India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நீலகிரி மாவட்டத்தில் ஒவ்வொரு மாதமும் விவசாயிகள் குறை தீர்ப்பு கூட்டம், மாவட்ட ஆட்சியர் தலைமையில் கூடுதல் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெறுகிறது. அதன்படி இம்மாதத்துக்கான கூட்டம் வரும் 24ஆம் தேதி நடைபெறுகிறது. இதில் மாவட்ட ஆட்சியர், தோட்டக்கலைத்துறை இணை இயக்குனர் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொள்ள உள்ளனர். இதில் விவசாயிகள் கலந்து கொண்டு தங்களது குறைகளை தெரிவித்து பயன்பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மாவட்ட விளையாட்டு அலுவலர் இந்திரா கூறியிருப்பதாவது முன்னாள் முதலமைச்சர் அறிஞர் அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் நீலகிரி மாவட்ட பிரிவு மூலமாக அறிஞர் அண்ணா மிதிவண்டி போட்டிகள் வரும் 4-ம் தேதி 8 மணிக்கு ஊட்டி படகு இல்ல சாலை தண்டர்வேர்ல்ட் முதல் மான் பூங்கா வரை நடத்தப்பட உள்ளது. ஊட்டியில் பங்கேற்பவர்கள் நாளை மாலை 5 மணிக்குள் அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டுகோள்.
ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவிற்கு கடந்த ஆண்டு ஜனவரி முதல் டிசம்பர் மாதம் வரை 23 லட்சத்தி 95 ஆயிரத்தி 894 பேர் வந்துள்ளனர். இது 2023 ஆம் ஆண்டு காட்டிலும் நான்கு லட்சம் குறைவானதாகும். நான்கு லட்சம் சுற்றுலாப் பயணிகள் குறைந்துள்ளது சுற்றுலா ஆர்வலர்கள் மற்றும் வியாபாரிகள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ஆன்லைன் மோசடியில் முதலீடு செய்தால் அதிக லாபம், திருமண செயலி, நெட் பேங்க் எண் மாற்றம், ஓஎல்எக்ஸ் செயலி வாயிலாக கடன், கூகுள் ரிவ்யூ சேவை, டிஜிட்டல் மார்க்கெட்டிங், ஜிஎஸ்டி வரி, வேலைவாய்ப்பு போன்ற பல வகை மோசடி குறித்து புகார்கள் வருகின்றன. இதுவரை வந்த 80 புகாரில் 25 தீர்வு கண்டு முடிக்கப்பட்டது. இதுவரை ரூ.2 கோடி மீட்கப்பட்டுள்ளது. எனவே சைபர் கிரைம் 1930 எண்ணை தொடர்பு கொள்ள அறிவுறுத்தப்படுகிறது.
முதுமலைக்கு கொண்டு வரப்பட்ட தாயை இழந்த குட்டி யானைக்கு, இரண்டு மணி நேரத்துக்கு ஒரு முறை மற்றும் பசிக்கும் நேரங்களில் ‘லாக்டோஜன்’ பால் பவுடர், குளுக்கோஸ், தண்ணீர் வழங்கி வருகின்றனர். தற்போது, குளிர்காலம் என்பதால், கராலினுள் ஹீட்டர் வசதியும் செய்யப்பட்டுள்ளது. காலை,மாலை நேரத்தில் நடை பயிற்சி அளிக்கப்படுகிறது. குட்டி யானைக்கு பாதிப்பு ஏற்படுவதை தடுக்க, அதன் அருகே வெளி நபர்கள் அனுமதிப்பதில்லை.
நீலகிரி மாவட்டத்தில் தேயிலை தொழிற்சாலைகளுக்கு விவசாயிகள் விநியோகம் செய்யும் பசுந்தேயிலைக்கு, இந்திய தேயிலை வாரியம் மாதம் தோறும், குறைந்த பட்ச கொள் முதல் விலையை நிர்ணயித்து வருகிறது. தேயிலை வாரிய செயல் இயக்குநர் முத்துகுமார் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த மாதம் விவசாயிகள் தொழிற்சாலைக்கு விநியோகம் செய்த தேயிலை கிலோவுக்கு குறைந்த பட்ச விலையாக 20.37 ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ளது என கூறப்பட்டுள்ளது.
நீலகிரியில் கடந்த 2024-ல் 72 பாலியல் குற்ற வழக்குகள் மற்றும் 2 பாலியல் வன்கொடுமை வழக்குகள் பதிவாகி உள்ளன. பாலியல் குற்றங்களைக் குறைக்கும் வகையில் 2024-ம் ஆண்டு 3516 விழிப்புணர்வு நிகழச்சி நடத்தப்பட்டு உள்ளன. மேலும் 17 பாலியல் குற்ற வழக்குகளுக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளது. நடப்பாண்டில் 32 வருட சிறை மற்றும் ஒரு வழக்கில் சாகும் வரை சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது என நீலகிரி எஸ்பி, நிஷா தெரிவித்தார்.
நீலகிரி கூட்டுறவு விற்பனை சங்கம் மேட்டுப்பாளையம் கிளை சார்பாக, நாள்தோறும் உதகை உருளைக்கிழங்கு ஏலம் நடைபெற்று வருகிறது. அதன்படி ஆரிகவுடர் ஏல மையத்தில் இன்று ராசி வகை உருளைக்கிழங்கு 45 கிலோ மூட்டைக்கு அதிகபட்சமாக ரூ.1,720-க்கும் குறைந்தபட்சமாக ரூ.1,090-க்கும் ஏலம் போனது. பொடி வகை அதிகபட்சமாக ரூ.720-க்கும் குறைந்தபட்சமாக ரூ.380-க்கும் ஏலம் போனது. மொத்தம் 1375 மூட்டைகள் விற்பனை செய்யப்பட்டது.
புத்தாண்டு தினத்தை முன்னிட்டு அதிக வாகனங்கள் சமவெளி பகுதியில் இருந்து ஊட்டிக்கு வரும் என்பதாலும், வெளி மாநில சுற்றுலா பயணிகளும் வருகை அதிகரிக்கும் என்பதாலும், சேரிங் கிராஸ், பிங்கர் போஸ்ட், தலைகுந்தா செக் போஸ்ட், மைசூர் ரோடு, லவ்டேல் ஜங்ஷன் ஆகிய இடங்களில் அதிகளவு போலீசார் பணியில் உள்ளனர். நேற்று காலை முதலே போக்குவரத்து சரிசெய்யும் பணியில் உள்ளனர்.
நீலகிரி மாவட்டத்தில் புகழ் பெற்ற ஊட்டி மலர் கண்காட்சியில், லட்சக்கணக்கான மலர்களை, ஒவ்வொரு ஆண்டும் மே மாதம், திரளான சுற்றுலா பயணிகள் ரசித்து செல்கின்றனர். இந்த நிலையில் சென்னையில் செம்மொழி பூங்காவில் நடக்கும் மலர் கண்காட்சியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஜன. 2 ல் திறந்து வைக்கிறார். இதற்காக ஊட்டி பூங்காவில் இருந்து மலர் தொட்டிகள் எடுத்து செல்லப்பட்டன.
Sorry, no posts matched your criteria.