India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கோத்தகிரியில் ரத்தக்காயங்களுடன் கிடந்த குரங்கை ஆம்புலன்சில் ஏற்றிச்சென்ற ஓட்டுனருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. நீலகிரி நகர் புறத்தில் ரத்த காயங்களுடன் கிடந்த குரங்கை மீட்ட ஆம்புலன்ஸ் ஓட்டுநர், சிகிச்சைக்காக ஆம்புலன்சில் கொண்டு சென்ற புகைப்படங்கள் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது வருகின்றன. உயிர்போகும் இறுதி நொடியில் குரங்கை காப்பாற்றியுள்ளார்.
நீலகிரி மாவட்டத்தில் பொதுமக்களின் பிரதிநிதிகள், தனியார் அமைப்புகள் மற்றும் பேருந்து உரிமையாளர்களிடமிருந்து மினி பேருந்துகள் குறித்த புதிய விரிவான திட்டம் 1924 கீழ் வழித்தட வரைபடங்களுடன் கூடிய விண்ணப்பங்கள், நிபந்தனைகளுக்கு உட்பட்டு வரவேற்கப்படுகிறது. இதற்காக ஊட்டி வட்டார போக்குவரத்து அலுவலரிடம் விண்ணப்பிக்கலாம். இதை நீலகிரி மாவட்ட ஆட்சியர் லட்சுமி பாவ்யா தண்ணீரு அறிவித்துள்ளார்.
உதகை நகரில் வீடுகளில் குப்பைகளை தரம் பிரித்து வழங்க பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என நகராட்சி அலுவலர்களுக்கு கலெக்டர் அறிவுறுத்தி உள்ளார். சேகரிக்கப்படும் குப்பைகளை சுற்றுச்சூழல் பாதிக்கப்படாத வகையில் உரக்கிடங்கில் உரமாக மாற்றவும், மக்காத நெகிழி குப்பைகளை சிமெண்ட் ஆலைகளுக்கு உடனடியாக அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கவும் நகராட்சி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு உள்ளார்.
தமிழ்நாட்டில் பிளஸ் டூ பொதுத்தேர்வுகள் மார்ச் 3ஆம் தேதி முதல் மார்ச் 25ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இதையொட்டி பொது தேர்வு எழுத உள்ள மாணவர்களுக்கான செயல்முறை தேர்வு பிப்ரவரி 7 முதல் 14 தேதிக்குள் நடத்தி முடிக்க பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தி. அதன்படி நீலகிரி மாவட்டத்தில் உள்ள 80 பள்ளிகளில் பிளஸ் டூ பயின்று வரும் 8,075 மாணவ மாணவிகள் செயல்முறை தேர்வில் கலந்து கொண்டனர்.
கூடலூர் பகுதியை சேர்ந்த அருள், ராஜேஷ்குமார் என்று இரண்டு இளைஞர்கள் கர்நாடக மாநிலத்திலிருந்து டேங்கர் லாரியில் பால் ஏற்றிக்கொண்டு கேரள மாநிலத்துக்கு சென்று கொண்டிருந்தனர். அப்போது ஓசூர் பகுதியில் டேங்கர் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் சம்பவ இடத்திலேயே இருவரும் உயிரிழந்தனர். இந்த விபத்து குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பந்தலூர் இண்கோ சர்வ் பகுதியை சேர்ந்த கணேசன் (65), காந்திமதி (60) ஆகியோர் நேற்று காலை வனத்தை ஒட்டி தோட்டத்தில் விறகு சேகரித்தனர். அப்போது புதரில் இருந்து வெளி வந்த யானை இவர்களை தாக்கி உள்ளது. தகவல் அறிந்த பந்தலூர் வருவாய் ஆய்வாளர் வாசுதேவன், வனச்சரகர் சஞ்சீவி ஆகியோர் காயமடைந்த அவர்கள் 2 பேரையும் மீட்டு ஊட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
நீலகிரி: கோத்தகிரி அருகே உள்ள கூக்கல்தொரை கிராம வனப்பகுதியில் ஒரு சிலர் மானை வேட்டையாடியதாக, கட்டப்பட்டு வனச்சரக வனத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் வனச்சரகர் செல்வகுமார் தலைமையில், வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், அந்த பகுதியை சேர்ந்த 3 பேர், சுருக்கு கம்பி வைத்து மானை வேட்டையாடியது கண்டுபிடிக்கப்பட்டு கைது செய்யப்பட்டனர்.
நீலகிரி மாவட்ட ஆட்சியர் கூடுதல் அலுவலகத்தில், “கொத்தடிமைத் தொழிலாளர் முறை ஒழிப்பு” உறுதி மொழி மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தண்ணீரு தலைமையில், அனைத்துத்துறை அரசு அலுவலர்களால் இன்று ஏற்றுக்கொள்ளப்பட்டது. உடன் உதவி ஆணையர் (கலால்) தனப்பிரியா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) சதீஷ்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்
நீலகிரி: அருவங்காட்டில் வெடிமருந்து தொழிற்சாலையில் 40 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. 10-ம் வகுப்பு படித்திருக்க வேண்டும், NAC / NTC in Machinist Trade முடித்திருக்க வேண்டும். https://munitionsindia.in/-ல் உள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து, ஆவணங்களுடன் The Chief General Manager, Cordite Factory Aruvankadu, The Nilgiris District. Tamilnadu 643 202 முகவரிக்கு அனுப்ப வேண்டும். கடைசி தேதி: 21.02.2025.
நீலகிரி மாவட்டத்தில் பனிப்பொழிவு அதிகரித்துள்ளதால் நீலகிரி மாவட்டத்தில் பெரும்பாலான பகுதிகளில் புல்வெளிகள் காய்ந்து கால் நடைகளுக்கு தீவனம் கிடைக்காமல் போனதால் பால் உற்பத்தி குறைந்தது. இதனால் ஊட்டியில் பால் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனை சமாளிக்க நாள்தோறும் திருப்பூரில் இருந்து 17,000 லிட்டர் பால் வாங்கி பதப்படுத்தப்படுகிறது பின் 16 ஆயிரம் லிட்டர் பால் பாக்கெட் தயார்செய்து விற்பனை செய்யப்படுகிறது.
Sorry, no posts matched your criteria.