Thenilgiris

News February 11, 2025

மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை

image

நேற்று GDPயில் கலெக்டர் பேசுகையில், ‘‘ஒவ்வொரு வாரமும் திங்களன்று நடைபெறும் மக்கள் குறைதீர் கூட்டத்தில் பெறப்பட்ட மனுக்கள் மீது, சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் தனி கவனம் செலுத்திட வேண்டும்.அந்த மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொள்வதோடு, மனுதாரருக்கு சரியான விளக்கத்தினை அளிக்க வேண்டும். மேலும், அரசின் நலத்திட்ட உதவிகள் பயனாளிகளுக்கு உரிய நேரத்தில் வழங்கிட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்” என்றார்.

News February 11, 2025

Ex. கவுன்சிலர் நாயை கடித்து குதறிய சிறுத்தை

image

பந்தலூர் அருகே அத்திகுன்னா தனியார் எஸ்டேட் பகுதியில் உள்ள கேகே நகரில் சிறுத்தை நடமாடியதைத் தொழிலாளர்கள் பார்த்து வனத்துறையை கூண்டு வைத்து அதை பிடிக்க வலியுறுத்தி வந்தனர். இந்த நிலையில் நேற்று இரவு வந்த சிறுத்தை முன்னாள் கவுன்சிலர் மூர்த்தி என்பவரின் நாயை கடித்து குதறி, விட்டு சென்று உள்ளது.

News February 10, 2025

நீலகிரிக்கு வந்த பிரபல நடிகை 

image

நீலகிரி மாவட்டம் பந்தலுாரில் செயல்பட்டு வந்த ஒரு நகைக்கடை புதுப்பிக்கப்பட்டு நேற்று திறப்பு விழா நடந்தது. இதில் பிரபல நடிகை ரம்யா நம்பீசன் கலந்துகொண்டு கடையை திறந்து வைத்து, முதல் விற்பனையை துவக்கி வைத்தார். மேலும், 10 அதிர்ஷ்டசாலிகளுக்கு தங்க காயின் வழங்கப்பட்டது. 

News February 10, 2025

நீலகிரி மாவட்ட ஆட்சியர் உத்தரவு!

image

நாளை (பிப்.11) வள்ளலார் நினைவு தினத்தை முன்னிட்டு, டாஸ்மாக் உள்ளிட்ட மது கடைகளுக்கு விடுமுறை விடப்படுவதாக நீலகிரி கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.மேலும், மதுக்கடைகள், பாா்கள் ஏதேனும் திறந்திருந்தால், கூடுதல் காவல் கண்காணிப்பாளா், மதுவிலக்கு மற்றும் அமலாக்கம், உதகை 0423-2223802, உதவி ஆணையா் 0423-2443693, மாவட்ட டாஸ்மாக் மேலாளா் எடப்பள்ளி, குன்னூா் 0423-2234211 ஆகிய எண்களில் தொடா்பு கொண்டு தெரிவிக்கலாம்.

News February 10, 2025

நீலகிரி பத்திரபதிவு அலுவலர்களுக்கு விடுமுறை இல்லை

image

தைப்பூசம் தினத்தன்று தமிழ்நாட்டிலுள்ள அனைத்து பத்திரப் பதிவு அலுவலகங்களும் வழக்கம் போல் செயல்படும் என தமிழ்நாடு அரசு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி நீலகிரியில் உள்ள ஊட்டி கோத்தகிரி குன்னூர் கூடலூர் ஆகிய இடங்களில் உள்ள பத்திர பதிவு அலுவலகங்கள் வழக்கம் போல் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை செயல்படும். விடுமுறை நாள் ஆவண பதிவிற்கான கட்டணம் சேர்த்து வசூலிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News February 10, 2025

ஊட்டி ஏரியில் ஓட்டல் தொழிலாளி பிணம்.

image

ஊட்டி படகு இல்லாத ஏரியில் பிணம் உள்ளதாக ஊட்டி ஜி1 காவல் நிலையத்திற்கு தகவல் கிடைத்ததை அடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பிணத்தை கைப்பற்றி ஊட்டி மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீஸ் விசாரணையில் இறந்தவர் ஊட்டி காந்தல் பகுதியை சேர்ந்த விஜயகுமார் (60) ஓட்டல் தொழிலாளி என்பது தெரிந்தது. போலீசார் விசாரித்தனர்.

News February 10, 2025

நீலகிரி: இன்றைய இரவு ரோந்து போலீசார் விவரம் 

image

நீலகிரி மாவட்டத்தில் இன்று (09.02.2025) இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் வெளியிடப்பட்டுள்ளது. உதகை நகரம் ஊரக உட்கோட்டம், குன்னூர் உட்கோட்டம், கூடலூர் மற்றும் தேவாலா உட்கோட்டம் ஆகிய காவல் நிலைய அதிகாரிகளின் தொடர்பு எண்கள் நீலகிரி மாவட்ட காவல்துறையால் வெளியிடப்பட்டுள்ளது.

News February 9, 2025

அரசு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து

image

நீலகிரி மாவட்டம் குன்னூர் – மேட்டுப்பாளையம் சாலையில் இன்று உதகை பகுதியிலிருந்து, திருப்பூர் நோக்கி சென்று கொண்டிருந்த பேருந்தும், மதுரையில் இருந்து உதகைக்கு வந்து கொண்டிருந்த பேருந்தும் நேருக்கு நேர் மோதி சிறு விபத்து  ஏற்பட்டது. இதனால் 1 மணி நேரத்துக்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதில், பேருந்தில் பயணித்த யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை.

News February 9, 2025

நீலகிரி ஆட்சியர் உத்தரவு!

image

வள்ளலார் நினைவு தினத்தை முன்னிட்டு, நீலகிரி மாவட்டத்தில் உள்ள மதுபான கடைகளுக்கு, வரும் 11ம் தேதி விடுமுறை அளிக்கப்படுவதாக, நீலகிரி ஆட்சியர் லட்சுமி பவ்யா தண்ணீரு அறிவித்துள்ளார். அதன்படி மதுபான சில்லறை விற்பனை கடைகள், கிளப், பார்கள் ஹோட்டல் பார்கள் அனைத்தும் மூட உத்தரவிடப்பட்டுள்ளது. எவரேனும் மதுபானங்களை விற்பது கண்டறியப்பட்டால் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளார்.

News February 9, 2025

தேசிய தொழில் பழகுநர் சேர்க்கை முகாம் 

image

பிரதம மந்திரியின் தேசிய தொழில் பழகுநர் திட்டத்தின் கீழ் குன்னூர் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில், தேசிய தொழில் பழகுநர் சேர்க்கை முகாம் நாளை நடக்கிறது. காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடக்கும், இம்முகாமில் மத்திய, மாநில அரசு நிறுவனங்கள், பொதுத்துறை நிறுவனங்களும் தனியார்துறை நிறுவனங்கள் பங்கேற்று, 200க்கும் மேற்பட்ட காலியிடங்களை நிரப்பவுள்ளனர். தேர்வு பெற்றால் ஊக்க தொகையுடன் பயிற்சி வழங்கப்படும்.

error: Content is protected !!