Thenilgiris

News February 4, 2025

நீலகிரி: விடுப்புடன் சம்பளம் அறிவிப்பு!

image

ஈரோடு கிழக்கு சட்டசபை இடைத்தேர்தல் நாளை நடைபெற உள்ள நிலையில் நீலகிரி மாவட்டத்தில் பணிபுரியும் ஈரோடு கிழக்கு தொகுதி தொழிலாளர்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுப்பு வழங்கப்பட வேண்டும் என குன்னூர் தொழிலாளர் உதவி கமிஷனர் தாமரை மணாளன் அறிக்கை வெளியிட்டுள்ளார். விடுப்பு தொடர்பாக ஏதேனும் புகார் இருப்பின் சம்பந்தப்பட்ட அலுவலர்களை (9952080800,9840456912) தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம் என கூறியுள்ளார்.

News February 4, 2025

விண்ணப்பிக்கலாம்: நீலகிரி ஆட்சியர் தகவல்

image

ஊட்டியில் உள்ள இளைஞர் விடுதியில் ஒப்பந்த அடிப்படையில் ஒரு வருடத்திற்கு உணவகம் அமைக்க விருப்பம் உள்ளோர் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சித் தலைவர் அறிவித்துள்ளார். உணவு பட்டியலையும் அதற்கான விலைப்பட்டியலையும் பதிவு தபாலில் மாவட்ட கலெக்டர் மற்றும் தலைவர் இளைஞர் விடுதி, ஸ்டோன் ஹவுஸ் ஹில்அஞ்சல் , அரசு கலை கல்லூரி அருகில், ஊட்டி என்ற முகவரிக்கு வரும் பத்தாம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என கூறியுள்ளார்.

News February 4, 2025

தமிழக வெற்றி கழகத்தின் நீலகிரி மாவட்ட செயலாளர் நியமனம்

image

தவெகவின் நீலகிரி மாவட்ட செயலாளராக பாமா ரமேஷ் நியமிக்கப்பட்டுள்ளார். இணைச்செயலாளராக கணேஷ், பொருளாளராக ராஜேஷ்குமார், துணைச் செயலாளர்களாக ஆனந்தகுமார் மற்றும் ஹினா கவுசர் ஆகியோர் தலைமைக் கழகத்தால் நியமிக்கப்பட்டுள்ளனர். பஷீர், சூரிய பிரகாஷ், ராஜேஷ், சைலாஸ்ரீ, ஷர்பு நிஷா,செந்தில்குமார், பரத் மகேஷ் குமார், இப்ராஹிம், ஸ்ரீ வாணி, நூர் முகமது, ஆகியோர் செயற்குழு உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

News February 3, 2025

உதகை: ரூ.40,000 அபராதம் விதிப்பு

image

சென்னை உயர் நீதிமன்றம் 2019 மே மாதம் வெளியிட்ட தீர்ப்பில், ‘நீலகிரி மாவட்டத்தில் பிளாஸ்டிக் குடிநீர் பாட்டில்கள், பிளாஸ்டிக்கில் அடைக்கப்பட்ட குளிர் பானங்கள், உணவு பொருட்கள் பயன்படுத்த கூடாது’ என தடை விதித்தது. இந்தநிலையில், ஊட்டி ஆர்.டி.ஓ. சதீஷ் குமார் தலைமையில் நேற்று லவ்டேல் பகுதியில் 12 கிலோ பாட்டில்கள் பறிமுதல் செய்து ரூ.40,000 அபராதம் விதிக்கப்பட்டது.

News February 3, 2025

நீலகிரியை கண்டுபிடித்த ஜான் சல்லிவன்!

image

1819-ல் நீலகிரியை முதல்முதலாக கண்டுபிடித்து, கட்டமைத்தவர் ஜான் சல்லிவன். நீலகிரி மாவட்டத்தின் முதல் கலெக்டரும் ஜான் சல்லிவன்தான். ஊட்டி நகரம் மற்றும் ஊட்டி ஏரியை நிர்மாணித்தவரும் இவரே ஆவார். கோவையின் கலெக்டராக ஜான் சல்லிவன் இருந்தபோது, “உழுபவர்க்கே நிலம்” என்பதை அறிவித்து, பட்டா, சிட்டாவை தமிழகத்தில் அறிமுகப்படுத்தியதும் ஜான் சல்லிவன்தான்.

