India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

நீலகிரி மாவட்டத்தில் முக்கிய சுற்றுலா தளமாக விளங்கும் மசனகுடி தெப்பக்காடு யானைகள் முகாம் தென் மண்டல அளவிலான புலிகள் கணக்கெடுப்பு குறித்த முகாம் நடைபெற உள்ளதால், செப்டம்பர்-23ஆம் தேதி முதல் 26 ஆம் தேதி வரை முதுமலை தெப்பக்காடு யானைகள் முகாம் மூடப்படுவதாகவும், சுற்றுலா பயணிகளுக்கு இந்த தினங்களில் அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாகவும் வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

நீலகிரி மாவட்ட திமுக பொறுப்பாளர் கே.எம்.ராஜு வெளியிட்ட செய்தி குறிப்பில்; நாளை ஓரணியில் தமிழ்நாடு நிகழ்ச்சிக்கான மாபெரும் பொதுக்கூட்டம் உதகை ஏடிசி ஜீப் நிறுத்தம் முன்பு மதியம் 2 மணிக்கு நடைபெற உள்ளது. திராவிட முன்னேற்றக் கழகத்தின் துணைப் பொதுச் செயலாளர் நீலகிரி பாராளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா சிறப்புரை வழங்க உள்ளதாக தெரிவித்துள்ளார். இதில் திமுக நிர்வாகிகள் கலந்து கொள்ள அழைப்பு விடுத்துள்ளார்.

ஊட்டி பிங்கர் போஸ்ட் அருகே உள்ள நீலகிரி மாவட்ட கூடுதல் ஆட்சியர் அலுவலக வளாகத்தில், உள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திர கிடங்கில், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளதை, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில், மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

தூய்மை மிஷின் 2.0 திட்டத்தின் கீழ் தூய்மை செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் நீலகிரி மாவட்ட கூடுதல் ஆட்சியர் அலுவலகத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர் லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., பல்வேறு அலுவலகங்களில் அந்தந்த துறை அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் மூலம் தூய்மை பணியில் மேற்கொள்ள வேண்டும், என அனைத்து துறை அதிகாரிகளுடன் ஆட்சியர் உறுதிமொழி ஏற்றுக்கொண்டார்.

நீலகிரி மாவட்டத்தில் மனித – விலங்கு மோதல் அதிகரித்து வரும் நிலையில், மசினகுடி பகுதியில் நடைப்பயிற்சியில் ஈடுபட்டிருந்த 71 வயது மதிக்கத்தக்க மேத்தா என்பவரை காட்டு யானை தாக்கியுள்ளது. இதில் படுகாயமடைந்த அவர், மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஊட்டி துணை மின் நிலையத்திற்குட்பட்ட பிங்கர்போஸ்ட், காந்தல், ஹில்பங்க், கோடப்பமந்து, இத்தலார், ஆடாச்சோலை, எப்பநாடு, மரகல், கோழிப்பண்ணை, தாவனை, உள்ளத்தி, சக்தி நகர், தேனாடு, கம்பை, எம்.பாலடா, கடநாடு ஆகிய பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது என மின்வாரியம் தெரிவித்துள்ளது.

ஊட்டி நொண்டிமேடு பகுதியில் இன்டர்லாக் கற்களால் ஆன சரிவான சாலையில் மழைநீர் தேங்கி இருப்பதால் வாகனங்கள் தொடர்ந்து விபத்துக்குள்ளாகி வருகின்றன. நேற்று முன்தினம் நிகழ்ந்த விபத்தில் காயமடைந்த ஒருவர் கோவை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், இன்று காலை ஒரு அரசு பேருந்து விபத்துக்குள்ளானது. இச்சம்பவத்தால், அப்பகுதி பொது மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகம் வரும் செப்.23 முதல் 26 வரை 4நாட்களுக்கு மூடப்படுவதாக வனத்துறை அறிவித்துள்ளது. பராமரிப்பு பணிகளுக்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த நாட்களில் தெப்பக்காடு யானைகள் முகாம் மற்றும் முதுமலைக்கு சுற்றுலா பயணிகள் செல்ல அனுமதி இல்லை. சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பிற்காகவும், பூங்காவின் மேம்பாட்டிற்காகவும் இந்த பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

கூடலுார் ஓவேலியில், 12 பேரை கொன்ற காட்டு யானையை டிரோன் கேமரா மூலம் காட்டு யானை இருப்பிடத்தை கண்டுபிடித்தனர். கூடலுார் வன அலுவலர் வெங்கடேஷ் பிரபு கூறுகையில், ”யானையை பிடிக்கும் பணியில், 140 பேர் ஈடுபட்டுள்ளனர். மாலை வரை, முதுமலை கால்நடை டாக்டர் ராஜேஷ்குமார் தலைமையில், மயக்க ஊசி செலுத்த முயன்றும் முடியவில்லை. இதனால், நாளை (இன்று) இப்பணி மீண்டும் தொடரும்,” என்றார்.

நீலகிரி மாவட்டம் முதுமலை மசனகுடி ஆச்சக்கரையை சேர்ந்தவர் மேத்தா. 71 வயது ஆன மேத்தா நேற்று மாலை சுமார் 5 மணி அளவில் சாலையில் நடந்து சென்ற போது காட்டு யானை தாக்கி பலத்த காயமடைந்துள்ளார். காயமடைந்த வரை உடனடியாக சிகிச்சைக்காக ஊட்டி அரசு மருத்துவமனைக்கு எடுத்து வந்தனர். மேல் சிகிச்சைக்காக ஊட்டியில் இருந்து கோவைக்கு எடுத்து செல்லும் வழியில் இன்று அவர் இறந்தார்.
Sorry, no posts matched your criteria.