை பகுதியில்சுண்டவயல் கருக்க பாலி என்ற இடத்தில் விவசாயி ராம்முன்னி அவர்களின் ஆறு ஆடுகளை சிறுத்தை நேற்று இரவு கொன்றது.இதனால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளார்கள். உடனடியாக தகுந்த நிவாரணம் தர வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்தனர். வனத்துறை தகுந்த நடவடிக்கை எடுத்து பாதுகாப்பு கொடுக்க வேண்டும்.
நீலகிரி எஸ்பி நிஷா விடுத்துள்ள செய்தியில், போலி இணையதளங்களில் பணத்தை முதலீடு செய்து ஏமாற வேண்டாம் என்றும், தெரியாத நபர்களிடம் இருந்து வரும் அழைப்புகளில் வங்கி மற்றும் சுய விவரங்களை பகிர வேண்டாம் என்றும், வீடியோ அழைப்பில் வந்து இணையவழி கைது என்று கூறி பணம் கேட்டு மிரட்டினால் பயம் வேண்டாம் என்றும் கூறியுள்ளார். மேலும் 1930 எண்ணை தொடர்பு கொள்ளவும்.
நீலகிரி மாவட்டத்தில் இன்று (28.12.2024) இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் வெளியிடப்பட்டுள்ளது. உதகை நகரம், ஊரக உட்கோட்டம், குன்னூர் உட்கோட்டம், கூடலூர் மற்றும் தேவாலா உட்கோட்டம் ஆகிய காவல் நிலைய அதிகாரிகளின் தொடர்பு எண்கள் நீலகிரி மாவட்ட காவல்துறையால் வெளியிடப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.