News February 3, 2025

ஆற்றில் குவியும் பிளாஸ்டிக் கழிவுகள் சுற்றுச்சூழலுக்கு ஆபத்து

image

நீலகிரி மாவட்டத்தில் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை உள்ள நிலையில் பிளாஸ்டிக் பயன்பாடு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சுற்றுலாப் பயணிகள் மூலம் வரும் பிளாஸ்டிக்குகள் பயன்படுத்திவிட்டு சுற்றுலா மையங்களை சுற்றியுள்ள நீரோடைகளிலும், வனப்பகுதிகளிலும் தொடர்ந்து வீசப்படுவது நடந்து வருகிறது. குன்னூர் ஆற்றில் வீசப்படும் கழிவுகள் சமவெளியில் உள்ள பவானி ஆற்றில் கலப்பதால் ஆபத்து ஏற்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது.

News February 3, 2025

ஊட்டியில் தொடரும் பிளாஸ்டிக் சோதனை 

image

ஊட்டிக்கு வரும் சுற்றுலா வாகனங்களில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் குடிநீர் பாட்டில்கள் உள்ளதா என்பது குறித்து ஆர்டிஓ சதீஷ்குமார் தலைமையில் சோதனை நடைபெற்று வருகிறது. இதுவரை தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் மூலம் 40 ஆயிரம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. தாசில்தார் ஷங்கர் கணேஷ் உள்ளிட்ட வருவாய் துறையினர் லவ்டேல் சந்திப்பில் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

News February 3, 2025

எடக்காடு பகுதியில் புலி நடமாட்டம் இல்லை

image

ஊட்டி அருகே மஞ்சூர் எடக்காடு பகுதியில், நேற்று மாலை புலி ஒன்று உலா வந்ததாக சமூக வலைதளங்களில் செய்தி பரவியது. இதையடுத்து வனத்துறை அதிகாரிகள் அப்பகுதியில் ஆய்வுசெய்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அவர்கள் தெரிவிக்கையில், எடக்காடு குடியிருப்பு பகுதியில் புலி நடமாடியதாக புரளி கிளப்பப்பட்டுள்ளது. இது முற்றிலும் தவறான செய்தியாகும். பொய் தகவல் பரப்புபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.

News February 2, 2025

குற்றப்பிரிவு- சட்ட ஆலோசகர்கள் விண்ணப்பிக்கலாம்!

image

குற்றப்புலனாய்வுத் துறை சரகங்களுக்கு விருப்பமுள்ள சட்ட ஆலோசகர்கள் விண்ணப்பிக்கலாம்;ஆலோசகர் காலியிடங்கள் ஒப்பந்த அடிப்படையில் 5 சட்ட ஆலோசகர்களை நியமிக்க குற்றப்பிரிவு புலனாய்வுத்துறை திட்டம். விருப்பமுள்ளவர்கள் <>www.tnpolice.gov.in <<>>தளத்தில் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்யலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை மற்றவர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்.

News February 2, 2025

நீலகிரியில் பட்டப்பகலில் புலி: அலறி ஓடிய மக்கள்

image

நீலகிரி மாவட்டம் மஞ்சூர் அடுத்த எடக்காடு பகுதியில் குடியிருப்பு, வணிக வளாகங்கள், தேயிலை தொழிற்சாலைகள் என எடக்காடு பஜார் பகுதியில் மாலை 3 மணி அளவில் பலத்த உறுமல் சத்தத்துடன் ஒரு வீட்டின் வாசல் வழியாக சாலையில் மெதுவாக புலி நடந்து வந்தது. வீட்டின் முன் பகுதியில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தைகள், அமர்ந்து கொண்டிருந்த பெரியவர்கள் அலறி அடித்து வீட்டுக்குள் ஓடினர். புலியால் மக்கள் பீதியில் உள்ளனர்.

error: Content is protected !!