Thenilgiris

News October 1, 2025

நீலகிரி: கேஸ் மானியம் ரூ.300 பெறுவது எப்படி?

image

கேஸ் மானியம் ₹300 வங்கிக் கணக்கில் நேரடியாக வர, எல்பிஜி இணைப்பை ஆதார் அட்டையுடன் இணைக்க வேண்டும். உங்கள் கேஸ் வழங்குநரின் (Indane, HP, Bharat) இணையதளத்திற்குச் சென்று, ‘Link Aadhaar’ விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும். நுகர்வோர் எண், மொபைல் எண், ஆதார் ஆகிய விவரங்களை உள்ளிட்டு, OTP மூலம் இணைப்பை உறுதி செய்யலாம். இதன் மூலம் வீட்டில் இருந்தபடியே மானியத்தைப் பெறலாம். இதை மற்றவர்களுக்கு SHARE பண்ணுங்க.

News October 1, 2025

நீலகிரி: யானை தாக்கி தொழிலாளி பலி: விடியும் வரை சமரச பேச்சு!

image

நீலகிரி மாவட்டம் பந்தலூர் ராக் வுட் பகுதியில் நேற்று யானை தாக்கி தொழிலாளி ராஜேஷ் பலியானார். இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் அப்பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டனர். விடியும் வரை காவல்துறை அதிகாரிகள் பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அதன் பின்னர், இறந்தவரின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டது. இச்சம்பவத்தால், கூடலூர் பகுதியில் தொடர்ந்து பரபரப்பு நிலவி வருகிறது.

News October 1, 2025

நீலகிரி: இனி லைன்மேனை தேடி அலைய வேண்டாம்!

image

நீலகிரி மக்களே மழை காலங்களில் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் மின்சார சேவை பாதிக்கப்படும் போது, பொதுமக்கள் லைன்மேனைத் தேடி அலைய வேண்டாம். இனிமேல் பொதுமக்கள் TNEB Customer Care எண்ணான 94987 94987-ஐ தொடர்புகொண்டு, தங்கள் மின் இணைப்பு எண் (Service Number) மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால், அடுத்த 5 நிமிடங்களில் லைன் மேன் வருவார். இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News October 1, 2025

நீலகிரி: குடிநீர், சொத்து வரி ஒரே கிளிக்கில் செலுத்துங்கள்!

image

நீலகிரி மக்களே! 2025-26 அரையாண்டு செப். 30ல் முடிவடைவதால், மாநகராட்சி, நகராட்சி, ஊராட்சிக்குச் செலுத்த வேண்டிய தொழில் வரி, காலியிட வரி, குடிநீர் கட்டணம், பாதாள சாக்கடை பராமரிப்புத் தொகை உள்ளிட்டவற்றை உடனடியாகச் செலுத்த வேண்டும். வரியை எளிதாகச் உங்கள் போனிலே செலுத்த முடியும். <>இங்கு கிளிக்<<>> செய்து ஆன்லைனில் செலுத்துங்கள். இந்த தகவலை மற்றவர்களுக்கும் SHARE செய்து தெரியப்படுத்தவும்.

News October 1, 2025

பழங்குடியின கிராமத்தில் என்எஸ்எஸ் முகாம்!

image

பந்தலூர் அருகே போத்துக்கொல்லி பழங்குடியின கிராமத்தை ஒட்டி, பிஆர்எப். பழங்குடியின கிராமத்தில் ஊட்டியில் செயல்படும் தனியார் பள்ளி மாணவர்கள், கிராமத்தில் முகாமிட்டு நலப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். உடற்கல்வி ஆசிரியர் குல்தீப் சிங், ஆய்வாளர் சகாதேவன் மற்றும் திவ்யங்கா சிக்காலர் தலைமையிலான மாணவர்கள், தங்கள் சொந்த செலவில், சீரமைப்பு பணிகளில் ஈடுபட்டனர். இவர்களுக்கு மக்கள் பாராட்டு தெரிவித்தனர்.

