India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
பொதுத்துறையை சேர்ந்த யூனியன் வங்கியில் உள்ள காலியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. ‘அப்ரென்டிஸ்’ பிரிவில் தமிழகம் முழுவதும் 122 காலிப் பணியிடங்கள் உள்ளன. இதற்கு விண்ணப்பிக்க எதாவது ஒரு பட்டப்படிப்பு படித்திருந்தால் போதும். 20 -28 வயது உடையவராக இருக்க வேண்டும். மாதம் ரூ.15,000 வழங்கப்படும். விருப்பம் உள்ளவர்கள் வரும் மார்ச் 5ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். ஷேர் பண்ணுங்க
கூடலுார் அள்ளூர் வயல் பகுதியில் மூங்கில் காட்டில் ஏற்பட்ட வனத்தீயை தீயணைப்பு மற்றும் வனத்துறையினர் போராடி கட்டுப்படுத்தினர்.மூங்கில்களில் எரிந்துடன், மற்ற பகுதிகளில் தீ பரவியது. வனத்துறை மற்றும் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். வனவர் வீரமணி, தீயணைப்பு நிலைய முன்னணி வீரர் தாமஸ் மற்றும் பிற வீரர்கள், வன ஊழியர்கள் போராடி இரவில் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
ஊட்டியில் சந்தேகத்திற்கு இடமான வகையில் சுற்றித்திரிந்தவர்களை விசாரித்த போது, கேரளாவை சேர்ந்த அப்துல்வகாப்,34, ஊட்டி வண்டி சோலையை சேர்ந்த சுஜன்,35, காட்டேரி உலிக்கல் பகுதியை சேர்ந்த மெல்சர்பால்,35, ஆகியோர் என்பது தெரிய வந்தது. ஊட்டி ஜி-1 போலீஸ் எஸ்.ஐ.,க்கள் ஹரிஹரன், நிஷாந்தி தலைமையிலான போலீசார் மூவரையும் கைது செய்து, அவர்களிடம் இருந்த கஞ்சாவை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.
குன்னூர் அருகே உள்ள சிங்கார பகுதியில், தம்பதிகள் வசித்து வருகின்றனர். இவர்கள் அருகே உள்ள தங்கும் விடுதியில் பணி செய்து வருகின்றனர். இந்நிலையில் அவர்களது குழந்தை மிருதுளாசினி, விடுதி வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த மீன் தொட்டி அருகில் விளையாடிக் கொண்டிருந்தார். மீனுக்கு உணவளிக்க சென்றபோது, தொட்டிக்குள் தவறி விழுந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். காவல்துறையினர் விசாரணை நடத்துகின்றனர்.
கூடலுாரில் வணிகர் சங்க பொதுக்குழு கூட்டம் நேற்று நடந்தது. வணிகர் சங்க பேரமைப்பின் மாநில தலைவர் விக்கிரமராஜா பேசுகையில், ”நீலகிரியில் தொடரும் ‘பிளாஸ்டிக்’ பிரச்னையால் வியாபாரிகள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். அதிகாரிகள் கடைகளுக்கு அபராதம் விதித்து, ‘சீல்’ வைக்கும் நடைமுறையை கைவிட வேண்டும். நீலகிரி வரும் ‘பிளாஸ்டிக்’ பொருட்களை உற்பத்தி செய்யும் இடத்தில் தடுக்க வேண்டும்” என்றார்.
நீலகிரி மாவட்டத்தில் இன்று (25.02.2025) இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் உதகை நகரம் ஊரக உட்கோட்டம், குன்னூர் உட்கோட்டம், கூடலூர் மற்றும் தேவாலா உட்கோட்டம் ஆகிய காவல் நிலைய அதிகாரிகளின் தொடர்பு எண்கள் நீலகிரி மாவட்ட காவல்துறையால் வெளியிடப்பட்டுள்ளது.
குன்னுார் அருகே சோலடா மட்டம் சாலையில் மரம் விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவலின் பேரில், குன்னுார் தீயணைப்பு நிலைய அலுவலர் குமார் மேற்பார்வையில், முன்னணி தீயணைப்பாளர் முரளி உட்பட தீயணைப்பு வீரர்கள், வேட்டை தடுப்பு காவலர்கள் மற்றும் மக்கள் இணைந்து மரத்தை வெட்டி அகற்றினர்.இதனால், கிராமத்திற்கு இரண்டு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி பகுதியை சேர்ந்த தம்பதியரின் குழந்தைக்கு உதகை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தடுப்பூசி செலுத்தப்பட்டதில் குழந்தை இறந்ததாக எழுந்த புகாரை அடுத்து தடுப்பூசியின் ஒவ்வாமை காரணம் என மருத்துவ அறிக்கை காண்பித்து குழந்தையின் பெற்றோர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைத் தீர்நாள் கூட்டத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஊட்டியில் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற மக்கள் குறைதீர் நாள் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து வீட்டுமனை பட்டா ,முதியோர் விதவை, கல்வி உதவித்தொகை, வங்கி கடன், குடிசை மாற்று வாரிய வீடு, சாலை வசதி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை அடங்கிய 207 மனுக்கள் பெறப்பட்டன. பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட மனுக்கள் மீது சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள ஆட்சியர் அறிவுறுத்தினார்.
ஊட்டி நகராட்சியில் கடந்த 5 வருட காலமாக நிலுவை தொகை செலுத்தாமல் வரி பாக்கி வைத்து உள்ள கடைகளுக்கு ஊட்டி நகராட்சி நிர்வாகம் சார்பில் பலமுறை நோட்டீசை அனுப்பி உள்ளனர். இதில் வரி கட்டாத கடைகளை நேற்று நகராட்சி வருவாய் அலுவலர் அர்ச்சனா தலைமையில் நகராட்சி ஊழியர்கள் கமர்சியல் சாலை, சேரிங்கிராஸ் பகுதிகளில் வரி செலுத்தாத 6 கடைகளுக்கு சீல் வைத்தனர்.
Sorry, no posts matched your criteria.