India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நீலகிரி மாவட்டம் முழுவதும் யானைகளின் அட்டகாசம் அதிகரித்து வரும் நிலை உள்ளது. மசினகுடி பகுதியில் சுமை தூக்கும் தொழிலாளியாக பணியாற்றி வருகிறார் நடராஜன். அவர் இன்று மாலை புகழ்பெற்ற பொக்காபுரம் கோவிலுக்கு சென்று திரும்பி வரும் வழியில் யானை தாக்கியது. எனவே அவர் சம்பவ இடத்திலேயே மரணமடைந்தார். இந்த விபத்து குறித்து வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பந்தலூர் அருகே சேரங்கோடு ஊராட்சி அலுவலகம் உள்ளது. இந்த ஊராட்சியில் பல பணிகளுக்கு கமிஷன் பெற்றுக்கொண்டு பணி ஒதுக்கியதால் தரமற்ற பணிகள் நடைபெற்றுள்ளதாக பொதுமக்களின் புகாரினை தொடர்ந்து, நேற்றைய தினம் இரவு விஜிலென்ஸ் அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது கணக்கில் வராத ரூ.3,25 லட்சம் கண்டுபிடிக்கப்பட்டதால். ஊராட்சி செயலாளர் சஜித், தலைவர் லில்லி இலியாஸ் (ம) ஊழியர்களுடன் விசாரணை நடத்தினார்கள்.
தமிழ்நாட்டில் வரும் 17ஆம் தேதி மிலாது நபி பண்டிகை கொண்டாடப்படுகிறது. இது குறித்து நீலகிரி மாவட்ட கலெக்டர் லட்சுமி பவ்யா வெளியிட்டுள்ள அறிக்கையில், மீலாது நபி பண்டிகையன்று டாஸ்மாக் மதுக்கடைகள், பார்கள், ஹோட்டலுடன் இணைந்த பார்களுக்கு விடுமுறை அளிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. விதியை மீறினால் டாஸ்மாக் மேலாளர், காவல்துறை, மாவட்ட நிர்வாகத்திடம் புகார் அளிக்கலாம் என தெரிவித்துள்ளார்.
மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் நேற்று குன்னூரில் செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘தமிழக முதல்வர் முதலீடுகளை ஈர்ப்பதாக வெளிநாடு சென்று வருவது எல்லாம் கண்துடைப்பு நாடகம். துபாய் சென்று சென்று முதலீடு ஈர்த்ததாக கூறியதற்கே இன்னும் விடை தெரியவில்லை’ என்றார். அப்போது பாஜக மாவட்ட தலைவர் மோகன்ராஜ் உடனிருந்தார்.
நீலகிரி மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் சைபர் குற்றங்கள் பற்றி போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், எல்ஐசி ஏஜெண்டுகள் போல பேசி பணம் பறிக்கும் பொய்யான கும்பலிடம் தங்களது ஏடிஎம் கார்டு நம்பரையோ, ஓடிபி நம்பரையோ கூற வேண்டாம். இதை நம்பி ஏமாற வேண்டாம். மேலும், யாராவது பாதிக்கப்பட்டு இருந்தால், உடனே சைபர் கிரைம் போலீசாரிடம் தகவல் தெரிவிக்கவும்.
நீலகிரி மாவட்டத்தில் பாரதிய ஜனதா கட்சியின் உறுப்பினர் சேர்கை பணி தீவிரமாக நடைப்பெற்று வருகிறது. இந்நிலையில் மத்திய செய்தி ஒலிபரப்பு துறை மந்திரி எல்.முருகன் நேற்று குன்னூர் பகுதியில் வீடுவீடாக சென்று மக்களை நேரில் சந்தித்து பாஜக உறுப்பினராக சேர்த்தார். அவருடன் நீலகிரி மாவட்ட பாஜக தலைவர் மோகன்ராஜ் இருந்தார்.
தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி (ம) மேம்பாட்டு கழகம் தாட்கோ சார்பில் பழங்குடியின மாணவர்கள் தேர்வு செய்யபட்டு அவர்களுக்கு இலவசமாக யுபிஎஸ்சி தேர்வுக்கு பயிற்சி அளிக்க உள்ளது. பயிற்சி ஒரு வருடம், விடுதியில் தங்கி படிக்க வசதியும், பயிற்சி செலவீனதொகை தாட்கோ மூலம் வழங்கப்படும். இதற்கு https://tahdco.com/ என்ற இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளுமாறு கலெக்டர் லட்சுமி பவ்யா தண்ணீரு தெரிவித்துள்ளார்.
பந்தலூரை சேர்ந்த பெண்ணிற்கு போன், மெசேஜ் வந்ததை அறிந்த தந்தை, மெசேஜ் அனுப்பினவரை தொடர்பு கொண்டு கண்டித்துள்ளார். இதில் ஆத்திரம் அடைந்த இளைஞர் நேரில் வந்து தந்தை, தாய் ஆகிய 2 பேரை கத்தியால் குத்தி தாக்கி உள்ளார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த சேரம்பாடி போலீசார் தலைமறைவாக இருந்த வின்சன்ட் (23), ஜீவா (23) ஆகியோர்களை நேற்று கைது செய்தனர்.
உதகை மலைப்பகுதி மேம்பாட்டுத்திட்ட திறந்தவெளி விளையாட்டு அரங்கில், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் முதலமைச்சர் கோப்பை – 2024 மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகள் இன்று தொடங்கியது. சுற்றுலாத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் கால்பந்து போட்டியை தொடங்கி வைத்தார். மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தண்ணீரூ , நகரமன்ற துணை தலைவர் ரவிக்குமார் மற்றும் அலுவலர்கள் உடன் இருந்தனர்.
நீலகிரி, உதகை தலைகுந்தா அருகே உள்ள காமராஜர் அணை தனது முழு கொள்ளளவான 118 அடியை எட்டியுள்ளது. கடந்த சில நாட்களாக அணையின் நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையின் காரணமாக தற்போது அணை முழுவதுமாக நிரம்பியுள்ளது. முதுமலை வனவிலங்கு சரணாலய விலங்குகளின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதில் முக்கிய பங்கு வகிக்கிறது காமராஜர் அணை என்பது குறிப்பிடத்தக்கது.
Sorry, no posts matched your criteria.