Thenilgiris

News October 2, 2025

நீலகிரியில் முற்றிலும் இலவசம்!

image

நீலகிரி மக்களே.., தமிழக அரசின் ‘வெற்றி நிச்சயம்’ திட்டத்தின் கீழ் இலவச தையல் பயிற்சி நீலகிரியில் வழங்கப்படவுள்ளது. வருகிற அக்.9ஆம் தேதி தொடங்கவுள்ள இந்தப் பயிற்சிக்கு 205 காலியிடங்கள் உள்ளன. விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்க <>இங்கே<<>> கிளிக் பண்ணுங்க. இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News October 2, 2025

நீலகிரி: சளி, காய்ச்சலா? இத பண்ணுங்க!

image

நீலகிரி மாவட்டத்தில் கடந்த மாதம் இறுதி முதல் உள்ளூர் மக்களுக்கு காலநிலை மாற்றத்தால் சளி, இரும்பல் போன்ற பாதிப்புகள் ஏற்பட்டு வருகிறது. இதிலிருந்து காத்துக்கொள்ள குடிநீரை காய்ச்சிக் குடிப்பது, சூடான உணவுகளை உண்பது போன்ற பழக்கங்களை தொடர வேண்டும் எனவும் ஏதேனும் சிறிய பாதிப்பு ஏற்பட்டால் கூட உடனே பரிசோதனை செய்துகொள்ள வேண்டுமெனவும் அரசு மருத்துவமனை டீன் சரவணன் தெரிவித்துள்ளார். (SHARE IT)

News October 2, 2025

நீலகிரியில் ஒரே நாளில் இருவர் பலி!

image

நீலகிரி மலையில் வாழிடங்களையும் வலசைப்பாதைகளையும் இழந்து தவிக்கும் யானைகள் போக்கிடம் தெரியாமல் அலைகின்றன. இந்நிலையில், தொட்ட லிங்கி பகுதியைச் சேர்ந்த புட்டமாதன் என்பவர் அக்.30ஆம் தேதி உயிரிழந்தார். தொடர்ந்து, நெலாக்கோட்டை பஜாரில் இருந்து குடும்பத்துடன் ராக்வுட் எஸ்டேட்டிற்கு ஆட்டோவில் திரும்பிக் கொண்டிருந்த தொழிலாளி ராஜேஷ் என்பவரை யானை விரத்தி தாக்கியதில் பரிதாபமாக பலியானார்.

News October 2, 2025

நீலகிரிக்கு வருகை தந்த மகாத்மா காந்தி!

image

1934 ஜனவரி 29ம் தேதி நீலகிரி, குன்னூருக்கு வந்த மகாத்மா காந்தி, மவுண்ட் ப்ளஸன்ட்டில் உள்ள நாகேஸ்வர ராவின் ராமாஷ்ரமத்தில் விருந்தினராக தங்கினார். ஜன.31ம் தேதி முதல் பிப்.4ஆம் தேதி வரை அவர் நீலகிரியிலேயே தங்கியிருந்திருக்கிறார். பிப்ரவரி 2ஆம் தேதி, கோத்தகிரி, பிப்.4ஆம் தேதி ஊட்டி ஆகிய இடங்களில் உரையாற்றி உள்ளார். பிப்ரவரி 6-ஆம் தேதி காலை 7 மணிக்கு குன்னூரிலிருந்து திருப்பூருக்கு கிளம்பிவிட்டார்.

News October 1, 2025

நீலகிரி: சரக்கு வாகனம் கவிழ்ந்து விபத்து!

image

குன்னூர்-உதகை தேசிய நெடுஞ்சாலையில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் பயணிக்கும் நிலையில், கேத்தி பகுதியில் சரக்கு வாகனம் ஒன்று நிலைதடுமாறி கவிழ்ந்தது. இந்த விபத்து காரணமாக சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த போக்குவரத்து காவல்துறையினர், விபத்துக்குள்ளான வாகனத்தை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீர்செய்தனர். இதில் யாருக்கும் காயம் ஏற்டபவில்லை.

