Thenilgiris

News February 18, 2025

பெட்ஃபோர்டு பகுதியில் உள்ள கடையில் தீ விபத்து

image

குன்னூர் பெட்ஃபோர்டு பகுதியில் உள்ள தேநீர் கடையில் இன்று திடீரென சிலிண்டர் வெடித்து தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் ஒருவர் தீக்காயத்துடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும், குன்னூர் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

News February 18, 2025

8வது பாஸ் சுகாதாரத் துறையில் வேலை மிஸ் பண்ணிடாதீங்க!

image

காரப்பேட்டையில் உள்ள அரசு புற்றுநோய் மருத்துவமனையில் பல்வேறு பிரிவுகளில் உள்ள 276 காலிப்பணியிடங்களை மாவட்ட நலவாழ்வு சங்கம் மூலம் ஒப்பந்த அடிப்படையில் நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு 8th, Any Degree முடித்தவர்கள் வரை விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் விவரங்களுக்கு இந்த லிங்கை க்ளிக் செய்யவும். இதை மற்றவர்களுக்கும் ஷேர் செய்யவும்.

News February 18, 2025

ஊட்டியில் மக்கள் குறை தீர்ப்பு நாளில் குவிந்த 210 மனுக்கள்

image

நீலகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கட்கிழமை தோறும் நடக்கும் மக்கள் குறைதீர் கூட்டத்தில் நேற்று பொதுமக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 210 மனுக்கள் பெறப்பட்டன. வீட்டுமனை பட்டா, விதவை, கல்வி உதவித்தொகை, வங்கி கடன் உள்ளிட்ட மனுக்கள் பெறப்பட்டன. பெறப்பட்ட மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.

News February 18, 2025

சோலுார் பகுதியில் டாஸ்மாக் மதுக்கடை திறக்க எதிர்ப்பு

image

ஊட்டி அருகே சோலுார் சுற்றுவட்டாரத்தில் ஏராளமான கிராமங்கள் உள்ளன. இப் பகுதியில் டாஸ்மாக் கடை செயல் பட்டபோது அப்பகுதி மக்கள் பல இடையூறுகளுக்கு ஆளாகினர். இதை தொடர்ந்து மக்கள் எதிர்ப்பால் கடை மூடப்பட்டது. இந்தநிலையில் மீண்டும் அங்கு டாஸ்மாக் திறக்க அதிகாரிகள் ஆய்வு செய்தனர். இதை எதிர்த்து நேற்று கலெக்டரிடம் மனு கொடுத்தனர். மீறி மது கடை திறந்தால் போராட்டம் நடத்தப்படும் என தெரிவித்தனர்.

News February 18, 2025

நீலகிரி: இன்றைய இரவு ரோந்து போலீசார் விவரம் 

image

நீலகிரி மாவட்டத்தில் இன்று (17.02.2025) இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் வெளியிடப்பட்டுள்ளது. உதகை நகரம் ஊரக உட்கோட்டம், குன்னூர் உட்கோட்டம், கூடலூர் மற்றும் தேவாலா உட்கோட்டம் ஆகிய காவல் நிலைய அதிகாரிகளின் தொடர்பு எண்கள் நீலகிரி மாவட்ட காவல்துறையால் வெளியிடப்பட்டுள்ளது.

News February 17, 2025

எல்லை சாலைகள் அமைப்பில் 411 காலிப்பணியிடங்கள்

image

மத்திய அரசின் எல்லை சாலைகள் அமைப்பில் (BRO) உள்ள காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. சமையல்காரர், கொத்தனார், கொல்லன், மெஸ் வெய்டர் உள்ளிட்ட 411 பணியிடங்கள் உள்ளான. ரூ.5,200 முதல் ரூ.20,200 வரை சம்பளம் வழங்கப்படும். 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற ஆர்வமும் தகுதியும் உள்ள ஆண்கள் இந்த காலிப்பணியிடங்களுக்கு இந்த லிங்கை க்ளிக் செய்து விண்ணப்பிக்கலாம். 18-25 வயதுடையவர்களாக இருக்க வேண்டும். ஷேர் செய்யுங்கள்

News February 17, 2025

ஓய்வூதியர் குறைதீர் நாள் கூட்டம்: கலெக்டர் அறிவிப்பு

image

தமிழ்நாடு அரசின் பல்வேறு துறைகளில் ஓய்வு பெற்ற ஓய்வூதியதாரர்களுக்கு, அடுத்த மார்ச் மாதம் 6ஆம் தேதி குறைத்தீர் நாள் கூட்டம் ஆட்சியர் தலைமையில் நடைபெற உள்ளது. இந்நிலையில் ஓய்வூதியதாரர்கள் தங்களது குறைகளை இரட்டை பிரதிகளில் தயார் செய்து இம்மாதம் 18ஆம் தேதிக்குள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு சமர்ப்பிக்க வேண்டும்படி நீலகிரி மாவட்ட ஆட்சியர் கேட்டுக் கொண்டுள்ளார்.

News February 17, 2025

நீலகிரி: இன்றைய இரவு ரோந்து போலீசார் விவரம் 

image

நீலகிரி மாவட்டத்தில் இன்று (16.02.2025) இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் வெளியிடப்பட்டுள்ளது. உதகை நகரம் ஊரக உட்கோட்டம், குன்னூர் உட்கோட்டம், கூடலூர் மற்றும் தேவாலா உட்கோட்டம் ஆகிய காவல் நிலைய அதிகாரிகளின் தொடர்பு எண்கள் நீலகிரி மாவட்ட காவல்துறையால் வெளியிடப்பட்டுள்ளது.

News February 17, 2025

நீலகிரி எம்.பியிடம் வாழ்த்து பெற்ற திமுக பொறுப்பாளர் 

image

சென்னையில் திமுக துணை பொதுச்செயலாளர், நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.இராசா அவர்களை நீலகிரி மாவட்ட திமுக பொறுப்பாளராக பொறுப்பேற்றுள்ள கே.எம்.ராஜூ சந்தித்து வாழ்த்து பெற்றார். திமுக தேர்தல் பணி செயலாளர், அரசு தலைமை கொறடா கா.ராமச்சந்திரன், மாவட்ட அவை தலைவர் போஜன் மற்றும் கழக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

News February 16, 2025

நீலகிரி மாவட்ட ஆட்சியர் அதிரடி ஆய்வு!

image

நீலகிரி மாவட்டம் கல்லார் தூரிப்பாலம் சோதனை சாவடி வழியாக, நீலகிரி மாவட்டத்திற்குள் நுழையும் அனைத்து வாகனங்களும் இ-பாஸ் (E-Pass) பெற்று வருகிறார்களா எனவும், தடைசெய்யப்பட்டுள்ள நெகிழி பொருட்கள் கொண்டு வரப்படுகின்றன எனவும், மாவட்ட ஆட்சித்தலைவர் லட்சுமி பவ்யா தண்ணீரு இன்று நேரில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

error: Content is protected !!