News October 1, 2025

நிலா கோட்டை யானை தாக்கி ஒருவர் மரணம்

image

பந்தலூர் தாலுகா நிலக்கோட்டை ஊராட்சிக்கு உட்பட்ட ராக்வுட் தேயிலை தோட்ட பகுதியில் பணிபுரிந்து வரும் ராஜேஷ் என்பவர் இன்று இரவு எட்டு மணி அளவில் யானை தாக்கியதில் சம்பவ இடத்திலேயே அவர் மரணமடைந்தார், இதனால் இப்பகுதி மக்களை மிகவும் சோகமடைய செய்துள்ளது, மேலும் இப்பகுதி மக்கள் இறந்தவரின் உடலை எடுக்க விடாமல் வனத்துறையுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருகின்றனர்

News October 1, 2025

நீலகிரி: மக்களுக்கு முக்கிய அறிவிப்பு!

image

மே.பாளையத்தில் இருந்து குன்னூர் வழியாக உதகைக்கு வரும் சுற்றுலா வாகனங்கள், திரும்பிச் செல்ல கோத்தகிரி வழியாக மே.பாளையம் செல்ல வேண்டும். இது ஒருவழிப்பாதையாகும். உள்ளூர் வாகனங்கள் மற்றும் அரசுப் பேருந்துகளுக்கு இது பொருந்தாது. குன்னூர் வழியாக உதகை வரும் சுற்றுலா வாகனங்கள் ஆவின் வளாகத்தில் நிறுத்தப்பட வேண்டும். இந்தபோக்குவரத்து மாற்றம் அக்டோபர் 1முதல் 5வரை அமலில் இருக்கும் என போலீஸ் அறிவித்துள்ளது.

News September 30, 2025

ஊட்டி தாவரவியல் பூங்காவில் கவரும் மலரலங்காரம்

image

நீலகிரி மாவட்டத்தில் தற்பொழுது இரண்டாம் சீசன் துவங்கியுள்ளது. காலாண்டு விடுமுறையையும் ஒட்டி, வெளி மாநில மற்றும் வெளி மாவட்டச் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது. இந்நிலையில், இரண்டாம் சீசனுக்காக ஊட்டி தாவரவியல் பூங்காவில் சிறப்பாக அமைக்கப்பட்டுள்ள மலர் அலங்காரங்கள், இங்கு வந்துள்ள சுற்றுலாப் பயணிகளை வெகுவாகக் கவர்ந்து வருகின்றன. சுற்றுலா பயணிகள் புகைப்படம் எடுத்துச் சென்றனர்.

News September 30, 2025

நீலகிரி: போலியான லோன் ஆப் எச்சரிக்கை!

image

நீலகிரி மக்களே பாதுகாப்பற்ற Loan App-கள் மூலம் கடன் பெறாதீர்கள். இவை உங்கள் தனிப்பட்ட தகவல்களை திருடி, மிரட்டி பணம் பறிக்கும் அபாயம் உள்ளது. வங்கிகள் மட்டுமே நம்பகமான வழி. போலியான செயலிகளால் ஏமாறாமல், உங்கள் குடும்பத்தையும் பாதுகாப்பாக வைத்துக் கொள்ளுங்கள். சந்தேகங்கள் இருந்தால் உடனே 1930 அழையுங்கள் அல்லது www.cybercrime.gov.in-ல் புகார் செய்யுங்கள். இதை மற்றவர்களுக்கும் ஷேர் பண்ணுங்க.

News September 30, 2025

நீலகிரி: பயணிகளுக்கு மகிழ்ச்சி செய்தி!

image

நீலகிரி: சிறப்பு மலை ரயில் அக்டோபர் 2,4,17,19 ஆகிய தேதிகளில் மேட்டுப்பாளையத்தில் இருந்தும் 3, 5, 18, 20 ஆகிய தேதிகளில் ஊட்டியில் இருந்து காலை 11.25 மணிக்கு புறப்பட்டு மாலை 4.20 மணிக்கு மேட்டுப்பாளையம் சென்றடையும். 2,3,4,5,18,19 தேதிகளில் குன்னூரில் இருந்து காலை 8.20 மணிக்கு புறப்பட்டு 9.40 மணிக்கு ஊட்டி வந்தடையும். ஊட்டியில் இருந்து மாலை 4.45 மணிக்கு புறப்பட்டு 5.55 மணிக்கு குன்னூர் சென்றடையும்.

error: Content is protected !!