News October 1, 2025

நீலகிரி தெரிய வேண்டிய வாட்ஸ் ஆப் நம்பர்!

image

நீலகிரி மக்களே..பிறப்பு, இறப்பு சான்றிதழ் தொடர்பான சேவைகள், சொத்து வரி செலுத்துதல் , பொதுமக்கள் குறைதீர்க்கும் சேவைகள், என 32 வகையான சேவைகளுக்கு இனி எங்கும் அலைய வேண்டாம். உங்கள் பகுதிக்கான அனைத்து சேவைகளுக்கும் 9445061913 எனும் வாட்ஸ் ஆப் எண்ணிற்கு ஒரு ‘HI’ அல்லது ‘வணக்கம்’ மெசேஜை அனுப்பினால் போதும். இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News October 1, 2025

நீலகிரி: டாஸ்மாக் பார்கள் திறந்திருந்தார் புகாரளியுங்கள்!

image

நீலகிரியில் நாளை காந்தி ஜெயந்தியால், டாஸ்மாக் மதுகடைகள் மற்றும் பார்கள் திறந்திருப்பதாக பொதுமக்களுக்கு தகவல் தெரிந்தால், உடடினயாக புகார் தெரிவிக்கலாம். ஊட்டி கூடுதல் காவல் கண்காணிப்பாளர் மதுவிலக்கு மற்றும் அமலாக்கம், 0423 2223802; மாவட்ட உதவி ஆணையர் (ஆயம்) 0423 2443693; குன்னுார் எடப்பள்ளி டாஸ்மாக் மாவட்ட மேலாளர், 0423 2234211 ஆகிய எண்களில் தெரியப்படுத்தலாம். இதை மற்றவர்களுக்கு ஷேர் பண்ணுங்க.

News October 1, 2025

நீலகிரி: யானைகளிடம் இருந்து உயிர் தப்பிய சுற்றுலா பயணி

image

நீலகிரி மாவட்டம் முதுமலை எல்லையிலுள்ள பந்திப்பூர் புலிகள் காப்பகத்தில், சாலையில் சென்ற இரண்டு காட்டு யானைகள், ஒரு சுற்றுலா வாகனத்தை ஆக்ரோஷமாக விரட்டின. வாகனத்தை ஓட்டுநர் பின்னோக்கி இயக்கி உயிர் தப்பினார். சுற்றுலா பயணிகள் யானைகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் செயல்களில் ஈடுபடுவதே இதற்கு காரணம். வனப்பகுதிக்குள் அத்துமீற வேண்டாம் என்று வனத்துறை சார்பில் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

News October 1, 2025

உதகையில் காங்கிரஸ் மக்கள் கையெழுத்து இயக்கம்

image

உதகையில் பாஜக வாக்கு திருட்டுக்கு  எதிராக நீதி கேட்டு மக்கள் கையெழுத்து சேகரிக்கும் இயக்கம் நாளை சுதந்திர நினைவு திடல் பகுதியில்  2 தேதி காலை 9.30 மணியளவில்  நடைபெறுகிறது. இதில் 
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கு.செல்வப் பெருந்தகை  கலந்து கொண்டு கையெழுத்து சேகரிக்கும் இயக்கத்தை துவைக்கி வைக்க உள்ளார். இந்த தகவலை நீலகிரி மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவரும் எம்எல்ஏவுமான ஆர் கணேஷ் தெரிவித்தார்.

News October 1, 2025

நீலகிரி: கேஸ் மானியம் ரூ.300 பெறுவது எப்படி?

image

கேஸ் மானியம் ₹300 வங்கிக் கணக்கில் நேரடியாக வர, எல்பிஜி இணைப்பை ஆதார் அட்டையுடன் இணைக்க வேண்டும். உங்கள் கேஸ் வழங்குநரின் (Indane, HP, Bharat) இணையதளத்திற்குச் சென்று, ‘Link Aadhaar’ விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும். நுகர்வோர் எண், மொபைல் எண், ஆதார் ஆகிய விவரங்களை உள்ளிட்டு, OTP மூலம் இணைப்பை உறுதி செய்யலாம். இதன் மூலம் வீட்டில் இருந்தபடியே மானியத்தைப் பெறலாம். இதை மற்றவர்களுக்கு SHARE பண்ணுங்க.

error: Content is protected !!