India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

நீலகிரி மக்களே! உங்கள் சொந்த ஊரில் உள்ள வங்கியில் வேலை வேண்டுமா? இந்தியாவின் வங்கிப் பணியாளர் தேர்வாணயம் (IBPS) கிராம வங்கி உதவியாளர் வேலைக்கு 7927 காலிப்பணியிடங்களை அறிவித்துள்ளது. இதற்கு ஏதேனும் ஓர் டிகிரி முடித்திருந்தாலே போதும். தேர்வு முறையில் ஆட்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். தேர்விற்கு உரிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்க இங்கே <

நீலகிரி மாவட்டம், ஊட்டி நகராட்சிக்கு உட்பட மார்க்கெட் பகுதியில், ஆங்கிலேயர் காலத்தில், 1860ம் ஆண்டு முதல் போலீஸ் ஸ்டேஷன் செயல்பட தொடங்கியது.ஊட்டியின் முதல் போலீஸ் ஸ்டேஷனாகும்.கடந்த, 2016ம் ஆண்டு முதல் புதிய கட்டடத்தில் ஸ்டேஷன் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், பழைய கட்டிடம் காவல் துறையினரின் குழந்தைகளை பராமரிக்கும் மையமாக மாற்ற முடிவு எடுக்கப்பட்டு அதற்கான பணிகள் முடியும் தருவாயில் உள்ளது.

நீலகிரி மக்களே தமிழ்நாடு அரசின் உள்துறை, மதுவிலக்கு மற்றும் கலால் துறையில் பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. சம்பளமாக ரூ 40,000 முதல் ரூ 1,50,000 வரை வழங்கப்படும். ஆர்வமுள்ளவர்கள் 25.09.2025 தேதிக்குள் விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கலாம். இங்கே <

▶️நீலகிரியில் வாடகை வீட்டில் வசிப்பவர்கள், வாடகை உயர்வு, திடீர் வெளியேற்றம், முன்பண பிரச்சனை போன்ற பல்வேறு பிரச்சனைகளை எதிர்கொள்கின்றனர்.▶️ வாடகை வீட்டில் குடியிருப்போர் உரிமைகளை பாதுகாக்க தனி சட்டமே உள்ளது. ▶️உங்கள் வீட்டின் உரிமையாளர் அதிக கட்டணம் வசூலித்தாலோ அல்லது தொந்தரவு செய்தாலோ, 1800 599 01234 என்ற தமிழக வீட்டுவசதித் துறையின் கட்டணமில்லா எண்ணில் புகார் அளிக்கலாம். ▶️இதை SHARE பண்ணுங்க.

நீலகிரி மாவட்டத்தில் விவசாயிகள் குறை தீர்ப்பு கூட்டம் இம்மாதம் 19ஆம் தேதி காலை 11 மணிக்கு கூடலூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது. விவசாயிகள் தங்கள் குறைகளை வரும் 5ஆம் தேதிக்குள் தோட்டக்கலைத் துறை இணை இயக்குனர் அலுவலகத்திற்கு நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ அனுப்பலாம். இக்கூட்டத்தில் விவசாயிகள் கலந்து கொண்டு தங்களது பிரச்சனைகளுக்கு தீர்வு காணலாம். இதை மற்றவர்களும் ஷேர் செய்யுங்கள்!

நீலகிரியில் அனைத்து செல்லப்பிராணிகள் வளர்ப்போர், செல்ல பிராணிகள் விற்பனை செய்வோர், செல்லப்பிராணிகள் தங்கும் விடுதிகள் நடத்துபவர்கள் தங்கள் வசிக்கக் கூடிய பகுதிகளுக்கு உட்பட்ட நகராட்சி, உள்ளாட்சி பகுதிகளில் உள்ள பிறப்பு கட்டுப்பாட்டு மைய அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்டு இணையதளத்தில் பதிவேற்றி உரிமம் பெற வேண்டும். பதிவு செய்யப்பட வேண்டிய கடைசி நாள் செப்.30. (SHARE IT)

நீலகிரி மக்களே.., தமிழக அரசின் ‘வெற்றி நிச்சயம்’ திட்டத்தின் கிழ் இலவச ‘ Broadband Technician’ பயிற்சி நீலகிரியிலேயே செப்.3ஆம் தேதி முதல் வழங்கப்படவுள்ளது. இந்தப் பயிற்சிக்கு 10ஆவது படித்திருந்தாலே போதுமானது. மேலும், பயிற்சியில் இடம்பெற்றால் வேலை உறுதி. இதுகுறித்து விவரங்கள் அறிய, விண்ணப்பிக்க <

நீலகிரி என்றால் ’நீலமலை’ என்று பொருள். தமிழின் தொன்மையான இலக்கியமான சிலப்பதிகாரத்தில் இந்தப் பெயரைக் காண முடியும். 1818ஆம் ஆண்டில், அப்போதைய கோவை ஆட்சியர் ஜான் சுல்லிவன் தனது உதவியாளர்களுடன் கோத்தகிரியைக் கண்டறிந்தார். நீலகிரியின் இயற்கை வளங்கள், நீர் நிலைகளுக்கு மூலதனம் அவரே. மேலும் பூர்வகுடி மக்களுக்கு பட்டா, சிட்டா வழங்கி ‘உழுபவருக்கே நிலம்’ என அறிமுகம் செய்தார்.

உதகை மாவட்ட கூடுதல் ஆட்சியர் அலுவலக அரங்கில் செப்டம்பர் மாதம் 19ஆம் தேதி முற்பகல் 11 மணிக்கு விவசாயிகள் குறை தீர்ப்பு நாள் கூட்டம் நடைபெறுகிறது . எனவே விவசாயிகள் தங்களுடைய விவசாயம் சம்மந்தப்பட்ட கோரிக்கைகளை 5 தேதிக்குள் தோட்டக்கலை இயக்குனர் தபால் பெட்டி 72 , உதகை 643001 முகவரிக்கு அனுப்பலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

நீலகிரி மாவட்டத்தில் இன்று (31.08.2025) இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் உதகை நகரம் ஊரக உட்கோட்டம், குன்னூர் உட்கோட்டம், கூடலூர் மற்றும் தேவாலா உட்கோட்டம் ஆகிய காவல் நிலைய அதிகாரிகளின் தொடர்பு எண்கள் நீலகிரி மாவட்ட காவல்துறையால் வெளியிடப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.