Thenilgiris

News February 20, 2025

கந்து வட்டி கேட்டு தொல்லை கொடுத்த பெண் கைது

image

நீலகிரி: கோத்தகிரி அருகே குமரன் காலனி கிராமத்தைச் சேர்ந்தவர் சுமதி (39). இவர் தனது கணவரின் மருத்துவ செலவு மற்றும் குழந்தைகளின் படிப்பு செலவிற்காக அதே பகுதியைச் சேர்ந்த சந்திரவதனி என்பவரிடம் ரூ.3 லட்சம் கடன் பெற்றுள்ளார். ரூ.2.30 லட்சம் கட்டியும், மேலும் 1.40 லட்சம் வட்டியுடன் தர வேண்டும் என தொல்லை செய்ததாக அளித்த புகாரின் பேரில், கோத்தகிரி போலீசார் சந்திரவதனியை இன்று கைது செய்தனர்.

News February 20, 2025

நீலகிரி எம்பி ஆ.இராசா தலைமையில் கூட்டம் 

image

தகை தமிழகம் அரசு விருந்தினர் மாளிகையில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையில் சார்பில், மாவட்ட அளவிலான வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம், நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.இராசா தலைமையில் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு சுகாதார திட்ட இயக்குநர் மற்றும் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை இணைச் செயலாளர் / மாவட்ட கண்காணிப்பு அலுவலர் தனசு.வினீத் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

News February 20, 2025

போஸ்ட் ஆபிசில் வேலை: உடனே அப்ளை பண்ணுங்க!

image

அஞ்சல் துறையில் இருக்கும் கிளை போஸ்ட் மாஸ்டர் மற்றும் உதவி கிளை போஸ்ட் மாஸ்டர் பதவிகளுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு தேர்வு கிடையாது. 10-ம் வகுப்பில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையிலேயே நியமனம் வழங்கப்படும். நீலகிரி மாவட்டத்தில் 43 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. ரூ.10,000 – ரூ.30,000 வரை சம்பளம் வழங்கப்படும். கடைசி தேதி மார்ச் (3.3.2025). விண்ணப்பிக்க <>இங்கே கிளிக் <<>>பண்ணுங்க.

News February 20, 2025

காலை நேரத்தில் கார் கவிழ்ந்து விபத்து

image

கூடலூர் பந்தலூர் சாலை ஆமைக்குளம் பகுதியில் இன்றைய தினம் காலை கார் ஒன்று ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து தலை குப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. அதிர்ஷ்டவசமாக வாகனத்தில் பயணித்தவர்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாமல் சிறு காயங்கள் மட்டுமே ஏற்பட்டுள்ளது. இந்த விபத்து குறித்து தேவால காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News February 20, 2025

ஊட்டி திடீரென ஏற்பட்ட காட்டுத்தீ

image

ஊட்டி மார்லிமந்து அணையை ஒட்டி உள்ள, நகராட்சிக்கு சொந்தமான வனப்பகுதியில் நேற்று காலை திடீரென காட்டுத்தீ ஏற்பட்டது. ஊட்டி வனச்சரகத்தை சேர்ந்த வன ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு சென்று காட்டுத்தீயை அணைக்க முயற்சி செய்தனர். காற்று வீசியதால் தீ பரவி, 5 ஏக்கரில் இருந்த முட்செடிகள், புற்கள், மரங்கள் எரிந்து சாம்பலாயின. வனத்துறையினர் இரண்டு மணி நேரம் போராடி தீயை கட்டுப்படுத்தினர்.

News February 20, 2025

நீலகிரி: இன்றைய இரவு ரோந்து போலீசார் விவரம் 

image

நீலகிரி மாவட்டத்தில் இன்று (19.02.2025) இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் வெளியிடப்பட்டுள்ளது. உதகை நகரம் ஊரக உட்கோட்டம், குன்னூர் உட்கோட்டம், கூடலூர் மற்றும் தேவாலா உட்கோட்டம் ஆகிய காவல் நிலைய அதிகாரிகளின் தொடர்பு எண்கள் நீலகிரி மாவட்ட காவல்துறையால் வெளியிடப்பட்டுள்ளது.

News February 19, 2025

கலெக்டர் புகார்: டிஎஸ்பி துரித நடவடிக்கை

image

ஊட்டி கலெக்டர் அலுவலக குறைதீர் கூட்டத்தில், கோத்தகிரி ஒரசோலையை சேர்ந்த மனோ என்பவர், கோத்தகிரி பஞ்சாயத்து அலுவலகத்தில் உதவி இயக்குநராக இருப்பதாக கூறி, தனது மகன் உட்பட 10 பேரிடம், வேலை வாங்கி தருவதாக ரூ.5.1 லட்சம் பெற்று, ஏமாற்றியதாக சதாசிவம் என்பவர் புகார் அளித்தார். இதையடுத்து, ஆட்சியரின் புகாரின் பேரில் ,டிஎஸ்பி சக்திவேல் அன்று மாலைக்குள் மோசடியாளரை கைது செய்தது பலரது பாராட்டையும் பெற்றது.

News February 19, 2025

நீலகிரி: மலையேற்ற சுற்றுலாவுக்கு வனத்துறை தடை

image

மலைகள், வனங்களில், அனுமதிக்கப்பட்ட இடங்களில் மலையேற்றம் செய்யும் திட்டத்தை தமிழ்நாடு அரசு கடந்த ஆண்டு தொடங்கியது.நீலகிரி, கோவை, திருப்பூர், சேலம், தேனி, மதுரை, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் 40 இடங்களில் திட்டம் செயல்பாட்டில் உள்ளது. வெயிலின் தாக்கம் அதிகரிக்கும்போது காட்டுத்தீ போன்ற அபாயங்கள் ஏற்படும் என தமிழ்நாட்டில் மலையேற்ற சுற்றுலாவுக்கு ஏப்.15 வரை வனத்துறை தடை விதித்துள்ளது.

News February 19, 2025

பிளாஸ்டிக் விற்றால் உடனே சீல் – கலெக்டர்

image

நீலகிரி மாவட்டத்தில் பிளாஸ்டிக் பொருட்கள் சுற்றுலா பயணிகள் மூலம் அதிக அளவில் வருவதால் சோதனை சாவடிகளில் தரமான சோதனைக்கு பிறகே வாகனங்கள் அனுமதிக்க படுகின்றன. மேலும் கடைகளில் தடை செய்ய பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பதுக்கி வைத்து விற்பனை செய்தால், அந்த கடைக்கு உடனடியாக சீல் வைக்க படும் என்று நீலகிரி ஆட்சியர் அறிவித்தார்.

News February 18, 2025

பெட்ஃபோர்டு பகுதியில் உள்ள கடையில் தீ விபத்து

image

குன்னூர் பெட்ஃபோர்டு பகுதியில் உள்ள தேநீர் கடையில் இன்று திடீரென சிலிண்டர் வெடித்து தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் ஒருவர் தீக்காயத்துடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும், குன்னூர் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

error: Content is protected !!